07 1தமிழில் : சித்தார்த் வெங்கடேசன்

“இந்த புயலும் கடந்து போகும். ஆனால் இப்போதைய நமது தேர்வுகள் இனி வரும் ஆண்டுகளில் நம் வாழ்வை மாற்றலாம். ஒற்றுமையின்மையை தேர்வு செய்தால், தற்போதைய சிக்கலில் இருந்து வெளியேறுவதற்கு தாமதமாவது மட்டுமல்ல, எதிர்காலத்தில் மேலும் பல பேரிடர்களை சந்திக்கவும் நேரிடும். உலக ஒற்றுமையை தேர்ந்தெடு த்தால், அது இந்த கொரோனாவைரஸ/க்கு எதிரான வெற்றியாக மட்டும் அல்ல் 21ஆம் நூற்றாண்டில் மனித குலம் காணப்போகும் எல்லா கொள்ளைநோய்களுக்கும் பேரிடர்களுக்கும் எதிரான வெற்றியாக அமையும்."

  மனித இனம் ஒரு உலகலாவிய சிக்கலை சந்தித்துக்கொண்டிருக்கிறது. நம் தலைமுறையின் ஆகப்பெரிய சிக்கலாக இது இருக்கலாம். அடுத்த சில வாரங்க ளில் அரசுகளும் மக்களும் எடுக்கும் முடிவுகள் இனி வரப்போகும் பல ஆண்டுகளுக்கு நமது எதிர்காலத்தை வடிவமைக்கலாம். நமது சுகாதார அமை ப்புகளை மட்டுமல்ல, நம் பொருளாதாரத்தை, அரசியலை, பண்பாட்டையுமே கூட மாற்றலாம். நாம் துரிதமாகவும் தீர்க்கமாகவும் செயல்பட வேண்டும். ஆனால் நமது செயல்பாடுகளின் நீண்டகால விளைவுகளையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். பல மாற்றுகளில் ஒன்றை தேர்ந்தெடுக்கும் பொழுது, தற்போதைய இடரை எவ்வாறு கடப்பது என்பவதை சிந்திப்பதோடு நில்லாமல், இந்த புயல் கடந்த பின் எப்படியான ஒரு உலகத்தில் நாம் வாழப்போகிறோம் என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும். ஆம். இதுவும் கடந்து போகும், மனித இனம் பிழைத்து வரும், நம்மில் பலரும் உயிரோடே இருப்போம் ஆனால் நாம் வாழப்போகும் உலகம் வேறொன்றாக இருக்கும்.

இன்றைய குறுகிய கால, இடர் போக்கும் செயல்பாடுகள் பலவும் நம் வாழ்வின் அங்கமாக மாறி இருக்கும். இதுவே இடர்காலங்களின் குணம். அவை வரலாற்று செயல்பாடுகளை துரிதப்படுத்துகின்றன. இயல்பான காலங்களில் ஆண்டுக்கணக்காக எடுக்கத்தயங்கும் முடிவுகள் சில மணி நேரங்களில் எடுக்க ப்படும். முதிர்ச்சியற்ற, ஆபத்தான தொழில்நுட்பங்கள் கூட நடைமுறைபடுத் தப்படும் ஏனெனில் செயலின்மையின் அபாயங்கள் மேலும் பெரியவை. நாடுகள் பலவும் பெரும் சமூக பரிசோதனைகளுக்கான சோதனை எலிகளாக மாற்றப்படும். அனைவரும் வீட்டில் இருந்தபடியே பணி புரிந்தால், தொலை தொடர்பு மூலமாக மட்டுமே உரையாடினால் என்ன ஆகும்? அனைத்து

பள்ளிகளும் பல்கலைக்கழகங்களும் இணைய வழி கூடங்களாக மாறினால் என்னாகும்? இயல்பான கால ங்களில் அரசுகளோ, வணிக மற்றும் கல்வி நிறுவன ங்களோ இதுபோன்ற பரிசோதனைகளுக்கு ஒரு போதும் சம்மதிக்கமாட்டார்கள். ஆனால் இவை இயல்பான கால ங்கள் அல்ல. இந்த சிக்கலான காலகட்டத்தில் நம் முன் இரண்டு முக்கியமான தேர்வுகள் உள்ளன. முதலாவது, சர்வாதிகார கண்காணிப்பிற்கும் குடிமக்கள் அதிகாரத்தி ற்கும் இடையிலான தேர்வு. இரண்டாவது, தேசியவாத தனிமைப்படுதலுக்கும் உலகலாவிய ஒற்றுமைக்கும் இடையிலான தேர்வு.

 தோலுக்கும்-அடியில் பாயும் கண்காணிப்பு

கொள்ளைநோய்களைத் தடுக்க, மொத்த மக்கள்தொகை யும் சில வழிகாட்டுதல்களுக்கு இணங்க வேண்டும். இதை இரு வழிகளில் சாத்தியப்படுத்தலாம். ஒன்று, அரசு மக்களை கண்காணித்து, வழிகாட்டுதல்களை மீறுபவர்களை தண்டிக்கலாம். இன்று, மனித வரலாற்றில் முதன்முறையாக எல்லா மக்களையும் எல்லா நேரங்க ளிலும் கண்காணிக்கக்கூடிய தொழில்நுட்பம் உள்ளது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன், கேஜிபியால் (சோவியத் ரஷ்யாவின் உளவுத்துறை) 240 மில்லியன் சோவியத் குடிம க்களை 24 மணி நேரமும் கண்காணிக்கவோ, கண்காணி ப்பில் சேகரித்த தகவல்களை ஆய்வு செய்யவோ முடியவில்லை . மனித உளவாளிகளையும் ஆய்வாளர்களையுமே கேஜிபி நம்பியிருந்தது. ஒவ்வொரு குடிமகனையும் பின் தொடர ஒரு உளவாளியை வைக்க முடியாது. ஆனால் இன்று அரசுகள், இரத்தமும் சதையுமான மனிதர்களை விட எங்கும் நிறைந்திருக்கும் உணரிகளையும் (sensors) சக்திவாய்ந்த அல்காரிதம்களையும் நம்பலாம்.

கொரோனாவைரஸிக்கு எதிரான இந்த போரில், இப்போதே பல அரசுகள் நவீன கண்காணிப்பு கருவிகளை பயன்படுத்தத் தொடங்கிவிட்டன. இதில் மிகவும் கவனி க்கத்தக்க நாடு, சீனா. மக்களின் அலைபேசிகளை உன்னிப்பாக கண்காணித்ததன் மூலமாகவும், கோடிக்கணக்கான “முகங்களை கண்டுணரும்” கேமராக்களை பயன்படுத் தியதன் மூலமாகவும், மக்களை தங்களின் உடல் வெட்ப த்தையும் உடல்நிலையையும் பரிசோதித்து அறிவிக்குமாறு கட்டாயப்படுத்தியதன் மூலமாகவும், சீன அதிகாரிகளால் மிக வேகமாக கொரோனாவைரஸால் பாதிக்கப்பட்ட வர்களை கண்டுபிடிக்கவும் அவர்கள் யாருடன் எல்லாம் தொடர்பில் இருந்தார்கள் என்ற விவரங்களை சேகரி க்கவும் முடிந்திருக்கிறது. பாதிக்கப்பட்ட நோயாளிகளின் அருகாமையை குறித்து குடிமக்களுக்கு எச்சரிக்கை அளி க்கும் அலைபேசி நிரல்கள் பல வந்துவிட்டன.

இது போன்ற தொழில்நுட்பங்களின் பயன்பாடு கிழக்காசியாவோடு மட்டும் நிற்கவில்லை. இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெடன்யா/ஹ, தீவிரவாதிகளை கண்காணிப்பதற்கு பயன்படுத்தும் கண்காணிப்பு தொழில்நுட்பத்தை கொண்டு, கொரோனாவைரஸ் நோயாளிகளை கண்காணிப்பதற்கான ஒப்புதலை அளித்தார். இதற்கான பாராளுமன்ற துணைக்குழு இதற்கு ஒப்புதல் அளிக்க மறுத்த பொழுது, நெடன்யாஹ இதை “இடர்கால ஆணையாக நிறைவேற்றினார்.

 இதில் புதியதாக என்ன இருக்கிறது என்று நீங்கள் வாதிடலாம். கடந்த சில ஆண்டுகளாக அரசுகளும் நிறுவ னங்களும் மிக நுட்பமான தொழில்நுட்பங்களால் மக்களை கண்காணித்து வருகிறது. ஆனால், இப்பொழுது நாம் கவனமாக இல்லையென்றால், இந்த கொள்ளை நோய், கண்காணிப்பின் வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமைந்துவிடும். இதுகாரும் இப்ப டியான கண்காணிப்புகளை மறுத்த நாடுகளிலும் கூட பெருந்திரளான மக்களை கண்காணிக்கும் கருவிகளின் பயன்பாடு சாதாரணமாகவிடும். ஆனால் அதை விடவும் முக்கியமான காரணம் - இதன் மூலம், கண்காணிப்பு என்பது, “தோலுக்கு மேலான” கண்காணிப்பு என்பதில் இருந்து தோலுக்கு உள்ளேயுமான கண்காணிப்பாக பெருமாற்றம் அடையும்.

இதுவரை, உங்கள் விரல் உங்களின் அலைபேசி தொடு திரையை தொட்டு ஒரு சுட்டியை அழுத்தியபோது, அரசு உங்கள் விரல் எந்த சுட்டியை அழுத்தியது என்பதை அறிய விழைந்தது. ஆனால் இந்த கொரோனாவைரஸ் அரசின் கவனத்தை மாற்றி இருக்கிறது. இப்பொழுது அரசு அறியவிழைவது அழுத்திய உங்களின் விரலின் வெட்ப த்தையும் அதன் தோலுக்கு உள்ளே ஓடும் இரத்தத்தின் அழுத்ததையும். பேரிடர்காலப் புட்டு

அதீத கண்காணிப்பு வேண்டுமா வேண்டாமா என்ற விவாதத்தில் நாம் எங்கே நிற்கிறோம் என்று முடிவெடு ப்பதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. அதில் முக்கியமா னது - எவ்வகையில் நாம் கண்காணிக்கப்படுகிறோம் என்பது யாருக்கும் துல்லியமாக தெரியாது. வரும் கால ங்களில் அது என்னவாக மாறும் என்பதும். கண்காணிப்பு தொழில்நுட்பம் அசுரவேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கி றது. பத்தாண்டுகளுக்கு முன்பு அறிவியல் புனைவை போல தோன்றிய ஒன்று இன்று பழைய செய்தியாக தெரி கிறது.

ஒரு சிந்தனை பரிசோதனையாக (thought experiment) இதை எண்ணிப்பாருங்கள். ஒரு கற்பனையான அரசு, தன் குடிமக்கள் அனைவரும், 24 மணி நேரமும் உடல் வெட்ப த்தையும் இதயத்துடிப்பையும் கண்காணிக்கும் பயோமெட்ரிக் வளையலை அணிந்து கொள்ளவேண்டும் என்று ஆணையிடுவதாக கொள்வோம். அதில் இருந்து சேகரிக்கப்படும் தகவல்கள் அரசின் அல்காரிதம்களால் ஆராயப்படுகின்றன.

உங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்ற விவரம் உங்களுக்கு முன்பே அந்த அல்காரிதமிற்கு தெரிந்துவிடும். அத்தோடு, அந்த காய்ச்சலோடு நீங்கள் எங்கெல்லாம் சென்றீர்கள், யாரையெல்லாம் சந்தித்தீர்கள் என்ற தகவல்களையும் அது அறியும். தொற்றுநோயின் சங்கி லிகள் இதன் மூலமாக அதிரடியாக குறைக்கப்படலாம். ஏன், முழுவதுமாக தடுக்கக்கூட படலாம். இதன் மூலமாக கொள்ளைநோய்களின் பரவலை சில நாட்களுக்குள்ளாகவே தடுத்துவிடலாம். கேட்கவே ஆனந்தமாக இருக்கிறது, இல்லையா?

இதன் தீங்கு என்னவெனில், இது, அச்சமூட்டும் புதியவகை கண்காணிப்பிற்கு சட்டப்பூர்வமான ஒப்புதலை அளித்து விடும். உதாரணமாக, நீங்கள் சி. என். என் சுட்டிக்கு பதிலாக பாக்ஸ் நியூஸ் சுட்டியை அழுத்தினீர்கள் என்றால், தற்போதைய கண்காணிப்பு முறைகளை கொண்டு, உங்களின் அரசியல் பார்வை என்ன என்று அறியலாம். இன்னும் கொஞ்சம் முயன்றால், உங்களின் குணவார்ப்பு என்ன என்று கூட உத்தேசிக்கலாம்.

ஆனால் நீங்கள் ஒரு காணொலியை பார்க்கும் பொழுது உங்களது உடல் வெட்பத்திற்கும், இரத்த அழுத்தத்திற்கும், இதயத்துடிப்பிற்கும் என்ன ஆகிறது என்பதை கண்காணி க்க முடிந்தால், உங்களை எது சிரிக்கவைக்கிறது, எது அழ வைக்கிறது, எது உங்களை உண்மையிலேயே கோவமூட்டுகிறது என்பதை அறியலாம். இங்கே நாம் முக்கியமாக உணர வேண்டியது கோவமும், மகிழ்ச்சியும், சலிப்பும், அன்பும், காய்ச்சலையும் இருமலையும் போன்ற உயிரியல் நிகழ்வுகளே. இருமலை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தை கொண்டே சிரிப்பையும் அடையாளம் காணலாம்.

அரசுகளும் பெருநிறுவனங்களும் நமது பயோமெட்ரிக் தகவல்களை ஒட்டுமொத்தமாக அறுவடை செய்யத் துவங்கினால் நம்மை பற்றி நம்மை விட அவர்கள் அதிகம் அறிந்துகொள்வார்கள். நம் உணர்வுகளை கணிப்பதோடு நில்லாமல் நாம் என்ன உணரவேண்டும் என்பதையும் அவர்களால் தீர்மானிக்கமுடியும்.

இதன் மூலமாக நம்மிடம் எதையும் - அது நுகர்பொருளோ அல்லது அரசியல்வாதியோ - அவர்களால் விற்க முடியும் . பயோமெட்ரிக் கண்காணிப்போடு ஒப்பிட்ட்டால் கேம்ப்ரிட்ஜ் அனலிடிக்கா தகவல் ஹாக்கிங் உத்திகள் கற்கால தொழில்நுட்பங்கள் போல தோன்றும். 2030ல் வடகொரியாவை கற்பனை செய்யுங்கள். குடிமக்கள் யாவரும் 24 மணி நேரமும் பரோமெட்ரிக் வளையலை அணிய வேண்டிய நிலை வரலாம். பெரும் தலைவரின் உரையை கேட்டுக்கொன்டிருக்கும் பொழுது அந்த வளையல் ஒரு மனிதரின் கோவத்தை கண்டுணர்ந்த தென்றால் அந்த மனிதரின் நிலை என்ன?

இது போன்ற பயோமெட்ரிக் கண்காணிப்புகள் பேரிடர் காலங்களில் எடுக்கப்படும் தற்காலிக நடவடிக்கைகள் மட்டுமே பேரிடர் கடந்ததும் இவற்றை நீக்கி விடலாம் என்று நீங்கள் வாதிடலாம். ஆனால் தற்காலிக நடவடி க்கைகளுக்கு ஒரு கெட்டப்பழக்கம் உண்டு. பேரிடர் கடந்த பின்னும் அவை அங்கேயே சுற்றிக்கொண்டிருக்கும்.

குறிப்பாக அடுத்த பேரிடர் எப்பொழுது வேண்டுமானாலும் வந்துவிடலாம் அல்லவா?

உதாரணமாக, எனது நாடான இஸ்ரேல், 1948ல் விடுதல ப்போரின் போது அவசரக்கால நிலையை கொண்டுவந்தது. இதழியல் தணிக்கை, நிலம் கையகப்படுத்துதல் முதல் புட்டு சமைப்பதில் மேற்கொள்ள வேண்டிய கட்டுபாடுகள் (விளையாட்டல்ல. உண்மையாகவே) வரை பல்வேறு தற்காலிக நடவடிக்கைகளை இந்த சட்டம் நியாயப்படுத்தியது. போர் முடிந்து ஆண்டுகள் பல ஓடிவிட்டன. ஆனால் இன்னமும் இந்த அவசரகால நிலை விலக்கப்படவில்லை. 1948ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பல “தற்காலிக” நடவடிக்கைகள் இன்னமும் நடமுறையில் இருக்கின்றன. (அந்த புட்டு சமையல் கட்டுப்பாடுகள் 2011ல் ஒரு ஆணையின் மூலமாக கருணையுடன் விலக்க ப்பட்டன).

கொரோனாவைரஸின் பாதிப்பு முற்றிலுமாக குறைந்து விட்டாலும் கூட, சில தகவல் பசியெடுத்த அரசுகள் இந்த பயோமெட்ரிக் கண்காணிப்பு அமைப்புகளை தொடர வேண்டும் என வாதிடலாம். கொரோனாவைரஸின் இரண்டாம் கட்ட தாக்குதல் வரலாம்,. மத்திய ஆப்ரிக்கா வில் புதிய வகை எபோலா உருவாகி இருக்கலாம், அல்லது... காரணங்களா இல்லை ? நமது தனியுரிமையை சுற்றி ஒரு பெரும் போர் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வந்திருக்கிறது. இந்த கொரோனாவைரஸ் சிக்கல் அந்த போரின் திருப்புமுனையாக அமையலாம். ஏனெனில் தனியுரிமையா (Privacy) அல்லது உடல்நலமா என்றால், பெரும்பாலான மக்கள் உடல்நலத்தை தான் தேர்ந்தெடுப்பார்கள்.

சோப் போலிஸ்

 சொல்லப்போனால், தனியுரிமை அல்லது உடல்நலம் இவையிரண்டில் ஏதேனுமொன்றைத் தேர்ந்தெடுங்கள் என மக்களிடம் சொல்வதுதான் பிரச்சினையின் ஆணி வேர்.இந்த தேர்வு அடிப்படையிலேயே போலியானது. தனியுரிமை, உடல்நலம் ஆகிய இரண்டையுமே அனுபவிக்க நம்மால் இயலும். சர்வாதிகார கண்காணிப்புகளை விட மக்கள் அதிகாரத்தை அதிகரிப்பதன் வழியாக நம்மால் இந்த கொரோனாவைரஸ் பரவலை தடுக்கவும் நம் உடல்நலத்தை பேணவும் இயலும். சமீப வாரங்களில் கோரோனாவைரஸ/க்கு எதிரான மிக வெற்றிகரமான செயல்பாடுகளை நிகழ்த்திய நாடுகள் தென் கொரியா, தாய்வான் மற்றும் சிங்கப்பூர். இந்த நாடுகள் சில கண்கா ணிப்பு கருவிகளை பயன்படுத்தி இருந்தாலும், இந்த கருவிகளை விடவும் பரவலான மருத்துவ சோதனைகளை யும், நேர்மையான அறிக்கை சமர்பித்தல்களையும், பொது மக்களின் விருப்பத்தின் பேரிலான ஒத்துழைப்பையும் அதிகமாக நம்பின.

வழிகாட்டு நெறிமுறைகளின்படி மக்களை இயங்கச் செய்வதற்கு, தொடர் கண்காணிப்பும், கடும் தண்டனைக ளும் மட்டும் தான் வழி என்றில்லை . மக்களுக்கு அறிவி யல் உண்மைகள் சொல்லப்பட்டால், அந்த உண்மைகளை சொல்லும் அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கை இருக்கும் பட்சத்தில், மக்கள் இயல்பாகவே இந்த வழிகாட்டு தல்களை பின்பற்றுவர். சுய உந்துதல் உடைய, அறிவார்ந்த மக்கள் கூட்டம் என்னாளும் கண்காணிக்கப்படும் அறியாமை கொண்ட சமூகத்தை காட்டிலும்பலம்வாய்ந்ததாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்.

சோப்பினை கொண்டு கை கழுவுவதை எடுத்துக்காட்டாக கொள்வோம். மனித சுகாதாரத்தின் ஆகப்பெரிய முன்னேற்றங்களில் ஒன்று இது. இந்த எளிய வழிமுறை ஆண்டுதோறும் கோடிக்கணக்கான மக்களை காக்கிறது. இன்று இதை நாம் ஒரு பெரிய விஷயமாக கருதுவதில்லை என்றாலும்,. 19ஆம் நூற்றாண்டில் தான் விஞ்ஞானிகள் சோப்பினை கொண்டு கை கழுவுவதன் முக்கியத்துவத்தை உணர்ந்தனர். அதற்கு முன், மருத்துவர்களும் செவிலியர்க ளும் கூட ஒரு அறுவைசிகிச்சையில் இருந்து மற்றொன்றிற்கு கையை கூட கழுவாமல் தான் சென்றார்கள்.

இன்று கோடிக்கணக்கான மக்கள் உலகமெங்கும் சோப்பினை கொண்டு கை கழுவுவது ஏதோ சோப் போலிஸிக்கு பயந்து அல்ல, உண்மையை அறிந்து கொண்டதனால் தான். எனக்கு வைரஸ்கள், பாக்டீரியாக்கள் பற்றி தெரியும் என்ப தாலும் அந்த நுன்னுயிர்கள் நோய்கள் தரும் என்பது புரிந்ததாலும் சோப் இவற்றை நீக்கும் என்பதை அறிந்ததாலும் தான் சோப் கொண்டு கை கழுவுகிறேன்.

ஆனால் இந்த அளவிலான கீழ்படிதலுக்கும் ஒத்துழைப்பி ற்கும் நம்பிக்கை தேவைப்படுகிறது. மக்கள் அறிவியலை, அரசை மற்றும் ஊடகங்களை நம்ப வேண்டும். கடந்த சில ஆண்டுகளில், பொறுப்பற்ற அரசியல்வாதிகள் அறிவியலின், அரசின், ஊடகங்களின் மீதான நம்பிக்கைகளை திட்டமி ட்டுக் குலைத்திருக்கின்றனர். இப்பொழுது அதே அரசி யல்வாதிகள், பொது மக்களை நம்ப முடியாதென்றும் அதீத கண்காணிப்பே ஒரே வழி என்றும் சொல்லக்கூடும்.

வழக்கமாக, ஆண்டாண்டு கால ங்களாக இழந்த நம்பிக்கையை ஒரே நாளில் மீட்டுவிட முடியாது. ஆனால் இது வழக்கமான காலம் அல்ல. பல்லாண்டுகளாக தீவிரமாக சண்டையிட்ட உடன் பிறந் தோருடன், ஏதோ ஒரு இடர் பொழுதில், மனதில் அக்கரை யும் நம்பிக்கையும் துளிர்க்க, பாய்ந்து சென்று ஒருவருக்கு ஒருவர் உதவுவதில்லையா? ஒரு கண்காணிப்பு ஆட்சி முறையை கட்டி எழுப்புவதற்கு பதில் அறிவியலின் மீதும் பொதுத்துறைகளின் மீதும் ஊடகங்களின் மீதுமான மக்களின் நம்பிக்கையை வளர்தெடுக்கும் பணியினை செய்யலாம். அதற்கு இன்னமும் காலம் இருக்கிறது.

நாம் நிச்சயம் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும். ஆனால் அத்தொழில்நுட்பங்கள் மக்களின் அதிகாரத்தை வளப்படுத்துமாறு அமையவேண்டும். எனது உடல் வெட்பத்தையும் இரத்த அழுத்தத்தையும் தொடர்ச்சியாக கண்காணிப்பதில் எனக்கு உடன்பாடு தான். ஆனால் அப்படி சேகரிக்கப்படும் தகவல்கள் ஒரு சர்வ வல்லமை பொருந்திய அரசின் உருவாக்கத்திற்க்காக இருக்கக்கூடாது. மாறாக, அந்த தகவல்கள் என்னை மேலும் தெளிவாக சுயதேர்வுகள் எடுக்க உதவுவதாகவும், அரசை தன் முடிவுகளுக்கு பொறுப்பேற்க செய்வதாகவும் இருக்க வேண்டும். எனது உடல்நலத்தை 24 மணி நேரமும் என்னால் கண்காணிக்க முடியும் என்றால், அத்தகவல்களை கொண்டு நான் பிறரது உடல்நலத்திற்கு ஆபத்தாக இருக்கிறேனா என்பதை மட்டுமல்ல, எனது எந்த பழக்கங்கள் என் உடல்நலத்திற்கு உதவுகின்றன என்பதையும் உணர முடியும். கொரோனாவைரஸ் பரவலை குறித்த நம்பகமான புள்ளி விவரங்களை என்னால் அணுகவும் பகுத்தாயவும் இயலுமென்றால், அரசு உண்மையை சொல்கிறதா, நோய் பரவலை தடுக்க அரசு எடுக்கும் முயற்சிகள் பலன் அளிக்கின்றனவா என்று என்னால் கண்டு கொள்ள முடியும். மக்கள் கண்காணிப்பை பற்றி பேசும் பொழுது, ஒன்றை உணர வேண்டும். கண்கா ணிப்பு தொழில்நுட்பம் மக்களை அரசு கண்காணிக்க மட்டுமல்ல, அரசை மக்கள் கண்காணிக்கவும் பயன்படலாம்.

இந்த கொரோனாவைரஸ் கொள்ளை நோய் நம் குடிமை க்கு விடுக்கப்பட்ட பெரும் சவால். இனி வரும் நாட்க ளில், நீங்கள் ஒவ்வொருவரும் சதி கோட்பாடுகளையும் சுயநல அரசியல்வாதிகளையும் விட அறிவியல் தகவல்களையும் சுகாதார நிபுணர்களையும் நம்பவே ண்டும். இந்த சரியான தேர்வை நாம் இப்பொழுது எடுக்கா மல் போனால், நம் சுகாதாரத்தைக் காக்க ஒரே வழி என்று நினைத்து விலைமதிப்பில்லாத நமது சுதந்திரத்தை, இலவசமாக விற்றவர்கள் ஆகிவிடுவோம்.

 

நமக்கு தேவை ஒரு உலகலாவிய திட்டம்

நம் முன் இருக்கும் இரண்டாவது மிகப்பெரிய தேர்வு தேசியவாத தனிமைப்படலுக்கும் உலகலாவிய ஒற்றுமைக்குமானது. இந்த கொள்ளைநோயும், அதனால் விளையப்போகும் பொருளாதார வீழ்ச்சியும் உலகலாவிய சிக்கல்கள். அவற்றை உலகலாவிய ஒத்துழைப்புடன் தான் தீர்க்க முடியும். மிக முக்கியமாக, இந்த வைரஸை வீழ்த்த அனைத்து நாடுகளும் தகவல்களை பரிமாறிக்கொள்ள வேண்டும். இதுவே வைரஸ்களிடம் இல்லாத, ஆனால் மனிதர்களு க்கு இருக்கும் வசதி.சீனாவில் இருக்கும் ஒரு கொரோனா வைரசும் அமெரிக்காவில் இருக்கும் ஒரு கொரோனாவைரசும் மனிதர்களை எப்படி தாக்குவது என்பதை பற்றிய குறிப்புகளை பரிமாறிக்கொள்ள முடியாது. ஆனால் சீனா, அமெரிக்காவிற்கு கொரானாவைரஸ் குறித்தும் அதை எதிர்கொள்வது குறித்தும் பல தகவல்களை கற்றுத் தர முடியும். காலையில் மிலானில் ஒரு இத்தாலிய மருத் துவர் கண்டுபிடிக்கும் ஒரு தகவல் மாலையில் தெஹரானில் உயிர்களை காக்க உதவலாம். இங்கிலாந்து அரசு பல்வேறு கொள்கை முடிவுகளை எடுக்க தயங்கும் பொழுது அதே போன்ற சிக்கல்களை முன்னர் சந்தித்த கொரிய அரசு அறிவுரை வழங்கலாம். இது நிகழ, உலகலாவிய ஒத்துழைப்பும் நம்பிக்கையும் தேவை.

நாடுகள் தங்களிடம் உள்ள தகவல்களை வெளிப்படையாக பகிர வேண்டும். அடக்கத்துடன் அறிவுரைகள் கேட்க வேண்டும், பிற நாடுகளிடம் இருந்து பெறும் தகவல்களை நம்பவேண்டும். மருத்துவ கருவிகளை தயாரிக்கவும் வினியோகிக்கவும் உலகலாவிய முயற்சி தேவை. குறிப்பாக மருத்துவ சோதனை கருவிகள் மற்றும் மூச்சு இயந்திரங்கள். ஒவ்வொரு நாடும் தனக்கான தேவைகளை தானே உற்பத்தி செய்துகொண்டு, தேவைக்கதிகமான கருவிகளை தானே பதுக்கிக்கொள்வதை விட உலகலாவிய ஒருங்கிணைக்கப்பட்ட முயற்சியின் மூலம் கருவிகளின் உற்பத்தி வேகத்தை அதிகரிப்பதோடு உயிர்காக்கும் கருவி களை தேவைக்கேற்ப நியாயமான முறையில் வினியோகி க்கவும் முடியும். போர் காலங்களில் நாடுகள் தங்களின் முக்கியமான தொழில்களை தேசியமயமாக்குவதை போல கொரோ னாவைரசுக்கு எதிரான மனிதர்களின் இந்த போரில் மிக முக்கியமான உற்பத்திகள் மனிதமயமாக்கப்பட வேண்டும். மிக சில நோயாளிகளை மட்டுமே கொண்ட ஒரு வளம் மிகுந்த நாடு, மிக அதிகமான நோயாளிகளை கொண்ட வளம் குறைந்த நாட்டிற்கு அத்தியாவசிய கருவி களை கொடுத்துதவ வேண்டும். இதை, தனக்கு ஒரு பிரச்சனை வரும் பொழுது பிற நாடுகள் உதவும் என்ற நம்பிக்கையுடன் செய்ய வேண்டும்.

நாம் உலகவாவிய ஒரு மருத்துவர் குழுவை குறித்தும் சிந்திக்கலாம். குறைவாக பாதிப்பிற்கு உள்ளான நாடுகளில் இருந்து மருத்துவர்கள் அதிக பாதிப்படைந்த நாடுகளுக்கு சென்று உதவலாம். இது உதவியாகவும் இருக்கும், அதே நேரம் இந்த சிக்கலை எதிர்கொள்ள தேவையான அனுபவமும் அவர்களுக்கு கிடைக்கும்.

பொருளாதார பிரச்சனைகளுக்கும் இது போன்ற உலகலபாவிய ஒத்துழைப்பு தேவை. உலக பொருளாதாரமும் வினி யோக தொடர்களும் (Supply chains) செயல்படும் விதத்தையும் கணக்கில் கொண்டால், ஒவ்வொரு அரசும் மற்ற நாடுகளை பற்றி சிந்திக்காமல் தனியாக செயல்படுவது குழப்பத்தை விளைவித்து இந்த சிக்கலை மேலும் ஆழமாக்கவே உதவும். நமக்கு ஒரு உலகலாவிய திட்டம், அதுவும் மிக விரைவாக, தேவை.

இப்போதைய மற்றொரு தேவை, பயணம் குறித்த ஒரு உலகலாவிய ஒப்பந்தம். மாதக்கணக்கில் பன்னாட்டு பயணங்களை ரத்து செய்வது சிக்கலை பெரிதாக்கி கொ ரோனாவைரசுக்கு எதிரான இந்த போரிற்கு இடரையே விளைவிக்கும். அத்தியாவசியமான பயணிகளை (விஞ்ஞானிகள், மருத்துவர்கள், பத்திரிக்கையாளர்கள், அரசியல்வாதிகள், வணிகர்கள்) மட்டுமாவது பயணம் செய்ய அனுமதிக்கக்கூடிய ஒத்துழைப்பை நாடுகள் நல்க வேண்டும். அவர்கள் தங்களின் நாடுகளில் இருந்து கிளம்பும் பொழுது கடைபிடிக்க வேண்டிய மருத்துவ பரிசோதனைகளை குறித்த உலகலாவிய உடன்படிக்கை ஏற்பட்டால், அவர்கள் சென்றிரங்கும் நாடுகள் அவர்களை ஏற்றுக்கொள்வது எளிதாகும்.

துரதிர்ஷ்டவசமாக, தற்பொழுது நாடுகள் இவற்றில் பலதை செய்வதில்லை. சர்வதேச சமூகம் முடக்குவாதம் வந்ததை போல இருக்கிறது. அறையினில் பொறுப்புமிக்க பெரிவர்கள் யாருமே இல்லை என்பதை போல தோன்று கிறது. வாரங்களுக்கு முன்பே உலக தலைவர்களின் அவசர சந்திப்பு நிகழ்ந்திருக்கும் என்றும் நாம் நினைப்போம். ஆனால், இந்த வாரம் தான் ஜி7 நாடுகளின் தலைவர்கள் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாக சந்தித்திருக்கிறார்கள். அதிலும் கூட முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை .

 முந்தைய உலகலாவிய பேரிடர்களின் போது (உதா: 2008 பொருளாதார நெருக்கடி, 2014 எபோலா கொள்ளைநோய்) அமெரிக்கா உலக தலைமை பொறுப்பை ஏற்றுக் கொ ண்டது. ஆனால் தற்போதைய அமெரிக்க அரசு அந்த பொறுப்பில் இருந்து விலகிவிட்டது. மானுடத்தின் எதிர்கா லத்தை விட அமெரிக்காவின் மேன்மையே தனக்கு முக்கி யம் என்பதை அது தெளிவுபடுத்திவிட்டது.

இந்த அமெரிக்க அரசு தனது நெருங்கிய கூட்டாளிகளை யும் கூட கைவிட்டு விட்டது. ஐரோப்பிய ஐக்கியத்தில் இருந்து அனைத்து பயணங்களையும் அது ரத்து செய்த போது, ஐக்கிய ஐரோப்பாவை கலந்தாலோசிப்பதை விடுங்கள், முன்கூட்டியே அறிவிப்பினை கூட அது தரவி ல்லை. கொரோனாவைரஸ் தடுப்பூசிக்கான ஏகபோக உரிமைக்காக அமெரிக்கா, ஒரு ஜெர்மானிய மருந்து தயா ரிப்பு நிறுவனத்திற்கு 1 பில்லியன் டாலர் வழங்க விரும்புவதாக கூறப்படுகிறது. தற்போதைய அமெரிக்க அரசாங்கம் தலைமை ஏற்க ஒரு வேளை நினைத்து, உலகலாவிய செயல் திட்டம் ஒன்றை முன்வைத்தாலும் கூட, பொறுப்பை ஏற்காத, தவறுகளை ஒப்புக்கொள்ளாத, பழியினை பிறர் மேல் போட்டுவிட்டு வெற்றிகளுக்கு மட்டும் தன்னை முன் நிறுத்திக்கொள்ளும் ஒரு தலைவரை அதிக நாடுகள் பின் தொடராது. அமெரிக்கா விட்டுச் சென்ற இந்த பாழ்வெளியை வேறு நாடுகள் நிரப்பவி ல்லை என்றால், தற்போதைய இந்த கொள்ளைநோயை தடுப்பது கடினமாவதோடு, இனி வரும் ஆண்டுகளில் உலக நாடுகளுக்கிடையிலான உறவுகளை கெடுக்கவும் செய்யும். எனினும், ஒவ்வொரு நெருக்கடியும் ஒரு வாய்ப்பும் கூட. மனித இனத்திற்கு இந்த உலகலாவிய ஒற்றுமையின்மையால் விளையக்கூடிய தீமைகளை இந்த கொரோனாவைரஸ் உணரவைக்கும் என்று நம்புவோம்.

மனித இனம் இப்பொழுது ஒரு தேர்வை செய்தாக வேண்டும். இந்த ஒற்றுமையின்மையின் பாதையிலேயே பயணிக்கப்போகிறோமா அல்லது உலக ஒற்றுமைக்கான ஒரு புதிய பாதையை சமைக்கப்போகிறோமா? ஒற்றுமையின்மையை தேர்வு செய்தால், தற்போதைய சிக்கலில் இருந்து வெளியேறுவதற்கு தாமதமாவது மட்டுமல்ல, எதிர்காலத்தில் மேலும் பல பேரிடர்களை சந்திக்கவும் நேரிடும். உலக ஒற்றுமையை தேர்ந்தெடு த்தால், அது இந்த கொரோனாவைரஸ/க்கு எதிரான வெற்றியாக மட்டும் அல்ல் 21ஆம் நூற்றாண்டில் மனித குலம் காணப்போகும் எல்லா கொள்ளைநோய்களுக்கும் பேரிடர்களுக்கும் எதிரான வெற்றியாக அமையும்.

 ஆங்கில மூலம்: https://www.ft.com 

மூலம்:- ஆசிரியம்

 

 

 

 

கட்டுரைகள்

சிகிரியா ஒரு பழங்கால மலை பாழடைந்த கோட்டையாகும், இது ஒரு அரண்மனையின் எச்சங்களுடன் அமைந்துள்ளது மத்திய பகுதிஇலங்கையில் மாத்தளை. இந்த அற்புதமான கல் கோட்டை தோட்டங்கள், குளங்கள் மற்றும் பிற...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் நுண் அறிவு என்பது புரிந்து கொள்ளும் திறன், தொடர்பு கொள்ளும்திறன், கருத்தியல் சிந்தனை திறன் போன்ற திறன்களின் தொகுப்பாகும். நுண் அறிவின் அளவை உளவியல் வல்லுனர்கள் நுண் அறிவு...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் "ஆக்கம், விரிசிந்தனை, தற்துணிவு, தீர்மானம் எடுத்தல், பிரச்சினை விடுவி;த்தல், நுணுக்கம் மற்றும் பகுப்பாய்வு சிந்தனை, அணியினராக வேலை செய்தல், தனியாள் இடைவினைத் தொடர்புகள்,...

கல்வி என்பதற்குப் பொதுவான பல வரையறைகள் உள்ளன. எல்லா வரையறைகளும் பொதுவான ஒரு கருத்து, நடத்தையில் விரும்பத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்துவதுதான் கல்வி. கல்வி என்பது வெறும் அறிவு மட்டுமல்ல, பண்புகள்,...

ஜப்பானிய ஆரம்பக்கல்வி உலகப்புகழ் வாய்ந்தது; அதற்கு ஒரு காரணம் அந்நாட்டின் கல்வி முறையில் காணப்படும் சமத்துவ அம்சம். ஆற்றல்களின் அடிப்படையில் மாணவர்களைப் பிரித்து வைத்துக் கற்பிக்கும் முறைமை...

"வரலாற்றுச் செயற்பாடுகள் என்பன வெறும் சம்பவங்களல்ல. அவற்றுக்கு ஓர் உட்புறம், அதாவது ஒரு சிந்தனைப் புறம் உள்ளது." ஆர். சி. கொலிங்வூட்வரலாற்றியலறிஞர். பெரிதும் விவாதிக்கப்பட்டுள்ள இந்த மேற்கோள்...

- கார்த்திகேசு சிவத்தம்பி -  யாழ்ப்பாணத்தின் பண்பாட்டு அமிசங்களில் கண்டதுண்டு, கேட்டதில்லை" யாகவுள்ளனவற்றுள் ஒன்று, யாழ்பாணச் சமூகத்தின் யதார்த்தபூர்வமான சித்திரிப்பு ஆகும். நம் கண்முன்னே...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் இலங்கையில் பொதுக் கல்வித் துறையில் மாணவர்களது கல்வி விருத்தியில் முக்கியமான செயற்பாட்டு அம்சம் கலைத்திட்ட அமுலாக்கம் ஆகும்.  கலைத்திட்ட அமுலாக்கமானது திட்டமிடப்பட்ட...

வாழ்க்கைமுறை

ஒரு கிலோ பசும் சாணத்தில் இருந்து ஒரு கன அடி சாண எரிவாயு உற்பத்தி செய்யலாம். ** ஒரு மாடு தினசரி 10 கிலோ சாணம் இடும் எனில் , 10 மாடுகள் இடும் சாணம்,...

-தமிழ்- " நீங்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் காரணமாக உங்கள் மீதும் கரி பூசப்படலாம்; நீங்கள் கீழே போட்டு மிதிக்கப்படலாம் அல்லது அடித்து நொறுக்கப்படலாம். இந்த மாதிரியான நிலைமைகளில் நீங்கள் உங்களைப்...

- தமிழ் - "சம்பளம் உங்களுக்கு உதவலாம். ஆனால் இலாபம் உங்களுக்கு உயர்ந்த அதிர்ஷ்டம் நல்கும்" சீனாவின் பெரிய செல்வந்தர் ஜாக் மா வின் கூற்றின்படி குரங்கிற்கு முன்பாக பணத்தையும் வாழைப்பழத்தையும்...

பதட்டம், பல்வேறு நிலைகளில் பல்வேறு விதங்களில் மனிதர்களைப் பாதிக்கிறது. பதட்டம் என்பது ஒரு மனநோயன்று.ஆனால், அதைத் தொடக்கத்திலேயே நாம் கிள்ளியெறிய மறந்தால் அது மனநோய்க்கு வித்தாகிவிடக்கூடும். எனவே...

தடங்கள்

வி.அனோஜன் "நேரம் என்பது இவரது வாழ்வின் முக்கிய உயிர்நாடி. பாடசாலை என்றாலும் சரி ஆலயம் என்றாலும் சரி ஊரின் சமூகசேவை விடயங்கள் என்றாலும் சரி கடிகாரத்தின் முட்களை விட வேகமாகச்சுழன்று முன்வரிசையில்...

ச. தேவமுகுந்தன் ஆறுமுகம் சரஸ்வதி தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாக உதித்தவர் திருமுருகன். தாயும் தந்தையும் ஆசிரியர்கள் என்பதோடு சைவ பாரம்பரிய குடும்ப பின்னணியையும் கொண்டவர்கள், அன்பும் பண்பும்...

18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் – 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர்....

- மதுசூதனன் தெ. -  பத்தொன்பதாம் நூற்றாண்டிலே மகா வித்துவான்கள், புலவர்கள், கணக்காயர்கள், கவிராயர்கள் போன்றோர்கூடப் பழந்தமிழ் நூல்கள் பற்றிப் பெருமளவு அறியாமையில் மூழ்கிக் கிடந்தனர்....

சினிமா

சினிமா

ஐம்பது வயது நந்து (பார்த்திபன்) ஒரு சினிமா ஃபைனான்சியர். அவரிடம் வட்டிக்குப் பணம் வாங்கி படமெடுத்த இயக்குநர், அதைத் திருப்பிக் கொடுக்க முடியாததால் மனைவியுடன் தற்கொலை செய்துகொள்கிறார். அந்த மரணம்,...

சினிமா

பொறியியல் படிப்பை கஷ்டப்பட்டு முடித்த கார்த்திக்கிற்கு (ஹரீஷ் கல்யாண்) திருமணம் செய்துவைக்க பெற்றோர் முடிவெடுத்து, பெண் பார்க்கப் போகிறார்கள். ஆனால், தவறான வீட்டிற்குப் போய்விடுகிறார்கள்....

சினிமா

இந்த உலகம் இயங்குவதே பற்றுதலால் தான். ஏதோவொன்றின் மீது நாம் கொண்டிருக்கும் பற்றுதான் நம்மை, அதை நோக்கி இழுத்துச் செல்கிறது. பிடித்தோ பிடிக்காமலோ, எல்லாவற்றையும் மீறி நம்மை அதன்மீது பற்றி அழுந்தச்...

சினிமா

சினிமா என்பது பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி சமூகத்துக்குப் பல விஷயங்களைப் போதிக்கும் தளமாகவும் இருக்கிறது. அதனால் அடுத்த 18 நாட்களும் உலக அரங்கில் வெளிவந்த வைரஸ் தொற்று பற்றிய தரமான உலக சினிமாவைப்...

ஆன்மீகம்

நயினா தீவு நாகபூசணி அம்மன் கோயில் இலங்கை, யாழ்ப்பாண மாவட்டத்தில், நயினா தீவில் உள்ள ஒரு புகழ் பெற்ற இந்து கோயில் ஆகும். நயினாதீவு பல்வேறு வகையிலும் சிறப்புப்பெற்ற தீவாகக் காணப்படுகின்றது....

உளவியல்

சபா.ஜெயராசா ஓய்வுநிலை பேராசிரியர் சீர்மியம் அல்லது உளவளத்துணை என்பதை மேலைத்தேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட செயல்வவமாக காட்டும் முயற்சியைப் பல்கலைக்கழகங்களில் உள்ளவர்களும், தொண்டு...

சபா.ஜெயராசா ஓய்வுநிலை பேராசிரியர் உளவியல் என்பது வரலாற்று வளர்ச்சியுடனும் பண்பாட்டு இறுக்கங்களுடனும் கட்டுமை (CONSTRUCT) செய்யப்பட்ட வடிவமாக உள்ளது. அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு அனுசரணையான பிரயோக...

புத்தகங்கள்

நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை உருவாக்குவது மட்டும் அல்ல ஒரு பள்ளியின் கடமை. விளையாட்டு வீரனை, நல்ல படைப்பாளியை, நல்ல பேச்சாளனை, நல்ல கவிஞனை, நல்ல நடிகனை, நல்ல சமூகப் போராளியை, நல்ல தலைவனை...

- அலெக்ஸ் பரந்தாமன்- ஈழத்து எழுத்தாளர் மா.சிவசோதி அவர்களின் இரண்டாவது சிறுகதைத்தொகுப்பும் மூன்றாவது வெளியீடுமாக பொதுவெளிக்கு வந்துள்ளது. ஜீவநதி வெளியீடாக 104 பக்கங்களுடன், 350/= விலையைத் தாங்கி...

குழந்தை ம.சண்முகலிங்கம்  அரங்கியல் பற்றிய அறிவுத்தேடல் அவசியப்பட்டுக் கொண்டு செல்லும் இக்காலக்கட்டத்தில் ''அரங்கியல்" என்று தலைப்பிடப்பட்ட இத்தொகுப்பு முக்கியமானதொரு படைப்பாக அமையும் எனக்...

தமிழ்த்தத்துவங்கள்

{youTube}/1qJxh6BaI74{/youtube}நான் பணக்கார அப்பாவின் பிள்ளை அல்ல. படிப்பிலும் அவ்வளவு சுட்டி இல்லை. மூன்றுமுறை பல்கலைக்கழக தேர்வில் தோல்வி அடைந்திருக்கிறேன். 10 முறை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சேர...

1. போர் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல், அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத போர். —மா சே துங 2. துப்பாக்கியைக் கொண்டே உலகமுழுவதையும் திருத்தி அமைக்கலாம் என்று நம்மால் சொல்ல முடியும். போரைக் கொண்டே போரை...

X

Right Click

No right click