Skærmbillede 645                                             -மீராபாரதி-

                                              பெண்கள்: பன்முக அடையாளங்களும் அதிகாரமும்

வரலாற்றில் பெண்கள் மீதான அதிகாரம் என்பது எப்பொழுது தனியுடமை உருவானதோ அப்பொழுதில் இருந்தே ஆரம்பித்திருக்க வேண்டும். அதாவது தாய்வழி சமூகத்திலிருந்து தந்தைவழி சமூக மாற்றம் ஆரம்பமானதிலிருந்து பெண்கள் மீதான ஆணாதிக்க சமூகத்தின் அதிகாரம் செயற்பட்டிருக்கலாம்.

இது ஆண்களுக்கு பல உரிமைகளையும் சலுகைகளையும் அளித்தது. முதலில் பெண்களை தமது உடமையாக்கினார்கள். ஒரு ஆண் விரும்பியளவு உடலுறவு கொள்ளவும் தேவையானளவு குழந்தைகள் பெறவும் பெண்களை நிர்ப்பந்தித்தார்கள். ஒரு குழந்தையைப் பெறுவதற்கான பெண்ணின் தெரிவை மறுத்தார்கள். பெண் நிலத்தின் மீது உரிமை கொள்வதை மறுத்தார்கள். வீட்டிற்குள் செய்கின்ற அனைத்து வேலைகளுக்கான ஊதியத்தை மறுத்தார்கள். இவ்வாறான வேலைகளை பெண்களின் கடமையாக்கினார்கள். பெண்களுக்கு என்று கனவுகள் ஆசைகள் இலட்சியங்கள் இருப்பதை தடைசெய்தார்கள். இதை எல்லாவற்றையும் தனது குடும்பத்திற்காக தியாகம் செய்ய பெண்கள் நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். இவ்வாறு வீடுகளுக்குள் வாழ்ந்த பெண்களின் மீது ஆண்களின் அனைத்து அதிகாரமும் பல தளங்களில் செயற்பட்டது. மேலும் வீட்டுக்குள் முடக்கப்பட்ட பெண்ணிற்கு பொது வெளியில் சுற்றுவதற்கான சுதந்திரமும் மறுக்கப்பட்டது அல்லது கட்டுப்படுத்தப்பட்டது. ஆண்களின் துணையுடன் மட்டுமே செல்லவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. பொதுவெளியில் பெண்களுக்கான வாக்குரிமை, பேச்சுரிமை, ஊர் சுற்றும் உரிமை என்பன மறுக்கப்பட்டன. ஆகவே பொதுவெளியில் பெண்களுக்கு எந்த அதிகாரமும் இருக்கவில்லை. தனிப்பட்ட வெளி மட்டுமல்ல பொது வெளியும் பெண்களுக்கு பாதுகாப்பானதாக இருக்கவில்லை. இவ்வாறு பெண்கள் மீதான அதிகாரம் எல்லா இடங்களிலும் வெளிகளிலும் அவர்களுக்கு எதிராக நிலை நாட்டப்பட்டது. இதை வெற்றிகரமாக நிறைவேற்ற இறுக்கமான கலாசாரம் பண்பாடுகள் என்பன உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டன. இவற்றின் விளைவாக பெண்கள் ஆண்களின் அடிமையாக்கப்பட்டார்கள்.

பெண்கள் தம் மீதான அடக்குமுறைகள் புரிந்து கொண்டு தம் விடுதலைக்காக கடந்த நூறு ஆண்டுகளாக தீவிரமாகப் போராட ஆரம்பித்தார்கள். இதன் விளைவாக தம் மீதான சுரண்டல்கள், தம்க்கிருக்கின்ற சுதந்திரமின்மை, தெரிவின்மைகள் மற்றும் உடல் மீதான அதிகாரம் தொடர்பாக விழிப்படைந்தார்கள். ஆகவே. தம் உடல் மீதான அதிகாரத்தைக் கோரினார்கள். மேலும் குழந்தை பெறுவதற்கும் கருவைக் கலைப்பதற்குமான தெரிவிற்கான உரிமை மற்றும் வாக்குரிமை, சம தொழில் வாய்ப்புகள், சம ஊதியம், வீட்டில் வேலைப் பங்கீடு என்பவற்றுடன் தம்மை ஒரு சக மனுசியாக மதிக்கும்படியும் கோரினார்கள். கற்பதற்கான உரிமைக்காக போராடினார்கள். இவ்வாறான போராட்டங்களின் விளைவாக பெண்கள் படிப்படியாக சில உரிமைகளைப் பெற்றுக் கொண்டனர். அதேவேளை பெண்கள் மீதான ஆண்களின் அதிகாரமும் படிப்படியா குறைய ஆரம்பித்தது. ஆனால் இன்னும் முழுமையாக அந்த அதிகாரமானது இல்லாமல் போகவில்லை. ஆகவே பெண்கள் இன்னும் முழுமையான சுதந்திரத்தை அடையமுடியவில்லை. போராட்டம் தொடர்கின்றது. குறிப்பாக தமிழ் சமூகத்தில் பெண்கள் தமது விடுதலைக்கான பயணத்தில் பாதியளவு கூட முன்னேறவில்லை.

Skærmbillede 646தமிழ் சமூகங்களில் பெண்கள் மீதான அடக்குமுறை மற்றும் சுரண்டல்கள் என்பது இப்பொழுதும் கூட அடக்குமுறையாகவோ சுரண்டலாகவோப் பார்க்கப்படுவதில்லை. மாறாக இவை தமிழர் கலாசாரமாக பண்பாடாக பார்க்கப்படுவதுடன் பெண்களின் கடமைகள் ஆக்கப்பட்டிருக்கின்றன. இருப்பினும் இப்பொழுது சுழல் மாறிவருகின்றது. தமிழ் பெண்கள் அதிகளவில் கல்வி கற்பது மட்டுமல்ல தம் மீதான ஆணாதிக்க சமூகத்தின் கட்டுப்பாடுகளையும் அடக்குமுறைகளையும் புரிந்து கொள்ள ஆரம்பித்துள்ளார்கள். தமது உரிமைகள் மற்றும் சுதந்திரம் தொடர்பாக தெளிவாக உள்ளார்கள். ஆகவே இதுவரை காலமும் தமிழ் சமூகங்களில் பெண்கள் இருந்த நிலையை தமிழர் பண்பாடு கலாசாரம் எனவும் இவை பெண்களின் கடமைகள் எனவும் கூறி இனியும் அவர்களை ஏமாற்றமுடியாது. ஆனால் இதைப் பொறுக்க முடியாத (ஆணாதிக்க) சமூகமும் ஆண்களும் இப் பெண்களைப்பற்றிய எதிர்மறையான முத்திரைகளைப் பதிப்பிக்கின்றனர். உதாரணமாக, “ஆட்டக்காரி” “திமிர் பிடித்தவள்” “பிடிவாதக்காரி” “ஆணவம் கொண்டவள்” இப்படி பல. சில பிரச்சனைகள் இயல்பாக மனிதரிடம் இருக்கின்ற தன்முனைப்பினால் உருவானவை. இதற்கு ஆண் பெண் என்ற வேறுபாடில்லை. ஆனால் பெண்கள் தமது உரிமைகள் தொடர்பாக கதைப்பதை தட்டிக் கேட்பதை மறுப்பதற்கும் அவர்களை எதிர்மறையாகக் கட்டமைப்பதற்கும் இவ்வாறான முத்திரைகளை சமூகமும் ஆண்களும் பயன்படுத்துகின்றனர். இதற்கு ஆதரவாகவே ஆண்களால் நிர்வகிக்கப்படும் ஊடகங்களும் துணைபோகின்றன.

 

 

ஊடகங்கள் சமூகத்தில் முன்வைக்கப்படும் இவ்வாறான கருத்துக்களைக் கேள்வி கேட்டு உரையாடல்களை ஆரம்பிக்க வேண்டும். ஆனால் அவர்கள் இதற்கு மாறாக சமூகத்தில் ஏற்கனவே இருக்கின்ற ஆணாதிக்க கருத்துக்களை மீள மீள அழுத்தம் கொடுத்துப் பாதுகாப்பனவையாகவும் மேலும் வேரூண்ட செய்பவையாகவுமே இருக்கின்றன. தூரதிர்ஸ்டவசமாக சமூகத்தின் மீது அக்கறை கொண்ட அல்லது முற்போக்கு கதைக்கின்ற பெரும்பான்மையான ஆண்களும் பெண்கள் எதிர்நோக்கும் பன்முகப் பிரச்சனைகளைப் புரிந்து கொள்ளத் தவறுகின்றனர். ஆகவே இந்த ஆண்களும் தமது இயலாமையின் இறுதி அம்பாக இவ்வாறான முத்திரைகளைப் பெண்களுக்கு எதிராகப் பயன்படுத்துகின்றனர். இவ்வாறான பார்வையிலிருந்து நாம் விடுபடமுடியும். இதற்கு மீள மீள ஒருவர் மீதான பன்முக ஒடுக்குமுறைகள் மற்றும் அவர் எதிர் கொள்ளும் சுரண்டல்கள் தொடர்பாக நாம் ஆழமாகக் கற்க வேண்டியவர்களாக உள்ளோம். இதுவே சமூகத்திலிருக்கின்ற சகல அடக்குமுறைகளையும் சுரண்டல்களையும் புரிந்து கொள்வதற்கும் அதிலிருந்து விடுபடுவதற்குமான வழியாக அமையும்.

இன்று பெண்கள் வீடுகளில், நிறுவனங்களில் உயர் பதிவிகளில் மட்டுமல்ல சில நாடுகளில் தலைவர்களாகவும் இருக்கின்றார்கள். உலக சனத் தொகையில் சரிபாதி எண்ணிக்கை கொண்ட பெண்கள் இருந்தபோதும் இவ்வாறு அதிகாரத்தை கையில் கொண்டுள்ள பெண்களின் எண்ணிக்கையானது ஆண்களுடன் ஒப்பிடும் பொழுது மிக மிகக் குறைவானது. கை விரல்களில் எண்ணி விடலாம். இவ்வாறு குறைவான எண்ணிக்கையுள்ள அதிகாரங்களைக் கொண்ட பெண்களும் பெண்களுக்கான அதிகாரத்தை வெளிப்படுத்துவதில்லை. மாறாக இவர்கள் ஆண்களின் அதிகாரத்தையும் அதை வழிநடாத்தும் ஆணாதிக்க சிந்தனைகளைளயும் கொண்டவர்களாகவே இருக்கின்றார்கள். மேலும் ஆணாதிக்க நிறுவனங்களைக் கட்டிக் காப்பவர்களாகவுமே இருக்கின்றனர். ஆகவே இச் சிறிய எண்ணிக்கையான பெண்களின் செயற்பாடுகளை பொதுமைப்படுத்தி எல்லாப் பெண்கள் மீது விமர்சனங்களை முன்வைக்க முடியாது. மேலும் இவர்களைப் போன்றவர்களே அனைத்துப் பெண்களும் என முடிவு செய்யவும் கூடாது. இது பெண்கள் மீது மேற்கொள்ளப்படும் ஒடுக்குமுறைகளை மறுப்பதற்கும் புறக்கணிப்பதற்குமே ஆதரவளிக்கும். குறிப்பாக இன, மொழி, மதம், சாதி, நிறம், பிரதேசம், தேசம் மற்றும் பல்வேறு நாடுகளின் அடிப்படையில் ஒடுக்கப்படுகின்ற ஆண்கள் இது தொடர்பாக மிகவும் கவனமாக சிந்திக்கவும் எழுதவும் செயற்படவும் வேண்டும். ஏனெனில் இவ்வாறு பல வழிகளில் ஒடுக்கப்படுகின்ற ஆண்கள் இன்னுமாரு ஒடுக்குமுறைக்கு ஆதரவாக அல்லது அதை மறுத்து அல்லது அதைப் புரியாமல் குரல் கொடுப்பது தவறாகும். இது அறமல்ல. மாறாக சக ஒடுக்குமுறைகளைப் புரிந்து கொள்ளவும் அவர்களுடன் இணைந்து பயணிக்கவும் முயற்சிக்க வேண்டும்.. அதை எவ்வாறு புரிந்து கொள்வது என்பதுதான் எம் முன் உள்ள சவால்?

தலைமைப் பதவிகளில் வீற்றிருக்கின்ற சிறிய எண்ணிக்கையிலான பெண்கள் கூட பூக்கள் விரித்த பதையில் எந்தக் கஸ்டமும் இல்லாமல் குறிப்பிட்ட பதவிக்கு வரவில்லை. ஆணாதிக்க சிந்தனை அதிகாரம் செலுத்துகின்ற, அதன் கலாசாரம் ஆழமாக வேரூண்டி இருக்கின்ற சூழலில் பல தடைகளையும் அவமானங்களையும் கடந்தும் அவற்றை எதிர்கொண்டுமே இப் பதவிகளுக்கு அவர்கள் வந்திருக்கின்றனர். அந்தவகையில் இவர்கள் பன்முக அடையாளங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றார்கள். இவர்களது ஒரு அடையாளம் மக்களை ஒடுக்கி சுரண்டுகின்றதாக இருக்கின்ற அதேவேளை இன்னுமொரு அடையாளம் இவர்களையே ஒடுக்குவதாக ஆகக் குறைந்தது கட்டுப்படுத்துவதாக இருக்கின்றது. இதற்கு நாம் இப்பொழுது அறியக் கூடிய பிரபல்யமாக இருக்கின்ற ஜெயலலிதா, கில்லரி, சந்திரிகா, போன்றவர்கள் நல்ல உதாரணங்களாகும். இவர்களை மதிப்பிடும் பொழுது இவர்கள் கொண்டிருக்கின்ற சிந்தனை, பதவி மற்றும் அதிகாரம் போன்ற அடையாளங்களை விமர்சிக்கும் அதேவேளை ஒரு பெண்ணாக எதிர்நோக்கும் ஒடுக்குமுறைகளை அல்லது ஆகக் குறைந்தது எதிர்நோக்கும் கருத்தியல் (வசைகளையும்) சவால்களையும் பிரச்சனைகளையும் கருத்தில் கொண்டே விமர்சிக்கப்பட வேண்டும். குறிப்பாக, இவ்வாறு அதிகாரங்களும் பதவிகளும் இல்லாத ஆனால் ஆணாதிக்க சிந்தனைகளுக்கும் நுகார்வுக் கலாசாரத்திற்கு ஆட்பட்டு தம் மீதான ஒடுக்குமுறைகளை உணராது பிரக்ஞையின்மையாக உரையாடுகின்ற செயற்படுகின்ற சதாரண பெண்களை விமர்சிக்கும் நாம் அதிகம் கவனம் எடுக்க வேண்டும். அல்லது சமூகத்தில் ஆதிக்கம் செலுத்துகின்ற ஆணாதிக்க கருத்துக்களை நாம் மீள உறுதி செய்வதுடன் அதன் வழியிலான அடக்குமுறைகளையும் சுரண்டல்களையும் பிரக்ஞையின்மையாக ஆதரவளிக்கவும் மீளவும் சமூகத்தில் அவற்றை நிலைநிறுத்தவும் பங்களித்தவர்கள் ஆவோம்.

Skærmbillede 647உதாரணமாக ஜெயலலிதா பிரமாண சமூகத்தை சேர்ந்தவர். ஆகவே சாதியடிப்படையில் சமூகத்தில் உயர் தளத்தில் ஏற்கனவே இருக்கின்றார். பல்வேறு மொழிப்புலமையும் கல்வி அறிவும் உடையவர். இந்திய சுழலைப் பொருத்தவரை அவ்வாறு ஒரு பெண் இருப்பது பலமானதே. இவையும் அவருக்கு அதிகாரத்தையும் உயர் தகுதியையும் வழங்குகின்றன. ஒரு நடிகையாக புகழ் பெற்றும், பல ஆண்டுகள் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டும் தனது தகுதியை ஆற்றலை பலத்தை அவர் நிறுபித்துள்ளார். இவற்றையெல்லாம் பல தடைகளை உடைத்து கடந்தே பெற்றுள்ளார். இவரது கருத்துக்களுடன் செயற்பாடுகளுடன் நாம் உடன்படாமல் இருக்கலாம். விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் இந்த ஆணாதிக்க சமூகத்தை எதிர்கொண்டு இவ்வாறு நிற்பதையும் அவரது ஆற்றலையும் நாம் மதிப்பிட்டாக வேண்டும். கருணாநிதியின் அரசியலுக்கு அப்பால் அவரது தமிழுக்காக அவரை மதிப்பதைப் போல இவரது ஆற்றல்களுக்காக இவர் மதிக்கப்பட வேண்டும். குறிப்பாக இவரது பெண் என்ற அடையாளம் இவரது இப் பயணத்திற்கு பெரும் தடையாக இருந்துள்ளது. ஆணாதிக்க சமூகம் பலவழிகளில் இவரை அடக்க முயற்சித்துள்ளது. அசிங்கப்படுத்தியுள்ளது. நல்ல உதாரணம் இவரைப் பற்றி வரையப்பட்ட மூன்றாம் தரமான கேலிச் சித்திரங்கள். அவ்வாறான கேலிச் சித்திரங்களை இங்கு பதிவு செய்வதே அசிங்கமானது எனக் கருதுகின்றேன். பெண்களை அசிங்கப்படுத்த அவர்களது பாலியல் அடையாளங்களையே ஆணாதிக்க சமூக படைப்பாளர்கள் கையாள்வார்கள். இதை எல்லாம் எதிர்கொள்ள இந்த சமூகத்திற்கு ஏற்றவகையான ஒரு மனிதராக அவர் மாற வேண்டி உள்ளது. இது அவரையும் அவரது செயற்பாடுகளையும் நியாயப்படுத்துவதல்ல. அவரது சிந்தனை மற்றும் மக்கள் விரோத செயற்பாடுகள் தொடர்பாக கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட வேண்டும். ஆனால் இங்கு கருத்தில் எடுக்கப்படுவது அவர் கொண்டுள்ள அடக்கப்படும் அடையாளம் சார்ந்த ஒரு பார்வை மட்டுமேயாகும்.

 Skærmbillede 648ஜெயலலிதா அவர்களை இருவர் நேர்காணல்கள் எடுத்துள்ளனர். ஒருவர் ஆண் மற்றவர் பெண். ஆண் எடுத்த நேர்காணலில் இருவரும் ஏட்டிக்குப் போட்டியாகவும் வன்மமாகவுமே கேள்வி பதில் அளிக்கின்றனர் (karan thapar interviw with Jaylalitha). இவ்வாறான ஒரு மனிதருடன் நேர்காணல் எடுக்க வேண்டுமாயின் எந்தளவு பொறுமையாகவும் உறுதியாகவும் தெளிவாகவும் பயமின்றி சமரசமின்றி கேள்வி கேட்க வேண்டும் என்பதற்கு இந்த நேர்காணலை எடுத்தவர் நல்ல உதாரணம். “நான் இவ்வாறு இருப்பதற்கு உங்களைப் போன்றவர்கள் தான் காரணம்” என நேர்காணல் எடுத்த ஆணையும் இந்த ஆணாதிக்க சமூகத்தையும் குற்றம் சாட்டுகின்றனார். புலமை ஆளுமை மற்றும் புகழுடன் அதிகாரத்தில் இருக்கின்ற ஒரு பெண்ணிற்கே இவ்வளவு பிரச்சனைகள் எனின் சதாரண பெண்களின் நிலையை எண்ணிப்பார்க்கலாம்.

அதேவேளை பெண் நிருபர் எடுத்த நேர்காணலில் ஜெயலலிதா அளித்த பதில்கள் புறக்கணிக்க கூடியவையல்ல. ஒரு பெண்ணாக அவர் எவ்வளவு கஸ்டப்பட்டிருக்கின்றார். கட்டுப்பாட்டுக்குள் இருந்திருக்கின்றார். இந்த ஆணாதிக்க சமூகம் அவரை எவ்வாறு மாற்றுகின்றது எனப் பலவற்றை அறிந்து கொள்ளலாம். ஆரம்பத்தில் அம்மாவின் கட்டுப்பாடு, அதேவேளை அம்மாவின் அன்புக்கு ஏங்குவது, அம்மாவின் மரணம், தனிமை, எம்ஜிஆர் தனது கட்டுப்பாட்டுக்குள் அவரைக் கொண்டுவருவதும் பயன்படுத்துவதும் என தொடர்கின்றது. (Rendezvous with Simi Garewal & Jaylalitha). அதில் இவரது இன்னுமொரு மனித அடையாளம் வெளிப்படுகின்றது. வெட்கம், மகிழ்ச்சி, ஆனந்தம் என பல உணர்வுகளை இருவரும் வெளிப்படுத்துகின்றனர். ஒரு சூழலை நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் மாற்றுவதில் சக மனிதர்களின் பங்கு எந்தளவு முக்கியமானது என்பதற்கு இந்த இரண்டு நேர்காணல்களும் நல்ல சான்று.

இரு நேர்காணல்கள் எடுக்கப்படும் சுழல்களும் கருத்தில் கொள்ளப்படலாம். பெண் எடுக்கின்ற நேர்காணலில் அவர்களுக்கு இடையில் எந்தவிதமான தடைகளும் இல்லை. அவர்களது மனங்களைப் போல திறந்த வெளிகளாக இருக்கின்றன. ரம்மியமான ஒரு சுழல். ஆண் எடுக்கின்ற நேர்காணலில் இருவருக்கும் இடையில் ஒரு பெரிய மேசை மதில் சுவர் போல் தடையாக இருக்கின்றது. இந்த தடைச் சுவர் நீக்கப்படாத வரை மற்றவரைப் புரிந்து கொள்வது என்பது கஸ்டமானது.

Skærmbillede 649இவரைப் போல் அண்மைய காலங்களில் அதிகம் அடிபடுகின்ற பெயர் கில்லரி. குறிப்பாக இவர் ஒபாமாவுடன் போட்டி போட்ட காலங்களில் போருக்கு ஆதரவளித்து உரையாற்றியபோது இவர் ஆண் (சிந்தனை) களின் பிரதிநிதியாகவே (எனக்குத்) தோன்றினார். அதேவேளை ஓபாமா ஒப்பிட்டளவில் பெண்களின் பிரதிநிதியாக அல்லது பெண்நிலை சார்ந்தே தோன்றினார். ஏனெனில் அவர் அன்று போர் எதிர்ப்பாளராக இருந்தார். (ஒபாமா இன்று போரை வேவ்வேறு வழிகளில் முன்னெடுக்கின்றார். இதற்கு அவர் தலைமை தாங்கும் நிறுவனத்தை மீறி அவ(ர்)ரால் ஒன்றும் செய்ய முடியாது அல்லது செய்யாது இருப்பது காரணமாக இருக்கலாம்.) ஆனால் அன்று சிலர் கில்லரி பெண்ணாக இருப்பதால் அவரை ஆதரிக்க வேண்டும் என்ற நிலைப்பாடு எடுத்தவர்களும் உள்ளனர். இவ்வாறான சுழ்நிலைகளில் ஒருவரது கருத்தியலை கணக்கில் எடுக்காமல், அதனை ஆராயாது, அவரது அடையாளத்திற்காக மட்டும் அவரை ஆதரிப்பது என்பது ஆபத்தானது. இதேவேளை கில்லரி வெள்ளையினப் பெண்ணாக இருந்தபோதும் இந்த ஆணாதிக்க சமூகத்தில் அமெரிக்க ஜனாதிபதிக்கான அவரது போட்டி பெண்களுக்கு நம்பிக்கையளிக்கின்ற ஒரு செயற்பாடு என்றால் மிகையல்ல. இவ்வாறு பெண்களின் அடையாளம் என்பது ஆணாதிக்க சமூக கலாசார சித்தனை கொண்ட சூழலில் பல சிக்கல்களை எதிர்கொள்கின்றது. ஆகவே இப் பெண்களையும் அவர்கள் எதிர்நோக்கும் மற்றும் அவர்கள் உருவாக்கும் பிரச்சனைகளையும் ஒற்றைப்படையாகவோ தட்டையாகவோ பார்க்க முடியாது.

ஒபாமாவைப் போல் சமாதானம் பேசி வந்தவர் சந்திரிகா. ஆனால் இறுதியாக அவரும் சிங்கள பௌத்த பேரினவாத நிறுவனத்திற்குள் அகப்பட்டார். விழுந்தார். அல்லது அவரது சிந்தனையும் ஆழ்மனதில் அதுவாகவே இருந்திருக்க வேண்டும். சந்திரிக்கா இந்த நிறுவன ஆதிக்கத்தைப் பற்றி புரியமால் இருந்திருக்கலாம். ஆனால் ஒபாமாவும் புரியாமல் இருந்திருப்பாரா என்பது சந்தேகமும் கேள்வியுமே. இருப்பினும் ஓபாமா பெண்களுக்கு குறிப்பிட்ட பதிவிகளுக்கு உரிய ஊதியம் வழங்கப்படுவதில்லை எனவும் ஆண்களுக்கு நிகராக ஒரே தொழிலுக்கு அதேயளவு ஊதியம் பெண்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதையும் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இது அமெரிக்கா போன்ற ஜனநாயாக நாட்டிலில் கூட பெண்கள் எந்தளவு பாரபட்சமாக நடாத்தப்படுகின்றார்கள் என்பதற்கான சான்றாகும். அந்தளவிற்கு அரசு, அரசாங்கங்கள், கல்வி நிறுவனங்கள், சமய நிறுவனங்கள் என அனைத்து சமூக நிறுவனங்களும் ஆண்நிலைக் கருத்துகளை மையமாகக் கொண்டவை. ஆதிக்கம் செய்கின்ற கட்டுப்படுத்துகின்ற சிந்தனைகளும் அவையே. இவை உருவாக்கிய கலாசாரமே சமூகத்தின் பொதுவான கலாசாரம் என ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. மேலும் இவை அதிகாரப்படிநிலையானவை ஒரு ஒழுங்கமைவையே அனைத்து நிலைகளிலும் உருவாக்குகின்றன. ஆகவேதான் இதற்குமாறாக ஒவ்வொரு நிறுவனத்திற்குள்ளும் வெளியிலும் சூழலிலும் பெண்களையும் சம அளவில் இணைக்கின்ற மதிக்கின்ற அவர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்குகின்ற அதிகாரப்படிநிலையற்ற பண்பாட்டை கலாசாரத்தை சிந்தனைகளை உருவாக்க வேண்டி தேவை உள்ளது.

 ஒரு குடும்ப நிறுவனத்திற்குள் ஒரு பெண் படித்து வேலைக்கு போய் நிறைய பணம் உழைப்பது என்பது இன்று அவசியமானது. இப்பொழுது அது ஒரு கலாசாரமாகவும் உருவாகிக் கொண்டு வருகின்றது. ஆனால் இவ்வாறு பொது வெளிக்கு வரும் பெண்கள் ஆண்களால் உருவாக்கப்பட்ட கலாசார சமூகத்திற்குள் வாழவும் வேலை செய்யவும் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள். மேலும் ஆண் நோக்கு நிலையிலிருந்தே இவர்களது பிரச்சனைகள் பார்க்கப்படுகின்ற. குழந்தைகள் பராமறிப்பு மற்றும் வீட்டு வேலைகள் தொடர்பான பொறுப்புகளை எடுக்காது வேலைக்கு செல்கின்ற ஆணுக்கும் இப்பொறுப்புகளை செய்து கொண்டு மட்டுமல்ல மாதாந்த இரத்தப்போக்கு வயிற்றுக் குத்துடனும் வேலைக்கு செல்கின்ற பெண்ணுக்கும் இடையில் பல வேறுபாடுகள் இருக்கின்றன. ஆனால் இவை கவனத்தில் கொள்ளப்படுவதில்லை. மறுபுறம் இவ்வாறு படித்து வேலைக்குப் போகின்றவர்கள் எல்லோரும் பெண்ணிநிலை வாதிகளோ அல்லது பெண்ணிலைவாதக் கருத்துக்களைக் கொண்டவர்களோ அல்ல. ஆனால் இதுவரை பெண்ணியவாதப் போராட்டங்கள் பெற்றுக்கொடுத்த வெற்றிகளையும் உரிமைகளையும் இப் பெண்கள் அனுபவிக்கின்றனர். இந்தப் பெண்களில் பெரும்பான்மையானவர்கள் ஆணாதிக்க சிந்தனைக்கு உட்பட்டவர்கள் மட்டுமல்ல நுகர்வுக் கலாசாரத்தின் ஆதிக்கத்தையும் உள்வாங்கியவர்கள். அதற்கு ஏற்ப தமது முன்னேற்றத்திற்காக ஆண்களைப் போல, (தம்மை அடக்கி சுரண்டுகின்ற ஆண்களுடனும் அவர்களுக்கு எதிராகவும்) போட்டி போடவும் போராட வேண்டியவர்களாகவும் இருக்கின்றார்கள். இதன் விளைவாகப் இப் பெண்கள் “அதிகார மோகம் கொண்டு அலைகின்றார்கள்”, “ஆண்களை மதிப்பதில்லை”, “அடங்காப்பிடாறி” “ஆட்டக்காரி” என சமூகம் இவர்கள் மீது முத்திரைகள் குத்துகின்றன. இந்த மதிப்பீடுகள் ஆணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடுகளாகும். இவ்வாறு இப் பெண்களை எதிர்நிலைக்கு கொண்டு சென்று விமர்சிப்பது ஆரோக்கியமான வழியல்ல. இதற்கு மாறாக இவர்களைச் சுற்றி சமூகம் கட்டமைத்த சிந்தனைகளை கட்டவிழ்ப்பு செய்ய முயற்சிப்பதே ஆரோக்கியமான பார்வையும் வழியுமாகும். இதைச் செய்யாமல் இந்த சமூகத்திற்கு பலியாகிப் போன பெண்களை அதுவும் ஒருசிலரை பெரிதுபடுத்தி பொதுமைப்படுத்துவது சரியான பார்வையுமல்ல. இது மேலும் பெண் ஒடுக்குமுறைக்கு ஆதரவான பார்வையாக செயற்பாடாகவே இருப்பதுடன் சமூகத்தில் ஏற்கனவே நிலவுகின்ற ஆணாதிக்க சிந்தனையை மீள நிலைநாட்டுவதற்கே பங்களிக்கும்.

இன்றைய உலகத்தில் கூட (தமிழ்) பெண்களுக்கு தனது நாட்டுக்குள் மட்டுமல்ல தனது ஊருக்குள்ளையே இருட்டிய பின்னர் ஊர் சுற்ற முடிவதில்லை. இவர்களால் ஆண்களைப் போல உலகம் சுற்றவும் முடியாது. பாதுகாப்பு பிரச்சனை. எப்பொழுதும் எதுவும் நடக்கலாம் என்ற அச்சம். பாலியல் தொல்லைகளுக்கும் வன்புணர்வுக்கும் உட்படலாம் என்ற பயம். ஆனால் ஆண்களுக்கு அப்படியல்ல. எந்த ஊரிலும் எந்த நாட்டிலும் எந்த நேரமும் உலகமெல்லாம் எப்படியும் சுற்றித் திரியலாம். (சில விதிவிலக்குகளைத் தவிர. இந்த சுந்திரம் வெள்ளை ஆண்களுக்கே அதிகம் பொருத்தமானது). இவ்வாறு ஊர் உலகம் சுற்றுகின்ற ஆண்கள் மட்டுமல்ல ஊருக்குள்ளே கட்டுப் பெட்டியாக இருக்கின்ற ஒரு ஆண் கூட எத்தனை பெண்களுடனும் உறவு வைத்திருக்கலாம். காதலிக்கலாம். கடைசியில் ஒரு பெண்ணை திருமணம் செய்யலாம். இந்த ஆண்கள் பெரும்பாலும் பிரச்சனைகளை எதிர்நோக்குவதில்லை. ஆனால் ஒரு பெண் இவ்வாறு இருந்துவிட்டால் அவளால் இன்னுமொரு திருமணம் மட்டுமல்ல இன்னுமொருவரைக் காதலிப்பது கூட சாத்தியப்படாது. விதி விலக்குகள் இருக்கலாம் ஆனால் பொதுவாக இப்படித்தான் இருக்கின்றது. இவ்வாறான ஒரு சுழலில் எந்தவிதமான அடிப்படைகளும் இல்லாது ஆண்கள் தமக்கு தனிப்பட நேர்ந்துவிட்ட ஒரு நிகழ்விற்காக பெண்களைப் பொதுவாக விமர்சிக்கின்றபோது அதிகமான பொறுப்புணர்வும் அக்கறையும் கொள்ள வேண்டும். பெண்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகளின் பன்முக தன்மைகளை ஆராய்ந்துதான் இவற்றை வெளிக்கொண்டுவரவேண்டும். அதுவே நியாயமான வழிமுறையும் பார்வையுமாகும்.

பெண்கள் பல்வேறு உரிமைகளை இன்று பெற்றிருந்தாலும் இன்னும் சமூக பொருளாதார அரசியல் இனப்பெருக்க மற்றும் பாலியல் உரிமைகளை அடைவதற்கு பெறுவதற்கு பல தடைகளை எதிர்நோக்குகின்றனர் (Mounira M. Charrad). அரசின் கொள்கைகள் பெண்களின் வாழ்விலும் செயற்பாட்டிலும் மாற்றங்கள் பலவற்றை ஏற்படுத்தியுள்ளன. அதேவேளை பெண்களுக்கு ஒரு புறம் உரிமைகள் இருந்தாலும் மறுபுறம் அதை அனுபவிக்க முடியாத தடைகளும் உள்ளன. ஒரு புறம் (ஆண்கள் பெண்கள்) அனைவரும் ஒரு நாட்டின் பிரஜைகள் எனவும் சம வாய்ப்புகளும் அந்தஸ்தும் உள்ளது எனவும் கூறுவார்கள். மறுபுறம் இன்றும் குடும்பம், அரசு, தொழிற்துறை, மதம், மற்றும் நீதித்துறைகள் ஆணாதிக்க கருத்துக்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன. இவை பெண்கள் மீதான கட்டுப்பாடுகளாக வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ செயற்படுகின்றன. இந்தடிப்படைகளில் இவ்வாறான சமூக நிறுவனங்கள் தொடர்பான புரிதல் அவசியமானது.

அரசு, மதம், கல்வி, மட்டுமல்ல குடும்ப “நிறுவனங்கள் அனைத்தும் அடிப்படையிலையே மனிதர்களை அடக்கி கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அதிகாரம் நிறைந்தவையாகும்.” மேலும் “இந்த நிறுவனங்கள் பால் அடிப்படையிலும் ஒடுக்குமுறையையும் பாரபட்சத்தையும் மேற்கொள்பவை.” ஆகவே ஆண்களே எப்பொழுதும் அதிகாரத்தில் இருக்கின்றனர். அல்லது ஆணாதிக்க சிந்தனைகளே எப்பொழுதும் அதிகாரத்தில் இருக்கின்றன. “அதிகாரத்துவம் என்பது ஒரு சமூக கட்டமைப்பு. இங்கு சில சமூக நடவடிக்கைகளும் குறிப்பிட்ட சில மொழிகளும் பழக்கவழக்கங்களும் பின்பற்றப்படும். அவையே நிரந்தரமானவையாகும். இதைப் பின்பற்றுகின்றவர்களுக்கே ஊக்குவிப்புகளும் கௌரவங்களும் வழங்கப்படும்.” “இந்த நிறுவனங்களில் கீழ்படிவுள்ளவர்களாக இருப்பதற்கு “பெண்மையான” பழக்கவழக்கங்களையும் செயற்பாடுகளையுமே ஆணாகவோ பெண்ணாகவோ இருந்தாலும் பின்பற்றவேண்டும். இதன் அர்த்தம் பெண்ணாக இருப்பின் இந்த நிறுவனங்களில் கஸ்டமில்லாமல் வேலை செய்யலாம் என்றோ விரைவாக உயர் பதவியை அடையாளம் என்பதோ அல்ல. அவ்வாறு உயர் பதவியை அடைவதற்கு அதிகாரத்துவ நிறுவனம் உருவாக்கிய “ஆண்மைத்தனமான” பழக்கவழக்கங்களையும் செயற்பாடுகளையும் பின்பற்றவேண்டும்” என்கின்றனர் பெண்ணியவாதிகள். இங்கு “பெண்மை என்பது கீழ்படிந்துபோவது மற்றவரிடம் இரஞ்சுவது என்பதாக கட்டமைக்கப்பட்டுள்ளது.” இதனால்தான் “அதிகாரத்துவமானது பெண்ணியத்துடன் இணைந்து செல்ல முடியாதது மட்டுமல்ல ஆண்களை மையப்படுத்திய அரசானாது பெண்களை உள்வாங்கவோ அல்லது பெண்களுக்கு பதிலளிக்கவோ முடியாதது” என சில பெண்ணியவாதிகள் கூறுகின்றனர். மேலும் “ஒரு அரசை உருவாக்குகின்ற வழிமுறையில் பெண்களுக்கு குறைவான பங்களிப்பே உள்ளது. அல்லது எந்தவிதமான பங்குமில்லை எனக் கூறலாம்.” இங்கு, “உருவாக்கப்படும் அரச சட்டங்களும் கொள்கைளும் பெண்களுக்கு எதிரான, பெண்கள் மீதான பாலியல், உழைப்பு, சந்ததி போன்ற பெண்களின் மீதான அதிகாரத்தின் அடிப்படையிலையே உருவாக்கப்படுகின்றன”. ஆகவேதான் “பெண்ணியம் என்பது அனைத்து (ஆண்) ஆதிக்க நிறுவனங்களையும் எதிர்ப்பதாக இருக்கின்றது. “இந்த நிறுவனங்கள் உருவாக்கிய சிந்தனைகள், பழக்கவழக்கங்கள் சிறு வயதிலிருந்தே எங்கள் ஆழ் மனங்களில் நன்றாகப் பதிந்து விடுகின்றன. ஆனால் இப் பழக்கவழக்கங்கள் மற்றும் குறிப்பர்க ஆண்கள் அனுபவிக்கின்ற சலுகைகள் தவறு நியாயமற்றது நீதியற்றது எனப் புரிந்தபின்பும் எத்தனை பேர் இதிலிருந்து விடுபட முயற்சிக்கின்றோம்” எனப் பெண்ணியவாதிகள் கேட்கின்றனர். இக் கேள்வி நியாயமானதே.

 

 

பல்வேறு கட்டுரைகளிலிருந்து எடுத்து தொகுக்கப்பட்ட கருத்துக்கள். பால் பாலியல் காமம் காதல் பெண் பெண்ணியம் என்ற நூலில் வெளிவந்த கட்டுரை

ஓவியங்களும் படங்களும் – கூகில்

நன்றி:- https://meerabharathy.wordpress.com/

 

கட்டுரைகள்

சிகிரியா ஒரு பழங்கால மலை பாழடைந்த கோட்டையாகும், இது ஒரு அரண்மனையின் எச்சங்களுடன் அமைந்துள்ளது மத்திய பகுதிஇலங்கையில் மாத்தளை. இந்த அற்புதமான கல் கோட்டை தோட்டங்கள், குளங்கள் மற்றும் பிற...

கிருஷ்ணபிள்ளை புண்ணியமூர்த்தி  "கல்வி சார் பாடங்கள், தொழில்சார் பாடங்கள், பொதுவான பாடங்கள், இணைப்பாட விதானங்களினூடாக ஒரு சுயசெயல்திறன் நம்பிக்கையுள்ள ஆசிரியரை உருவாக்குவதற்கான அனைத்து...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் நுண் அறிவு என்பது புரிந்து கொள்ளும் திறன், தொடர்பு கொள்ளும்திறன், கருத்தியல் சிந்தனை திறன் போன்ற திறன்களின் தொகுப்பாகும். நுண் அறிவின் அளவை உளவியல் வல்லுனர்கள் நுண் அறிவு...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் "ஆக்கம், விரிசிந்தனை, தற்துணிவு, தீர்மானம் எடுத்தல், பிரச்சினை விடுவி;த்தல், நுணுக்கம் மற்றும் பகுப்பாய்வு சிந்தனை, அணியினராக வேலை செய்தல், தனியாள் இடைவினைத் தொடர்புகள்,...

கல்வி என்பதற்குப் பொதுவான பல வரையறைகள் உள்ளன. எல்லா வரையறைகளும் பொதுவான ஒரு கருத்து, நடத்தையில் விரும்பத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்துவதுதான் கல்வி. கல்வி என்பது வெறும் அறிவு மட்டுமல்ல, பண்புகள்,...

ஜப்பானிய ஆரம்பக்கல்வி உலகப்புகழ் வாய்ந்தது; அதற்கு ஒரு காரணம் அந்நாட்டின் கல்வி முறையில் காணப்படும் சமத்துவ அம்சம். ஆற்றல்களின் அடிப்படையில் மாணவர்களைப் பிரித்து வைத்துக் கற்பிக்கும் முறைமை...

"வரலாற்றுச் செயற்பாடுகள் என்பன வெறும் சம்பவங்களல்ல. அவற்றுக்கு ஓர் உட்புறம், அதாவது ஒரு சிந்தனைப் புறம் உள்ளது." ஆர். சி. கொலிங்வூட்வரலாற்றியலறிஞர். பெரிதும் விவாதிக்கப்பட்டுள்ள இந்த மேற்கோள்...

- கார்த்திகேசு சிவத்தம்பி -  யாழ்ப்பாணத்தின் பண்பாட்டு அமிசங்களில் கண்டதுண்டு, கேட்டதில்லை" யாகவுள்ளனவற்றுள் ஒன்று, யாழ்பாணச் சமூகத்தின் யதார்த்தபூர்வமான சித்திரிப்பு ஆகும். நம் கண்முன்னே...

வாழ்க்கைமுறை

Kaviraj BSc Hons in Nursing டெங்கு காய்ச்சல் இலங்கை மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஆட்கொல்லி நோயாகும். நோய்க்காரணிஆர்போ வைரஸ்களால் தொற்றுக்குள்ளான ஈடிஸ் உணவு வகைகளால் காணப்படும் நோயாகும்...

ஒரு கிலோ பசும் சாணத்தில் இருந்து ஒரு கன அடி சாண எரிவாயு உற்பத்தி செய்யலாம். ** ஒரு மாடு தினசரி 10 கிலோ சாணம் இடும் எனில் , 10 மாடுகள் இடும் சாணம்,...

-தமிழ்- " நீங்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் காரணமாக உங்கள் மீதும் கரி பூசப்படலாம்; நீங்கள் கீழே போட்டு மிதிக்கப்படலாம் அல்லது அடித்து நொறுக்கப்படலாம். இந்த மாதிரியான நிலைமைகளில் நீங்கள் உங்களைப்...

- தமிழ் - "சம்பளம் உங்களுக்கு உதவலாம். ஆனால் இலாபம் உங்களுக்கு உயர்ந்த அதிர்ஷ்டம் நல்கும்" சீனாவின் பெரிய செல்வந்தர் ஜாக் மா வின் கூற்றின்படி குரங்கிற்கு முன்பாக பணத்தையும் வாழைப்பழத்தையும்...

தடங்கள்

வி.அனோஜன் "நேரம் என்பது இவரது வாழ்வின் முக்கிய உயிர்நாடி. பாடசாலை என்றாலும் சரி ஆலயம் என்றாலும் சரி ஊரின் சமூகசேவை விடயங்கள் என்றாலும் சரி கடிகாரத்தின் முட்களை விட வேகமாகச்சுழன்று முன்வரிசையில்...

ச. தேவமுகுந்தன் ஆறுமுகம் சரஸ்வதி தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாக உதித்தவர் திருமுருகன். தாயும் தந்தையும் ஆசிரியர்கள் என்பதோடு சைவ பாரம்பரிய குடும்ப பின்னணியையும் கொண்டவர்கள், அன்பும் பண்பும்...

18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் – 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர்....

- மதுசூதனன் தெ. -  பத்தொன்பதாம் நூற்றாண்டிலே மகா வித்துவான்கள், புலவர்கள், கணக்காயர்கள், கவிராயர்கள் போன்றோர்கூடப் பழந்தமிழ் நூல்கள் பற்றிப் பெருமளவு அறியாமையில் மூழ்கிக் கிடந்தனர்....

சினிமா

சினிமா

ஐம்பது வயது நந்து (பார்த்திபன்) ஒரு சினிமா ஃபைனான்சியர். அவரிடம் வட்டிக்குப் பணம் வாங்கி படமெடுத்த இயக்குநர், அதைத் திருப்பிக் கொடுக்க முடியாததால் மனைவியுடன் தற்கொலை செய்துகொள்கிறார். அந்த மரணம்,...

சினிமா

பொறியியல் படிப்பை கஷ்டப்பட்டு முடித்த கார்த்திக்கிற்கு (ஹரீஷ் கல்யாண்) திருமணம் செய்துவைக்க பெற்றோர் முடிவெடுத்து, பெண் பார்க்கப் போகிறார்கள். ஆனால், தவறான வீட்டிற்குப் போய்விடுகிறார்கள்....

சினிமா

இந்த உலகம் இயங்குவதே பற்றுதலால் தான். ஏதோவொன்றின் மீது நாம் கொண்டிருக்கும் பற்றுதான் நம்மை, அதை நோக்கி இழுத்துச் செல்கிறது. பிடித்தோ பிடிக்காமலோ, எல்லாவற்றையும் மீறி நம்மை அதன்மீது பற்றி அழுந்தச்...

சினிமா

சினிமா என்பது பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி சமூகத்துக்குப் பல விஷயங்களைப் போதிக்கும் தளமாகவும் இருக்கிறது. அதனால் அடுத்த 18 நாட்களும் உலக அரங்கில் வெளிவந்த வைரஸ் தொற்று பற்றிய தரமான உலக சினிமாவைப்...

ஆன்மீகம்

நயினா தீவு நாகபூசணி அம்மன் கோயில் இலங்கை, யாழ்ப்பாண மாவட்டத்தில், நயினா தீவில் உள்ள ஒரு புகழ் பெற்ற இந்து கோயில் ஆகும். நயினாதீவு பல்வேறு வகையிலும் சிறப்புப்பெற்ற தீவாகக் காணப்படுகின்றது....

உளவியல்

திரு. ச. அல்பேட் றீகன்BA Psy. (UJA), MSc HRD Psy. (Madras), PGD Edu. (OUSL). “உள ஆற்றுப்படுத்துனர் தன்னை நாடிவரும் உளநலநாடுநருடன் குணமாக்கல் உறவில் ஈடுபட்டு அவர் தன் தேவைகளை பொருத்தமாக பூர்த்தி...

சபா.ஜெயராசா ஓய்வுநிலை பேராசிரியர் சீர்மியம் அல்லது உளவளத்துணை என்பதை மேலைத்தேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட செயல்வவமாக காட்டும் முயற்சியைப் பல்கலைக்கழகங்களில் உள்ளவர்களும், தொண்டு...

புத்தகங்கள்

நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை உருவாக்குவது மட்டும் அல்ல ஒரு பள்ளியின் கடமை. விளையாட்டு வீரனை, நல்ல படைப்பாளியை, நல்ல பேச்சாளனை, நல்ல கவிஞனை, நல்ல நடிகனை, நல்ல சமூகப் போராளியை, நல்ல தலைவனை...

- அலெக்ஸ் பரந்தாமன்- ஈழத்து எழுத்தாளர் மா.சிவசோதி அவர்களின் இரண்டாவது சிறுகதைத்தொகுப்பும் மூன்றாவது வெளியீடுமாக பொதுவெளிக்கு வந்துள்ளது. ஜீவநதி வெளியீடாக 104 பக்கங்களுடன், 350/= விலையைத் தாங்கி...

குழந்தை ம.சண்முகலிங்கம்  அரங்கியல் பற்றிய அறிவுத்தேடல் அவசியப்பட்டுக் கொண்டு செல்லும் இக்காலக்கட்டத்தில் ''அரங்கியல்" என்று தலைப்பிடப்பட்ட இத்தொகுப்பு முக்கியமானதொரு படைப்பாக அமையும் எனக்...

தமிழ்த்தத்துவங்கள்

{youTube}/1qJxh6BaI74{/youtube}நான் பணக்கார அப்பாவின் பிள்ளை அல்ல. படிப்பிலும் அவ்வளவு சுட்டி இல்லை. மூன்றுமுறை பல்கலைக்கழக தேர்வில் தோல்வி அடைந்திருக்கிறேன். 10 முறை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சேர...

1. போர் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல், அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத போர். —மா சே துங 2. துப்பாக்கியைக் கொண்டே உலகமுழுவதையும் திருத்தி அமைக்கலாம் என்று நம்மால் சொல்ல முடியும். போரைக் கொண்டே போரை...

X

Right Click

No right click