Skærmbillede 1036கலாநிதி க. சுவர்ணராஜா
ஓய்வு நிலைப் பீடாதிபதி

ஒரு பிள்ளை புதுமையான முறையிலே செயலாற்றுவதனை நாம் சந்திக்கும் சந்தர்ப்பங்களில் , அதாவது அப்பிள்ளையின் சிந்தனையோ, செயலோ வழமையாக நாம் எதிர்பார்க்கின்ற நிலைப்பாட்டிலிருந்து வேறுப்பட்டுக் காணப்படும்போது அப்பிள்ளை படைப்பாற்றல் உள்ளவனெனக் குறிப்பிடுகின்றோம்.

(பேராசிரியர்.க.சின்னத்தம்பி)  ஆக்கமலர்ச்சியை மேலெழச் செய்தல் கற்றல் கற்பித்தலின் உன்னத வெளிப்பாடாகக் கொள்ளப்படுகின்றது. (முனைவர்.சபா.ஜெயராசா) ஆக்கத்திறன் ,புதியவனவற்றைப் புனையும் திறன் போன்ற சொற்கள் கல்வியுலகத்தில் இன்று பரவலாக பயன்படுத்தப்படுகின்றது. (முனைவர்.பெ.பாஸ்கரன்)

வரைவிலக்கணங்கள்

1. ஆக்கத்திறன் என்பது நெகிழும் தன்மை, புதியன புனையுந்திறன், நுண்ணுணர்வு ஆகியவற்றின் சேர்க்கையாகும்.-ஜோன்ஸ்-
2. ஆக்கத்திறனானது புதிய கருத்துக்கள், அகக்காட்சி கண்டுபிடிப்புக்கள் அல்லது கலைத்தன்மை கொண்ட பொருட்களை ஆக்குதலுக்கான மனித ஆற்றலைக் குறிக்கின்றது.-வேணனன்-
3. பிரச்சினைகள் குறித்த நுண்ணுணர்வு, எண்ணங்களில் தடங்கலின்மை, நெகிழ்ச்சி புதியன புனையுந்திறன், மீள்வரைவிலக்கணங்கள், மீள் ஒழுங்குபடுத்தும் ஆற்றல், கிரகிக்கும் ஆற்றல், தொகுப்பு முடிவுக்கு வருதல் ஆகியன ஆக்கத்திறன்.-கில்பேர்ட்-
4. ஆக்கதிறனை ஒரு ஆக்கச் செயல் என தீhமானிப்பதற்கு நான்கு நியதிகளைப் பயன்படுத்த முடியும். அவையாவன புதுமை, பொருத்தமானதன்மை, மாற்றிப்பயன்படுத்துதல், சுருக்குதல் எனபனவாகும் புதுமை (தனித்தன்மை) பொருத்தமானதன்மை (தேவைகளுக்கு விருப்பங்களுக்குப் பொருத்தமானது.) மாற்றிப்பயன்படுத்துதல் (அணுகுமுறையில் தீவிர இடப்பெயர்ச்சி) சுருக்குதல் (மிகச்கச்சுருக்கம்) -ஜக்சன் மற்றும் மெஸிக்

ஆக்கத்திறனின் இயல்புகள்

1. ஒரு செயல்முறை
2. தனிச்சிறப்புடைய கற்பனை
3. பெறுமானம் உண்டு
4. தனித்துவமானது
5. விரிசிந்தனையுடன் தொடர்புடையது.
6. புதுமைகளின் விளைவுகளுக்கு வழிவகுக்கும்
7. சிந்தனை வளர்ச்சியுடன் தொடர்புடையது.
8. நுண்மதியுடன் கட்டாய தொடர்பு இல்லை.
9. மனித முன்னேறத்திற்கு ஆதாரமானது


ஆக்கத்திறனின் முக்கிய பண்புகள் (கில்பேர்ட்)

1. பிரச்சினைகள் பற்றிய நுண்ணுணர்வு (Sensitivity)
2. தடையின்றி துரிதமாக சிந்தித்தல் (Ideational fluency )
3. சிநதனையில் நெகிழ்ச்சி (Flexibility)
4. தனித்தன்மை ( Originality)
5. அக்காட்சி தாவல் ( Intuitive)
6. விடா முயற்சி (Persistence)
7. தன்னம்பிக்கை ( Self — Confidence)
8. புதிய தொடர்புகளைக் காணவிழைதல் (Seeking new relationship)


ஆக்கத்திறனின் எளிய நிலையிலிருந்து மிக உயர்ந்த நிலை வரையிலான 5படி நிலைகள்.

1. வெளிப்பாட்டு நிலை- கற்பனை விளையாட்டு (சுதந்திர வெளிப்பாடு)
2. ஆக்கநிலை — கைப்பணிப்பொருட்கள் (நுட்ப பிரயோகம்)
3. கண்டுபிடிப்பு நிலை- ஒரு கலை அல்லது. ஓவியம் (புதுமை படைக்கும் திறன்)
4. புத்தாக்க நிலை- மோட்டார் இயந்திரம் (மரபிலிருந்து விலகல்)
5. உடன் தோன்றும் நிலை — கோட்பாடு கண்டுபிடிப்பு
மாணவர்களின் ஆக்கத்திறன் விருத்தியை ஊக்குவிக்கக்கூடிய வகுப்பறை செயற்பாடுகள்.
1.வினாக்கள் கேட்க மாணவர்களை தூண்டுதல்
2.மாணவர்களின் புதிய கருத்துகளுக்கு பெறுமதி அளித்தல்
3.செயற்றிட்ட வேலைகள் முலம் சுயகற்றலை ஊக்குவித்தல்
4.வாசிக்க ஊக்கம் கொடுத்தல்
5.சிந்தனை சக்தியை தூண்டுதல்
6.ஆர்வமான விடயங்கள் பற்றி கலந்துரையாடல்
7.அடைவுகளுக்கு உரிய கணிப்பைக் கொடுத்தல்


மாணவர்களின் ஆக்கத்திறன் விருத்தியைத் தடைசெய்யக்கூடிய வகுப்பறைச்செயற்பாடுகள்
1.நெகிழ்ச்சியற்ற நேர அட்டவணை
2.தடையற்ற வகுப்பேற்றம்
3.இரட்டிப்பு வகுப்பேற்றம்
4.பரீட்சை சித்திக்கு முக்கியத்துவம்
5.ஆசிரியர் மைய பாடவிதானம்
6.பிழையான ஆசிரியர் மனப்பாங்கு
ஆக்கத்திறனுடைய ஆரம்பப்பாடசாலை மாணவர்கள்
1. நன்றாக செயற்படுவார்கள்
2. சுற்றாடலில் மிக ஆர்வம்
3. நல்ல ஞாபகசக்தி
4. சொற்களஞ்சியத்தை விரைவாகப்பெறல்
5. கவிதைகளை ஞாபகத்தில் வைத்திருத்தல்
6. பொருட்களை ஆராய்வதில், கையாள்வதில் விருப்பம்
7. விடயங்களை விரைவில் விளங்கிக்கொள்ளும் திறன்

ஆக்கத்திறனுடைய இடைநிலை மாணவர்கள்
1. கடினமான வேலைகளை இலகுவில் செய்வர்
2. சோர்வடையாது வேலையை நிறுத்துவர்
3. விரைவாக கிரகிப்பு
4. புதிய தொடர்புகளை இனங்காணல்
5. கல்வி செயற்பாடுகளில் அதிக புள்ளிகள் பெறுதல்
6. சொற்களஞ்சிய விருத்தி
7. கண்டுபிடிப்பு
8. புதிய கருத்துகளை, வினாக்களை உருவாக்கும் திறன்
9. தலைமைத்துவம்
பிள்ளைகளின் ஆக்கத்திறனை விருத்தி செய்வதற்குரிய 10 பண்புகள்
1. அறிவுடைநிலை
2. விடாமுயற்சி
3. ஆபத்து நிலைகளை எதிர்நோக்கல்
4. நுண்ணுணர்வு
5. கற்பனை
6. ஆர்வம்
7. தடையற்ற சிந்தனை
8. சிந்தனை நெகிழ்ச்சி
9. புதியன புனையுந்திறன்
10. முழுமையாக்குதல் அல்லது விரிவாக்குதல்

ஆக்கத்திறனின் முக்கியத்துவம்
1. பொருளாதார வளர்ச்சி மற்றும் மனித மேம்பாடு என்பவற்றிக்காக தேசிய மற்றும் உலக அளவில் ஆக்கத்திறன் பற்றிய தேர்ச்சி முக்கியமானது.
2. ஆனால் ஆக்கத்திறன் ஒரு தனியாள் மட்டத்திலும் முக்கியமானது என்பதற்கான அங்கீகாரம் அதிகரித்து வருகிறது.
3. ஆக்கத்திறன் கற்பவர்களின் சுயமரியாதை, உந்துதல் மற்றும் சாதனை ஆகியவற்றை மேம்படுத்துகிறது.
4. ஆக்கப்பூர்வமாக சிந்திக்க ஊக்குவிக்கப்படும் மாணவர்கள் தங்களைத் தாங்களே கண்டுபிடிப்பதில் அதிக ஆர்வம் உடையவர்களாக உள்ளனர்
ஆக்கத்திறன் பின்வரும் தேர்ச்சிகளை மனிதர்களிடம் உருவாக்கும்
1. புதிய சிந்தனைகளை முன்வைத்தல்
2. பிர்ச்சினை தீர்த்தல்
3. மற்றவர்களுடன் இணைந்து பணியாற்றல்
4. பயனுள்ளசெயற்பாடுகளில் சுயமாக ஈடுபடல்
5. மாற்றங்களுக்கு இலகுவாக ஈடு கொடுத்தல்
6. கற்றல் உரிமைகளை அடைதல்
7. சுய உற்பத்தியில் ஈடுபடல்
8. மாற்று கருவிகளை உருவாக்குதல்
9. இடர் காலங்களில் துணிவுடன் பணியாற்றல்


ஆக்கச்செயற்பாட்டின் படிநிலைகள்
1. ஆயத்தநிலை
• கற்பனை விளையாட்டு
• பந்திக்கு தலைப்பிடுதல்
• பாடம் பற்றிய கருத்துக்களைக்கூறல்
• பல்வேறு தீர்வுகளில் ஒன்றைத்தெரிதல்
2. உள்வளர்ச்சிப் படிநிலை
• தீர்வுகாணப்படாத பிரச்சினைகள் மனதில் அடக்கப்பட்டு சிந்திப்போருக்கு தெரியாதவகையில் தீர்வு காணப்படல்.
3. ஒளிர்தல் படிநிலை
• உள்வளர்ச்சிப்படிநிலையில் இறுதித்தீர்வுக்கான தகவல் ஒழுங்கமைப்பு உருவாகி சடுதியாக நனவு நிலைக்கு வருதல்
4. உறுதிப்படுத்தல் படிநிலை
• சடுதியாக வெளிவரும் தீர்வுகளின் பொருத்தப்பாடு பற்றி அலசி ஆராய்தல் ,ஒவ்வொரு படியிலும் எவ்வளவு காலத்தை செலவிடுகின்றனர் என்பது ,ஒருவரின் இயல்புகளில் தங்கியுள்ளன.
சிலர் விரைவாக இயங்கலாம்
ஆக்கமும் நுண்மதியும்
ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையது என பல ஆய்வுகள் — ஆனால் ஒன்றில் ஒன்று பெரிதும் தங்கியிருக்கவில்லை.
உயர்நுண்மதிப்பு — படைப்பாற்றல் இல்லாதிருக்கலாம்.


ஆக்கமும் வகுப்பறை ஒழுங்கமைப்பும்
1. சுதந்திரமான சூழலில் தொழிற்படும் வாய்ப்பு பிழையான தீர்வுகளை முடிவுகளை கண்டிக்காமை.
2. தீர்வுகளை விரைவாக முன்வைக்கும்படி வற்புறுத்தாமை.
3. முறைசாரா ஒழுங்கமைப்பு (சான்று கிடையாது)
4. கடின உழைப்பு
5. நீடித்த பயிற்சி
6. நெகிழ்ச்சியான நேரசூசி
7. நேர்நிலை நோக்கு


வகுப்பறையில் மாணவர்களின் ஆக்கத்திறனை விருத்தியாக்கவதற்கான உதவுமுறைகள்
1. கனிவுள்ள ஒத்துணர்வுள்ள ஏற்றுக்கொள்ளும் சூழலை உருவாக்குங்கள்.
2. மாணவர்களின் யோசனைகளுடன் இணைந்து செயற்படுங்கள்
3. மாணவர்களின் சுயாட்சியை ஊக்குவிக்க தயங்காதீர்கள்
4.  ஆக்கச்சிந்தனையை மேம்படுத்துவதற்கான ஒப்படைகளை வழங்குங்கள்
5.  மாணவர்களின் ஆக்கத்திறன் குறித்து நேரடியாக வெளிப்படையாகக்கருத்து தெரிவியுங்கள்
6.  பொருத்தமான ஆக்கப்பூர்வதன்மை பற்றி மாணவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
7. கற்பித்தலில் ஆக்கபூர்வமான அறிவுறுத்தல் உத்திகள், மாதிரிகள் மற்றும் முறைகளைப் பயன்படுத்துங்கள்
8. ஆக்கத்துடன் இணைந்துள்ள தவறான நடத்தைகளிலிருந்து விடுபட உதவுங்கள்.
9.  மாணவர்களின் உள்ளார்ந்த உந்துதல்களை பாதுகாத்து நெறிப்படுத்துங்கள்.
10.  ஆக்கத்திறன் விருத்திக்கு கடுமையான விடா முயற்சி தேவை என்பதை மாணவர்களிடம் வலியுறுத்துங்கள்
11.  மாணவர்களின் ஆக்கத்திறன் பற்றி விவாதியுங்கள்
12.  மாணவர்களின் ஆக்கத்திற்கு மேலும் சவால்களை வழங்குங்கள்
13. ஆக்கத்திறன் விருத்திக்கு மேலும் பயிற்சி கொடுங்கள்.
14.  மாணவர்கள் தமது கற்றலுக்கான உபகரணங்களை முடிந்தவரை தாங்களே தயாரிக்க வழிப்படுத்துங்கள்

ஆக்கவிருத்தியின் பின்னணி

1. பிள்ளைப்பருவத்தில் கிடைக்கும் பலதரப்பட்ட அனுபவம்
2. சுதந்திரமாக வினா எழுப்ப முடிந்தமை
3. கருத்துக்களைப் பரிசோதித்துப் பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தமை
4. பொருத்தமான ஓய்வுநேரப்பணிகள்
5. நாட்டங்களை முன்னெடுத்துச்செல்ல முடிதல்
6. சிறப்பான ஆற்றல், திறன்களை தம்மில் விருத்திசெய்து கொண்டமை.
மாணவர்களின் ஆக்கத்தில் ஆசிரியர் பங்கு
1. களிப்புறும் மனப்பாங்கு
2. துருவி ஆராய்தல்
3. வகுப்பிற்கு உள்ளே வெளியே பகிர்வு
4. வினாக்களுக்கு செவிசாய்த்தல்
5. நெகிழ்ச்சியான சிந்தனை
6. தன் கருத்தை திணிக்காமை
7. மாணவர் கருத்துக்களை மாணவர்களே தொகுத்துக்கூற வழிப்படுத்தல்
8. நடைமுறை சாத்தியம் நிலைப்பாட்டினை சுட்டுதல் தவிர்த்தல்

ஆக்கத்தை வளர்த்தெடுப்பதில் ஆசிரியர் மேற்கொள்ளவேண்டிய நடைமுறைகள்
1. மாணவர் எழுப்பும் வினாக்களுக்கு விடையளிப்பதில் நலிவான வினாக்களை புறக்கணிக்காமை, பொருத்தமான வினா எழுப்ப வழிகாட்டல், விடையினை தேடிப்பிடிக்க வழிகாட்டல்
2. கற்பனாசக்திமிக்க கருத்துக்களை கண்ணியமாக நோக்குதல், ஏளனத்தைத்தவிர்த்தல், நியாயபூர்வ தன்மை பற்றி மாணவர் சிந்திக்க வழிகாட்டல்
3. பிள்ளைகளின் கருத்துக்களுக்கு பெறுமதி உரைத்தல்
4. போதிய கால அவகாசம் வழங்குதல்
5. புதுமைநோக்கு பற்றி அச்சப்பாட்டினைத் தவிர்த்தல்
6. மதிப்பீட்டில் காரணகாரிய தொடர்பினை விளக்குதல்

ஆக்கத்திறன் சோதனைகள்
1.ஆக்கச் சிந்தனைபற்றிய மின்சோட்டா சோதனைகள்
2.கில்பேர்ட்டின் விரிசிந்தனை
3.வோல்க்மோகன் ஆக்கத்திறன் கருவிகள்
4.விரி உற்பத்தித்திறன் பற்றிய சர்மாவின் சோதனை
5.பாசியின் ஆக்கத்திறன் சோதனை

ஆசிரியர்களும் ஆக்கத்திறனும்
1. கற்பித்தல் ஒரு ஆக்கம் நிறைந்த சேவையாகும்இ ஆகவே ஆசிரியர்கள் கட்டாயம் ஆக்கத்திறனை வளர்த்துக் கொள்வது அவசியமாகும்.
2. ஆக்கதிறன் என்பது புதுமை புனைதல் கலை உருவாக்கம் என்பது மட்டுமல்ல ஆக்கப்பூர்வமாக வாழ்வதும் அதில் அடங்கியுள்ளது.
3. ஆசிரியர்கள் தமது வாழ்க்கையின் ஒவ்வொரு சூழலையும் ஆக்கப்பூர்வமாக அணுகதல் வேண்டும்.
4. ஆக்கத்திறனுடன் செயற்படும் ஆசிரியர்களின் கற்பித்தல் உள்ளடக்கத்தின் ஒரு பகுதி ஆக்கப்பூர்வ விளையாட்டுகள், நகைச்சுவைமிக்க கல்ந்துரையாடல்கள், நடிப்பு, மாற்றி யோசித்தல் ,சிந்தனை கிளறல்கள்,கதை கூறல் என்பவற்றைக் கொண்டதாக இருக்கும்.
5. ஆசிரியர்களின் நேர்நிலைச்சிந்தனைகள் ஆக்கவிருத்திக்கு அடிப்படையாக அமையும்.

ஆசிரியர்கள் தமது ஆக்கத்திறன் விருத்திக்காக செய்ய வேண்டியவை.
1. ஆக்கத்திறன் விருத்தி தொடர்பான தனது தவறான கண்ணோட்டங்களை மாற்றி அமைத்தல் வேண்டும்.
2. வகுப்பறையில் புதிய கற்பித்தல் அணுகுமுறைகளை கையாண்டு அது தொடர்பாக பிரதிபலிப்பு பெறுதல் வேண்டும்.
3. பாடத்தை ஆக்கப்பூர்வமாக திட்டமிடல் வேண்டும் அது பொடர்பாக தொடர்ந்து உசாவுதல் வேண்டும்.
4. ஆக்கப்பூர்வமாக கற்பிக்கும் ஆசிரியர்களுடன் இணைந்து கற்பித்தல் வேண்டும்
5. ஆக்கப்பூர்வமான கற்பித்தலுக்காக மாணவர்களின் பிரச்சினைகள், நடத்தை கோலங்கள் ,அவர்களது திறன்கள் தொடர்பாக பிரதிபலிப்புகளை தினமும் தவறாது பதிவு செய்தல் வேண்டும்.
6. முடிந்தவரை அருட்காட்சியங்கள் நூதனசாலைகள், கலைப்படைப்புக்கள் என்பவற்றை பார்வையிடல் வேண்டும்.
7. மாணவர்களின் தவறான நடத்தைகளை சகிப்புதன்மையுடன் நோக்குதல் வேண்டும்.
8. தொடர்ச்சியாக நல்ல இசையை செவிமடுத்தல் வேண்டும்.
9. மன அமைதிக்கான செயற்பாடுகளில் ஈடுபடல் வேண்டும்.
10. பதிய விடயங்களை துணிவுடன் தொடங்கி அதில் ஈடுபடல் வேண்டும்.

 

 

கட்டுரைகள்

சிகிரியா ஒரு பழங்கால மலை பாழடைந்த கோட்டையாகும், இது ஒரு அரண்மனையின் எச்சங்களுடன் அமைந்துள்ளது மத்திய பகுதிஇலங்கையில் மாத்தளை. இந்த அற்புதமான கல் கோட்டை தோட்டங்கள், குளங்கள் மற்றும் பிற...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் நுண் அறிவு என்பது புரிந்து கொள்ளும் திறன், தொடர்பு கொள்ளும்திறன், கருத்தியல் சிந்தனை திறன் போன்ற திறன்களின் தொகுப்பாகும். நுண் அறிவின் அளவை உளவியல் வல்லுனர்கள் நுண் அறிவு...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் "ஆக்கம், விரிசிந்தனை, தற்துணிவு, தீர்மானம் எடுத்தல், பிரச்சினை விடுவி;த்தல், நுணுக்கம் மற்றும் பகுப்பாய்வு சிந்தனை, அணியினராக வேலை செய்தல், தனியாள் இடைவினைத் தொடர்புகள்,...

கல்வி என்பதற்குப் பொதுவான பல வரையறைகள் உள்ளன. எல்லா வரையறைகளும் பொதுவான ஒரு கருத்து, நடத்தையில் விரும்பத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்துவதுதான் கல்வி. கல்வி என்பது வெறும் அறிவு மட்டுமல்ல, பண்புகள்,...

ஜப்பானிய ஆரம்பக்கல்வி உலகப்புகழ் வாய்ந்தது; அதற்கு ஒரு காரணம் அந்நாட்டின் கல்வி முறையில் காணப்படும் சமத்துவ அம்சம். ஆற்றல்களின் அடிப்படையில் மாணவர்களைப் பிரித்து வைத்துக் கற்பிக்கும் முறைமை...

"வரலாற்றுச் செயற்பாடுகள் என்பன வெறும் சம்பவங்களல்ல. அவற்றுக்கு ஓர் உட்புறம், அதாவது ஒரு சிந்தனைப் புறம் உள்ளது." ஆர். சி. கொலிங்வூட்வரலாற்றியலறிஞர். பெரிதும் விவாதிக்கப்பட்டுள்ள இந்த மேற்கோள்...

- கார்த்திகேசு சிவத்தம்பி -  யாழ்ப்பாணத்தின் பண்பாட்டு அமிசங்களில் கண்டதுண்டு, கேட்டதில்லை" யாகவுள்ளனவற்றுள் ஒன்று, யாழ்பாணச் சமூகத்தின் யதார்த்தபூர்வமான சித்திரிப்பு ஆகும். நம் கண்முன்னே...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் இலங்கையில் பொதுக் கல்வித் துறையில் மாணவர்களது கல்வி விருத்தியில் முக்கியமான செயற்பாட்டு அம்சம் கலைத்திட்ட அமுலாக்கம் ஆகும்.  கலைத்திட்ட அமுலாக்கமானது திட்டமிடப்பட்ட...

வாழ்க்கைமுறை

ஒரு கிலோ பசும் சாணத்தில் இருந்து ஒரு கன அடி சாண எரிவாயு உற்பத்தி செய்யலாம். ** ஒரு மாடு தினசரி 10 கிலோ சாணம் இடும் எனில் , 10 மாடுகள் இடும் சாணம்,...

-தமிழ்- " நீங்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் காரணமாக உங்கள் மீதும் கரி பூசப்படலாம்; நீங்கள் கீழே போட்டு மிதிக்கப்படலாம் அல்லது அடித்து நொறுக்கப்படலாம். இந்த மாதிரியான நிலைமைகளில் நீங்கள் உங்களைப்...

- தமிழ் - "சம்பளம் உங்களுக்கு உதவலாம். ஆனால் இலாபம் உங்களுக்கு உயர்ந்த அதிர்ஷ்டம் நல்கும்" சீனாவின் பெரிய செல்வந்தர் ஜாக் மா வின் கூற்றின்படி குரங்கிற்கு முன்பாக பணத்தையும் வாழைப்பழத்தையும்...

பதட்டம், பல்வேறு நிலைகளில் பல்வேறு விதங்களில் மனிதர்களைப் பாதிக்கிறது. பதட்டம் என்பது ஒரு மனநோயன்று.ஆனால், அதைத் தொடக்கத்திலேயே நாம் கிள்ளியெறிய மறந்தால் அது மனநோய்க்கு வித்தாகிவிடக்கூடும். எனவே...

தடங்கள்

வி.அனோஜன் "நேரம் என்பது இவரது வாழ்வின் முக்கிய உயிர்நாடி. பாடசாலை என்றாலும் சரி ஆலயம் என்றாலும் சரி ஊரின் சமூகசேவை விடயங்கள் என்றாலும் சரி கடிகாரத்தின் முட்களை விட வேகமாகச்சுழன்று முன்வரிசையில்...

ச. தேவமுகுந்தன் ஆறுமுகம் சரஸ்வதி தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாக உதித்தவர் திருமுருகன். தாயும் தந்தையும் ஆசிரியர்கள் என்பதோடு சைவ பாரம்பரிய குடும்ப பின்னணியையும் கொண்டவர்கள், அன்பும் பண்பும்...

18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் – 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர்....

- மதுசூதனன் தெ. -  பத்தொன்பதாம் நூற்றாண்டிலே மகா வித்துவான்கள், புலவர்கள், கணக்காயர்கள், கவிராயர்கள் போன்றோர்கூடப் பழந்தமிழ் நூல்கள் பற்றிப் பெருமளவு அறியாமையில் மூழ்கிக் கிடந்தனர்....

சினிமா

சினிமா

ஐம்பது வயது நந்து (பார்த்திபன்) ஒரு சினிமா ஃபைனான்சியர். அவரிடம் வட்டிக்குப் பணம் வாங்கி படமெடுத்த இயக்குநர், அதைத் திருப்பிக் கொடுக்க முடியாததால் மனைவியுடன் தற்கொலை செய்துகொள்கிறார். அந்த மரணம்,...

சினிமா

பொறியியல் படிப்பை கஷ்டப்பட்டு முடித்த கார்த்திக்கிற்கு (ஹரீஷ் கல்யாண்) திருமணம் செய்துவைக்க பெற்றோர் முடிவெடுத்து, பெண் பார்க்கப் போகிறார்கள். ஆனால், தவறான வீட்டிற்குப் போய்விடுகிறார்கள்....

சினிமா

இந்த உலகம் இயங்குவதே பற்றுதலால் தான். ஏதோவொன்றின் மீது நாம் கொண்டிருக்கும் பற்றுதான் நம்மை, அதை நோக்கி இழுத்துச் செல்கிறது. பிடித்தோ பிடிக்காமலோ, எல்லாவற்றையும் மீறி நம்மை அதன்மீது பற்றி அழுந்தச்...

சினிமா

சினிமா என்பது பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி சமூகத்துக்குப் பல விஷயங்களைப் போதிக்கும் தளமாகவும் இருக்கிறது. அதனால் அடுத்த 18 நாட்களும் உலக அரங்கில் வெளிவந்த வைரஸ் தொற்று பற்றிய தரமான உலக சினிமாவைப்...

ஆன்மீகம்

நயினா தீவு நாகபூசணி அம்மன் கோயில் இலங்கை, யாழ்ப்பாண மாவட்டத்தில், நயினா தீவில் உள்ள ஒரு புகழ் பெற்ற இந்து கோயில் ஆகும். நயினாதீவு பல்வேறு வகையிலும் சிறப்புப்பெற்ற தீவாகக் காணப்படுகின்றது....

உளவியல்

சபா.ஜெயராசா ஓய்வுநிலை பேராசிரியர் சீர்மியம் அல்லது உளவளத்துணை என்பதை மேலைத்தேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட செயல்வவமாக காட்டும் முயற்சியைப் பல்கலைக்கழகங்களில் உள்ளவர்களும், தொண்டு...

சபா.ஜெயராசா ஓய்வுநிலை பேராசிரியர் உளவியல் என்பது வரலாற்று வளர்ச்சியுடனும் பண்பாட்டு இறுக்கங்களுடனும் கட்டுமை (CONSTRUCT) செய்யப்பட்ட வடிவமாக உள்ளது. அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு அனுசரணையான பிரயோக...

புத்தகங்கள்

நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை உருவாக்குவது மட்டும் அல்ல ஒரு பள்ளியின் கடமை. விளையாட்டு வீரனை, நல்ல படைப்பாளியை, நல்ல பேச்சாளனை, நல்ல கவிஞனை, நல்ல நடிகனை, நல்ல சமூகப் போராளியை, நல்ல தலைவனை...

- அலெக்ஸ் பரந்தாமன்- ஈழத்து எழுத்தாளர் மா.சிவசோதி அவர்களின் இரண்டாவது சிறுகதைத்தொகுப்பும் மூன்றாவது வெளியீடுமாக பொதுவெளிக்கு வந்துள்ளது. ஜீவநதி வெளியீடாக 104 பக்கங்களுடன், 350/= விலையைத் தாங்கி...

குழந்தை ம.சண்முகலிங்கம்  அரங்கியல் பற்றிய அறிவுத்தேடல் அவசியப்பட்டுக் கொண்டு செல்லும் இக்காலக்கட்டத்தில் ''அரங்கியல்" என்று தலைப்பிடப்பட்ட இத்தொகுப்பு முக்கியமானதொரு படைப்பாக அமையும் எனக்...

தமிழ்த்தத்துவங்கள்

{youTube}/1qJxh6BaI74{/youtube}நான் பணக்கார அப்பாவின் பிள்ளை அல்ல. படிப்பிலும் அவ்வளவு சுட்டி இல்லை. மூன்றுமுறை பல்கலைக்கழக தேர்வில் தோல்வி அடைந்திருக்கிறேன். 10 முறை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சேர...

1. போர் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல், அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத போர். —மா சே துங 2. துப்பாக்கியைக் கொண்டே உலகமுழுவதையும் திருத்தி அமைக்கலாம் என்று நம்மால் சொல்ல முடியும். போரைக் கொண்டே போரை...

X

Right Click

No right click