Skærmbillede 1408சண்முகலிங்கம் தேவமுகுந்தன்
ஆசிரியர்

"பனிப்போர் காலம் முடிவடைந்தது உலகம் ஒரு ஒழுங்கில் அமெரிக்கா தலைமையில் பயணிக்க ஆரம்பிக்கின்றது. இந்த ஏகாதிபத்தியம் தனக்கு விசுவாசம் உள்ள கல்விமுறையினை உருவாக்க வைக்க முனைந்தது. அத்துடன் பூகோளமயமாதலும் அதற்கு உதவியாக அமைந்து விட்டது. மூன்றாம் உலக நாடுகளின் ஸ்திரமற்ற அரசியல், வறுமை, காலனித்துவ சிந்தனை போக்கு வலுவாக அமைந்தது விட்டது."

இலங்கையின் கல்வி பற்றிய சுருக்க வரலாறு.

இலங்கை நீண்ட காலமாக காலனித்துவ ஆட்சிக்கு உட்பட்ட ஐரோப்பியர்களின் கல்வி முறையும் அடிமைத்தனமும் கொண்ட கல்வி முறையாக விளக்கியது. இப்போதும் அது புரையோடிப்போய் உள்ளது. 1947 கன்னங்கராவின் முயற்சியால் இவசக்கல்வி அறிமுகம்,1958 தாய்மொழி கல்வி அமுலாக்கம்,  1960ல் சகல பாடசாலைகளும் அரசு பொறுப்பேர்க்கிறது , 70ல் கலைத்திட்ட சீராக்கத்தினை அடிப்படையாகக்கொண்டு நடைபெறுகின்றது அது பின்னர் போதிய வளங்கள் அரசியல் காரணங்களால் தோற்று போகின்றது. 1980ல் கல்வி வெள்ளை அறிக்கை வெளியிடப்படுகின்றது அதில் கொத்தணி பாடசாலை அறிமுகமாகின்றது அது ஒரு அதிகாரப்பகிர்வாக கொள்ள முடியும். 1986ல் தேசியக்கல்வி நிர்வாகம் ஜப்பான் நிதியுதவியுடன் நிறுவப்படுகின்றது அத்துடன் ஆசிரியர்களை பயிற்றுவிக்க தேசிய கல்வியால் கல்லூரி நிறுவப்படுகின்றது. 1987ல் 13 திருத்த சட;டத்தின் மூலம் மாகாணங்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்க படுகின்றது,  தேசிய கல்வி ஆணைக்குழு 1991 உருவாகின்றது, 1991க்கு முன்னரும் தேசிய கல்வி ஆணைக்குழு அமைக்க பட்டாலும் 1991 முதல்தான் நிரந்தரமாக அது நிறுவப்படுகின்றது.

பனிப்போர் காலம் முடிவடைந்தது உலகம் ஒரு ஒழுங்கில் அமெரிக்கா தலைமையில் பயணிக்க ஆரம்பிக்கின்றது. இந்த ஏகாதிபத்தியம் தனக்கு விசுவாசம் உள்ள கல்விமுறையினை உருவாக்க வைக்க முனைந்தது. அத்துடன் பூகோளமயமாதலும் அதற்கு உதவியாக அமைந்து விட்டது. மூன்றாம் உலக நாடுகளின் ஸ்திரமற்ற அரசியல், வறுமை, காலனித்துவ சிந்தனை போக்கு வலுவாக அமைந்தது விட்டது.

ஆசிய அபிவிருத்தி வங்கிஇ உலக வங்கி என்பன இலங்கையின் கல்வி கொள்கையில் நேரடியான முழுமையான பங்களிப்பினை செய்கின்ற வங்கிகள் ஆகும்.

ஒரு நாடு வாய்ப்புகள் அபிலாசைகளுக்குட்பட்ட கல்விசார் நோக்கங்களை அடைவதற்கு ஏற்ற நடவடிக்கைகள் பற்றி ஒழுங்கு முறையான வரைபே திட்டமிடலாகும்.(யுனெஸ்கோ). கல்வி தொடர்பாக கற்றல் தொடர்பாக எதை? எந்தளவில்? எப்போது? எப்படி? யாருக்கு? வழங்க வேண்டும் எத்தகைய விளைவுகள் ஏற்பட வேண்டும் என்ற தீர்மானங்கள் எடுப்பதற்குரிய அடிசட்டங்களை வழங்குவதே கல்வித்திட்டமிடலாகும்.

கல்வித்திதிட்டமிடலின் முக்கிய அம்சங்கள்.

தூர நோக்கு

கல்வித்திட்மிடல் மூன்று வகைப்படும்

குறுந்தவணை 1 அல்லது 2 வருடங்கள்

நடுத்தவணை 4 அல்லது 5 வருடங்கள்

நீண்ட தவணை 10 அல்லது 15 வருடங்கள்

அகல்விரி பண்பு -

ஒருங்கிணைப்பு தன்மை

கல்வி முகாமைத்துவத்துடன் இணைந்த பண்புநிலை அம்சங்கள் கல்வித் திட்டமிடலில் கல்விக் கொள்கையின் வகிபாகம்

கொள்கை என்பது ஒரு துறையில் தீர்மானங்களை எடுப்பதற்கு அடிப்படையாக அமையும் பல தீர்மானங்களின் தொகுப்பு எனவும் அடிப்படைத் தீர்மானம் அல்லது பெரிய தீர்மானம் எனவும் அழைக்கப்படும். ஒரு துறையில் அல்லது ஒழுங்கமைப்பின் பல்வேறு மட்டங்களில் தீர்மானங்கள்எடுக்கும் போது கொள்கையே வழிகாட்டியாக அமையும். மேலும் கொள்கையானது தீர்மானம் எடுத்தலுக்கான சட்டகம் ஒன்றையோ வரையறை ஒன்றையோ வழங்கக்கூடியது. திட்டமிடலுடன் கொள்கை என்பது எவ்வாறு தொடர்புபடுகின்றது என்று பார்க்கும் போது கல்விசெயற்பாடுகளை எவ்வாறு எப்போது செய்வது கல்வியின் நோக்கங்கள் யாவை என்பதை தீர்மானித்தல் கல்விக் கொள்கையின் அடிப்படையிலாகும்.( aarumugam, p)

இலங்கையின் கல்விக் கொள்கை ஆரம்ப வகுப்பு முதல் பல்கலைக் கழக முதற் பட்டம் வரை கல்வியைஇலவசமாக வழங்குதல்,ஆரம்பக் கல்வியை கட்டாயமாக தாய் மொழியில் வழங்குதல்,  தரமான கல்விவழங்குதல் போன்றவற்றை உதாரணமாக குறிப்பிடலாம். எவ்வாறாயினும் கல்விக் கொள்கை காலத்திற்குகாலம் மாற்றங்களுக்கு உட்படுத்தப்படலாம;.

இலங்கையில் கல்விக் கொள்கையாக்கத்தில் தேசிய கல்வி ஆணைக்குழுவின் வகிபாகம்

இலங்கையில் தேசிய கல்வி ஆணைக்குழு 1991ம் ஆண்டு 19 இலக்கச் சட்டம் முறையாக இலங்கை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதாக 1991 ஏப்ரல் 19ந்திகதி சான்றுபடுத்தப்பட்டது.இந்தச் சட்டத்தின்படி நாட்டின் தேசிய கல்விக்கொள்கை பின்வரும் விடயங்களை உள்ளடக்கியது. கல்வி இலக்குகள் குறிக்கோள்கள், கல்விமுறைமையின் கட்டமைவு- முன் பள்ளி, ஆரம்பக் கல்வி, இடைநிலை,  மூன்றாம்நிலைக்கல்வி,  உயர்கல்வி,  முறைசாரா,  முறையில், வளர்ந்தோர் கல்வி, விசேட கல்வி, வாண்மைத்துவம்,  சமயக் கல்வி,  கல்வித் தாபனங்களின் அமைவிடம், பரவல், மாணவர் அனுமதிக்கானதும் ஆசிரியர் நியமனத்திற்கானதும் நியதிகள் கல்வியின் உள்ளடக்கம். ஊடக மொழி, கலைத்திட்டத்தின் பன்முகத்தன்மை பாடநூல்கள் கற்றல்-கற்பித்தல் உபகரணங்கள் பாடசாலையில் சமயவிழாக்கள் அனுஸ்டானம், கல்வியில் மதிப்பீடு, கணிப்பீடு மற்றும் பரீட்சை முறைமைகள் சான்றிதழ்கள், டிப்ளோமாக்கள்,  பட்டங்கள், விருதுகள் அதற்கான நியதிகள் கல்விச் சேவையாளர் நியமனம்,  பதவியிலிருத்தல் ஒழுங்கு நடவடிக்கைகள், மேற்பார்வைஇ நிர்வாகம்,  கல்விக்கான மூலவளம் இசமூதாய பங்குபற்றல், கல்விக்கான உதவு சேவைகள், ளையாட்டு போன்றன அடங்கும். 

1990 களில் யுனெஸ்கோவினால் எல்லோருக்குக்கும் கல்வி என்ற கோட்ப்பாடு பரிந்துரைக்கப்படுகின்றது. இது இலங்கையும் பூகோளமயமாதலுக்கு உட்பட்டது என்ற அடிப்படையில் அந்த வட்டத்திற்கு இலங்கையும் வருகின்றது. எல்லோருக்கும் கல்வி என்பதனை இலங்கை சட்ட ரீதியாக நடைமுறைப்படுத்த தயாராகின்றது. அதற்கு உந்து சக்தியாக தேசிய கல்வி ஆணைக்குழு விளங்கியது. முதலாவதாக உலக கல்விக்கோட்பட்டுடன் யுனெஸ்கோவின் கல்வி இலக்குடன் இலங்கையும் பயணிக்க ஆரம்பித்தது எனலாம். ஜோமிட்டேன் மகாநாடு 1990ல் எல்லோருக்கும் கல்வி என்ற செயற்திட;டத்தினை முன்மொழிந்தது. அதற்கான இலக்குகளும் நிர்ணயிக்கப்பட்டன. அதனை இலங்கையிலும் நடைமுறைப்படுத்த உலகவங்கி அதற்கான நிதி பங்களிப்பை வழங்கியது. இந்த பின்னணியில்தான் 1997ம் ஆண்டு கலைத்திட்ட சீராக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆரம்பக்கல்வியில் முதன்மைநிலை 1இ 2இ 3.அறிமுகம், மாணவர் ஆலோசனைச்சேவை,  தேர்ச்சிமைய கலைத்திட;டம் என்று பலவற்றை நடைமுறைப்படுத்த உதவியது. 1998ம் பாடசாலைமட;ட கணிப்பீடு,  கட்டாயக்கல்வி, கட்டாய கல்வி கற்கும் வயதெல்லை நிர்ணயம். எல்லாம் சர்வதேச கல்வி இலக்குகளின் செல்வாக்கு உட்பட்டதே. 2000 ம் ஆண்டு டெக்கர் மாநாடும் எல்லோருக்கும் கல்வியை மேலும் மெருகூட்டி ஜோமிட்டேன் இருந்து ஒருபடி மேலே சென்று இலக்குகளை முன்வைத்தது.

எல்லோருக்கு கல்வி என்ற நிலையிலிருந்து எல்லோருக்கும் தரமான கல்வி என்ற யுனெஸ்கோவின் இலக்கு மாற்றம் அடைகின்றது அந்த இலக்கு இலங்கையும் பின்பற்றுவதற்கு தேவையான உதவிகளை உலகவங்கியும் சர்வதேச நிறுவனங்களும் இலங்கைக்கு உதவ முன்வருகின்றது. அதற்காக ESDFP Education Sector Development Framework and Programme இவ் இவ் செயற்திட;டத்தின் உலகவங்கி நிதி உதவியுடன் மாணவர்களின் பண்புத்தரவிருத்தியை விருத்தி செய்வதற்காக உருவாக்கப்பட்டது .

Improving equitable access to basic and secondary education;

Improving the quality of basic and secondary education;

Enhancing the economic efficiency

Quality of resource allocation; and strengthening service delivery.

எந்தஒரு செயற்படும் வினைத்திறனாவும் விளைதிறனாகவும் இருக்க வேண்டும் என்றால் முகாமைத்துவம் சிறக்கப்பட வேண்டும் அந்த அடிப்படையில் பாடசாலைமட;ட முகாமைத்துவம் ஊடhக பல படைப்பhக்கங்களை உருவாக்க முடியும் என்பதற்காக பின்வரும் செயற்திட்டங்கள் செயட்படுத்தப்பட;டன.

The Programme for School Improvement (PSI)

The Programme for School Improvement (PSI) இவை பாடசாலையின் பண்புத்தரத்தை உயர்த்துவதற்காக உலகவங்கியின் உதவpயுடன் நிறைவேற்றப்பட;டவை.

‘’National Policy on Social Cohesion and Peace Education’’ இவ் செயற்திட்டம்  தேசிய நல்லிணக்கம் என்ற போர்வையில் நடைமுறைப்படுத்தப்பட்டது. சமாதானம்இ சகவாழ்வு, ஜனநாயகம் அமைதி வன்முறை அற்றதன்மை அடக்குமுறை இ வேறுபாடு அற்ற சமூகம் போன்ற எண்ணக்கருக்கள் மேலைத்தேசத்தில் பேசப்படும் எண்ணக்கருக்கள் பின்வருவன ஊடாக நடைமுறை படுத்தப்பட்டன Curriculum, Teacher Education, Second National Language, Whole School Culture, Integration, Co-curriculum, and Research. (Financial support by GTZ)

2012 தொடக்கம் 2016 வரையான காலப்பகுதிக்குள் இலங்கை அரசினால; பொதுக்கல்விக்கான தேசிய கல்வி உபhய திட;டமிடல் தயாரிப்புகளுக்கு உலக வாங்கி நிதியுதவியை அளித்தது. .’’அறிவினை அடிப்படையாகக்கொண்ட பொருளாதாரத்திற்கு மாறும் மற்றும் சமூகத்திற்கு தேவையான மனிதமூலதனத்தை அடிப்படையாகக்கொண்ட இலங்கை பாடசாலை முறையினை தயார்படுத்தலாகும்’’.

யுனெஸ்கோவினால் தற்போது முன்மொழியப்படும் கல்விக் கோட்ப்பாடுகளாக பேண்தகு அபிவிருத்திக்கான கல்வி. புத்தாயிரமாண்டு கல்விகுறிக்கோள்கள் என்பனவற்றை அடிப்படையாகக்கொண்டு இலங்கையின் கல்வி திட;டமிடலும் கொள்கையும் நகர்ந்து கொண்டு இருக்கின்றது.

புத்தயிரமாம் ஆண்டு அபிவிருத்தி இலக்குகள் 2000ஆம் ஆண்டில்இ தீவிர வறுமையை ஒழிப்பதற்கானபுதிய உலகளாவிய பங்காளித்துவம் மற்றும்2015ஆம் ஆண்டை இலக்காகக் கொண்ட பல்வேறுதிட்டங்களுக்கு இணக்கம் தெரிவிக்கும் வகையில்புத்தாயிரமாம் ஆண்டு பிரகடனத்தில் 188 நாடுகளுடன் இணைந்து இலங்கையும் கைச்சாத்திட்டது. இவைபுத்தாயிரமாம் ஆண்டு அபிவிருத்தி இலக்குகள் என அழைக்கப்படுகின்றன.இனை எட்டுவதில் இலங்கை வெளிப்படுத்தியுள்ள. தேர்ச்சி மற்றும் அடைவுகளை இந்த வெளியீடுசுட்டிக்காட்டுகின்றது.

(Millennium Development Goals Sri Lanka’s Progress and Key Achievements)

THE 17 GOAL ARE(1) No Poverty, (2) Zero Hunger, (3) Good Health and Well-being, (4) Quality Education, (5) Gender Equality, (6) Clean Water and Sanitation, (7) Affordable and Clean Energy, (8) Decent Work and Economic Growth, (9) Industry, Innovation and Infrastructure, (10) Reduced Inequality, (11) Sustainable Cities and Communities, (12) Responsible Consumption and Production, (13) Climate Action, (14) Life Below Water, (15) Life On Land, (16) Peace, Justice, and Strong Institutions, (17) Partnerships for the Goals.

விஞ்ஞான தொழில் நுட்ப கல்வியின் அவசியம் உணரப்பட்டு விஞ்ஞான தொழில்நுட்பம் கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்காக தொழில்நுட்ப ஆய்வு கூடங்கள் நிறுவப்பட்டன. இதன் மூலம் தொழில்நுட்பவியால் கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு காணப்பட்டது. 2023 கலைத்திட்ட மாற்றம் முழுமையாக தொழில் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட கலைத்திட்டம். சகல பாடங்களும் நவீன தொழில் நுட்ப சாதனங்களைக் அடிப்படையாகக்கொண்டு கற்பிக்கப்படுவதற்கான ஆரம்ப கட்டிட வேலைகள் முடிவந்து விட்டது.

மேலும் ஆசிரியர்களின் தொழில் வாண்மை விருத்தி பற்றி தீர்க்கமான இறுக்கமான சிந்தனை மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆரம்ப பிரிவு கற்பிக்கும் ஆசிரியர்கள் சகலரும் பயிற்றப் பட்டிருக்க வேண்டும் என்பதுடன் தொடர் வாண்மைத்துவத்தையும் இற்றைப் படுத்தலையும் கொண்டிருக்க வேண்டும். கல்வியியல் கல்லாரிக்கான முழுமையான நிதிஉதவியை உலக வாங்கியே அளித்து வருகின்றது.

முடிவுரை

இலங்கைக்கு உதவி அளிக்கும் சர்தேச நிறுவனங்களும் வங்கிகளும் நிபந்தனை அடிப்படையhகக் கொண்டே உதவி அளிக்கின்றன. அவர்களின் அழுத்தம் கலைத்திட;டத்திலும் ஆசிரியர் அபிவிருத்தியிலும் வருவது தவிர்க்க முடியாது. ஆரம்பக்கல்வியிலும் இரண்டாம் மற்றும் உயர் தரக்கல்வியிலும் அவர்களின் ஆலோசனையின் பேரிலே மாற்றங்கள் நடைபெறுகின்றன சிலவேளை சிலநிபந்தனைகாளை ஏற்கமுடியாது உ- ம் வரலாறு மற்றும் சமய பாடங்கள் தேவையற்றவை. உலக வங்கி நீண்டகாலம் வலியுறுத்தி வருகின்ற விடயம் பல்கலைக்கழகங்களை தனியார் மயப்படுத்துவது. இலங்கையை பொறுத்த வரையில் அது சாத்திய மற்றது. ஆனல் அதற்கு பதிலாக பல தனியார் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு அதற்கு கடன் பெற்றுக்கொள்ளலாம் இது உலக வங்கியை திருப்த்தி செய்யப்பட்ட நடவடிக்கை. உலக நடைமுறைகள் மாற்றங்கள் கொள்கைகள் கோட்ப்பாடுகள் ஏதோ ஒரு வகையில் செல்வாக்கு செலுத்தும் ஏனெனில் உலகம் கிராமமாக சுருங்கி விட்டது. தொழில் நுட்ப சாதனைகளின் அதிகரிப்பு மக்களிடையே தொடர்பாடலை அதிகரித்தது. உலகம் கைக்குள் வந்துவிட்டது. கல்வியில் உலகத்தோடு போட்டிக்கு ஓடாவிட்டாலும் ஓடி முடிக்க வேண்டும்.

References

Little, W. (2010).The Politics, Policies and Progress of Basic Education in Sri Lanka: Create pathways to access Research Monograph No. 38June 2010.

Little, W. education for all: Policy and Planning, Lessons from Sri Lanka.

National policy and comprehensive framework of actions on education for social cohesion and peace (escp: Social Cohesion and Peace Education Unit Ministry of Education 2008.

முன்பள்ளிக் கல்வி பற்றிய தேசிய கொள்கை: தேசிய கல்விஆணைக்குழுஇலங்கை2019.

An Impact Evaluation of Sri Lanka’s Policies to Promote the Academic Performance of Primary School Students through School Improvement and Report Card Programs: May 2011 south Asian human development section Report No 35 South Asia: Human Development Unit.

Santhirasekaran, S. and sinnaththampy, M. (2006). Education planning: theory and new development, second edition.

Millennium Development Goals: Sri Lanka’s Progress and Key Achievements.

Aarumugam, P. Educational management: national institute of education.

கட்டுரைகள்

சிகிரியா ஒரு பழங்கால மலை பாழடைந்த கோட்டையாகும், இது ஒரு அரண்மனையின் எச்சங்களுடன் அமைந்துள்ளது மத்திய பகுதிஇலங்கையில் மாத்தளை. இந்த அற்புதமான கல் கோட்டை தோட்டங்கள், குளங்கள் மற்றும் பிற...

கிருஷ்ணபிள்ளை புண்ணியமூர்த்தி  "கல்வி சார் பாடங்கள், தொழில்சார் பாடங்கள், பொதுவான பாடங்கள், இணைப்பாட விதானங்களினூடாக ஒரு சுயசெயல்திறன் நம்பிக்கையுள்ள ஆசிரியரை உருவாக்குவதற்கான அனைத்து...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் நுண் அறிவு என்பது புரிந்து கொள்ளும் திறன், தொடர்பு கொள்ளும்திறன், கருத்தியல் சிந்தனை திறன் போன்ற திறன்களின் தொகுப்பாகும். நுண் அறிவின் அளவை உளவியல் வல்லுனர்கள் நுண் அறிவு...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் "ஆக்கம், விரிசிந்தனை, தற்துணிவு, தீர்மானம் எடுத்தல், பிரச்சினை விடுவி;த்தல், நுணுக்கம் மற்றும் பகுப்பாய்வு சிந்தனை, அணியினராக வேலை செய்தல், தனியாள் இடைவினைத் தொடர்புகள்,...

கல்வி என்பதற்குப் பொதுவான பல வரையறைகள் உள்ளன. எல்லா வரையறைகளும் பொதுவான ஒரு கருத்து, நடத்தையில் விரும்பத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்துவதுதான் கல்வி. கல்வி என்பது வெறும் அறிவு மட்டுமல்ல, பண்புகள்,...

ஜப்பானிய ஆரம்பக்கல்வி உலகப்புகழ் வாய்ந்தது; அதற்கு ஒரு காரணம் அந்நாட்டின் கல்வி முறையில் காணப்படும் சமத்துவ அம்சம். ஆற்றல்களின் அடிப்படையில் மாணவர்களைப் பிரித்து வைத்துக் கற்பிக்கும் முறைமை...

"வரலாற்றுச் செயற்பாடுகள் என்பன வெறும் சம்பவங்களல்ல. அவற்றுக்கு ஓர் உட்புறம், அதாவது ஒரு சிந்தனைப் புறம் உள்ளது." ஆர். சி. கொலிங்வூட்வரலாற்றியலறிஞர். பெரிதும் விவாதிக்கப்பட்டுள்ள இந்த மேற்கோள்...

- கார்த்திகேசு சிவத்தம்பி -  யாழ்ப்பாணத்தின் பண்பாட்டு அமிசங்களில் கண்டதுண்டு, கேட்டதில்லை" யாகவுள்ளனவற்றுள் ஒன்று, யாழ்பாணச் சமூகத்தின் யதார்த்தபூர்வமான சித்திரிப்பு ஆகும். நம் கண்முன்னே...

வாழ்க்கைமுறை

Kaviraj BSc Hons in Nursing டெங்கு காய்ச்சல் இலங்கை மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஆட்கொல்லி நோயாகும். நோய்க்காரணிஆர்போ வைரஸ்களால் தொற்றுக்குள்ளான ஈடிஸ் உணவு வகைகளால் காணப்படும் நோயாகும்...

ஒரு கிலோ பசும் சாணத்தில் இருந்து ஒரு கன அடி சாண எரிவாயு உற்பத்தி செய்யலாம். ** ஒரு மாடு தினசரி 10 கிலோ சாணம் இடும் எனில் , 10 மாடுகள் இடும் சாணம்,...

-தமிழ்- " நீங்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் காரணமாக உங்கள் மீதும் கரி பூசப்படலாம்; நீங்கள் கீழே போட்டு மிதிக்கப்படலாம் அல்லது அடித்து நொறுக்கப்படலாம். இந்த மாதிரியான நிலைமைகளில் நீங்கள் உங்களைப்...

- தமிழ் - "சம்பளம் உங்களுக்கு உதவலாம். ஆனால் இலாபம் உங்களுக்கு உயர்ந்த அதிர்ஷ்டம் நல்கும்" சீனாவின் பெரிய செல்வந்தர் ஜாக் மா வின் கூற்றின்படி குரங்கிற்கு முன்பாக பணத்தையும் வாழைப்பழத்தையும்...

தடங்கள்

வி.அனோஜன் "நேரம் என்பது இவரது வாழ்வின் முக்கிய உயிர்நாடி. பாடசாலை என்றாலும் சரி ஆலயம் என்றாலும் சரி ஊரின் சமூகசேவை விடயங்கள் என்றாலும் சரி கடிகாரத்தின் முட்களை விட வேகமாகச்சுழன்று முன்வரிசையில்...

ச. தேவமுகுந்தன் ஆறுமுகம் சரஸ்வதி தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாக உதித்தவர் திருமுருகன். தாயும் தந்தையும் ஆசிரியர்கள் என்பதோடு சைவ பாரம்பரிய குடும்ப பின்னணியையும் கொண்டவர்கள், அன்பும் பண்பும்...

18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் – 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர்....

- மதுசூதனன் தெ. -  பத்தொன்பதாம் நூற்றாண்டிலே மகா வித்துவான்கள், புலவர்கள், கணக்காயர்கள், கவிராயர்கள் போன்றோர்கூடப் பழந்தமிழ் நூல்கள் பற்றிப் பெருமளவு அறியாமையில் மூழ்கிக் கிடந்தனர்....

சினிமா

சினிமா

ஐம்பது வயது நந்து (பார்த்திபன்) ஒரு சினிமா ஃபைனான்சியர். அவரிடம் வட்டிக்குப் பணம் வாங்கி படமெடுத்த இயக்குநர், அதைத் திருப்பிக் கொடுக்க முடியாததால் மனைவியுடன் தற்கொலை செய்துகொள்கிறார். அந்த மரணம்,...

சினிமா

பொறியியல் படிப்பை கஷ்டப்பட்டு முடித்த கார்த்திக்கிற்கு (ஹரீஷ் கல்யாண்) திருமணம் செய்துவைக்க பெற்றோர் முடிவெடுத்து, பெண் பார்க்கப் போகிறார்கள். ஆனால், தவறான வீட்டிற்குப் போய்விடுகிறார்கள்....

சினிமா

இந்த உலகம் இயங்குவதே பற்றுதலால் தான். ஏதோவொன்றின் மீது நாம் கொண்டிருக்கும் பற்றுதான் நம்மை, அதை நோக்கி இழுத்துச் செல்கிறது. பிடித்தோ பிடிக்காமலோ, எல்லாவற்றையும் மீறி நம்மை அதன்மீது பற்றி அழுந்தச்...

சினிமா

சினிமா என்பது பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி சமூகத்துக்குப் பல விஷயங்களைப் போதிக்கும் தளமாகவும் இருக்கிறது. அதனால் அடுத்த 18 நாட்களும் உலக அரங்கில் வெளிவந்த வைரஸ் தொற்று பற்றிய தரமான உலக சினிமாவைப்...

ஆன்மீகம்

நயினா தீவு நாகபூசணி அம்மன் கோயில் இலங்கை, யாழ்ப்பாண மாவட்டத்தில், நயினா தீவில் உள்ள ஒரு புகழ் பெற்ற இந்து கோயில் ஆகும். நயினாதீவு பல்வேறு வகையிலும் சிறப்புப்பெற்ற தீவாகக் காணப்படுகின்றது....

உளவியல்

திரு. ச. அல்பேட் றீகன்BA Psy. (UJA), MSc HRD Psy. (Madras), PGD Edu. (OUSL). “உள ஆற்றுப்படுத்துனர் தன்னை நாடிவரும் உளநலநாடுநருடன் குணமாக்கல் உறவில் ஈடுபட்டு அவர் தன் தேவைகளை பொருத்தமாக பூர்த்தி...

சபா.ஜெயராசா ஓய்வுநிலை பேராசிரியர் சீர்மியம் அல்லது உளவளத்துணை என்பதை மேலைத்தேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட செயல்வவமாக காட்டும் முயற்சியைப் பல்கலைக்கழகங்களில் உள்ளவர்களும், தொண்டு...

புத்தகங்கள்

நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை உருவாக்குவது மட்டும் அல்ல ஒரு பள்ளியின் கடமை. விளையாட்டு வீரனை, நல்ல படைப்பாளியை, நல்ல பேச்சாளனை, நல்ல கவிஞனை, நல்ல நடிகனை, நல்ல சமூகப் போராளியை, நல்ல தலைவனை...

- அலெக்ஸ் பரந்தாமன்- ஈழத்து எழுத்தாளர் மா.சிவசோதி அவர்களின் இரண்டாவது சிறுகதைத்தொகுப்பும் மூன்றாவது வெளியீடுமாக பொதுவெளிக்கு வந்துள்ளது. ஜீவநதி வெளியீடாக 104 பக்கங்களுடன், 350/= விலையைத் தாங்கி...

குழந்தை ம.சண்முகலிங்கம்  அரங்கியல் பற்றிய அறிவுத்தேடல் அவசியப்பட்டுக் கொண்டு செல்லும் இக்காலக்கட்டத்தில் ''அரங்கியல்" என்று தலைப்பிடப்பட்ட இத்தொகுப்பு முக்கியமானதொரு படைப்பாக அமையும் எனக்...

தமிழ்த்தத்துவங்கள்

{youTube}/1qJxh6BaI74{/youtube}நான் பணக்கார அப்பாவின் பிள்ளை அல்ல. படிப்பிலும் அவ்வளவு சுட்டி இல்லை. மூன்றுமுறை பல்கலைக்கழக தேர்வில் தோல்வி அடைந்திருக்கிறேன். 10 முறை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சேர...

1. போர் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல், அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத போர். —மா சே துங 2. துப்பாக்கியைக் கொண்டே உலகமுழுவதையும் திருத்தி அமைக்கலாம் என்று நம்மால் சொல்ல முடியும். போரைக் கொண்டே போரை...

X

Right Click

No right click