Skærmbillede 1643ஏ.ஆர்.முஹம்மட் மாஹிர்
சிரேஷ்ட உதவிப் பதிவாளர்
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம்

"நவீன தொழில் நுட்பத்தை நோக்கி வீறு நடையுடன் வேகமாக முன்னேற வேண்டிய நமது மாணவ சமூகம், இருப்பதையும் இழந்துவிடுவோமா என்ற அச்ச நிலைக்குள் உந்தப்பட்டவர்களாக நாளைய விடியலுக்காய் ஏங்கித் தவிக்கின்றனர் ."

  இன்று சர்வதேசத்தினையே புரட்டி எடுத்துக் கொண்டு இருக்கும் இயற்கையின் இன்னுமொரு சீற்றமாய் உலாவந்து கொண்டு இருக்கும் கொரானா என்னும் கொடிய வைரசின் தாக்கமானது மனித சமூகத்தினை பல்வேறு கோணங்களில் பின்னடையச் செய்து வருகின்றது.விஷேடமாக பொருளாதரத் துறையிலும் கல்வித் துறையிலும் அது ஏற்படுத்தி வரும் தாக்கம் நாட்டின் எதிர்காலத்தினை அபாயா நிலைக்கு எடுத்துச் சென்று விடுமோ எனும் அச்சம் வலுத்து வருவதனை அவதானிக்க முடிகின்றது.


பொதுவாக கல்வியானது ஒரு நாட்டின் அபிவிருத்தியிலும் மதிப்பீடுகளிலும் முக்கிய அச்சாணியாக விளங்குகின்றது.ஒரு மனிதன் கற்கின்ற போதுதான் அவன் முழுமையடைகின்றான்.அதன் மூலம் அவன் குடும்பம் முன்னேறுகின்றது.அவனது கிராமம் உயர்வடைகின்றது.அவனது சமூகம் பயனடைகின்றது. இதன்மூலம் அவனது நாடு அபிவிருத்திப் பாதையில் வெற்றி நடை போடும்.அதற்கு மாற்றமாக ஒரு மாணவனுக்கு உரிய வயதில் உரிய கல்வி புகட்டப் படாமல் புறக்கணிப்புக்கள் இடம்பெற்றால் ஏற்படும் பாதிப்பு ஒரு தனி மனித பாதிப்பாக மாத்திரம் இருக்காது,  மாறாக அது சமூக ரீதியான , தேசிய ரீதியான முரண்பாடுகளை தோற்றுவிக்கும் என்பதில் சந்தேகமில்லை.சிறந்த கல்வியினை இழந்த மாணவன் அவனது குடும்பத்திற்கும் , ஊருக்கும் , சமூகத்திற்கும்,ஏன் நாட்டிற்கும் மிகப்பெரும் சுமையாக மாறிவிடும் அபாய சூழ்நிலைகள்தான் அதிகம் காணப்படும்.எனவே என்ன விலை கொடுத்தாயினும் , எத்தியாகங்கள் செய்தாயினும் இளம் சமூகத்தின் கல்வி வளப்படுத்தலில் கூடிய கவனம் கொள்ளப்படல் வேண்டும்.

இன்று இலங்கையில் பாடசாலைக்கல்வியானது என்றுமில்லாதவாறு பெரும் சவால்களையும் ,சங்கடங்களையும் சந்தித்து இருக்கும் மிக இக்கட்டான காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்.நவீன தொழில் நுட்பத்தை நோக்கி வீறு நடையுடன் வேகமாக முன்னேற வேண்டிய நமது மாணவ சமூகம், இருப்பதையும் இழந்துவிடுவோமா என்ற அச்ச நிலைக்குள் உந்தப்பட்டவர்களாக நாளைய விடியலுக்காய் ஏங்கித் தவிக்கின்றனர் .பாடசாலை மாணவர்கள் தமது வழமையான கற்றல் நடைமுறைகளை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது என்பது பற்றிய தேடல்களுடன் புதிய உலகை நோக்கி நகர்கின்றனர் .

Skærmbillede 1644எமது நாட்டினை அனுதினமும் புரட்டி எடுத்துக் கொண்டிருக்கும் கொரானா நோயின் அட்டகாசங்கள் இன்னும் ஓய்ந்தவாறு இல்லை .நாளைய விடியல்கள் நமக்குத் தரும் புதிய செய்திகள் எவ்வாறு அமையும் எனும் அச்சம் இன்னும் தொடர்கின்றன.இவ்வாறான சூழ்நிலைகளில்தான் நமது மாணவர்களின் கல்வியின் எதிகாலம் பற்றி பேச வேண்டியது , சிந்திக்க வேண்டியது நாட்டின் எதிர்காலம் பற்றி கவலை கொள்வோரின் பொறுப்பும் கடமையுமாகும் .ஏனெனில் இந்நிலைமை எமது நாட்டின் கல்வியிலும் பொருளாதாரத்திலும் நேரடியான தாக்கத்தினை ஏற்படுத்திக் கொண்டு இருப்பதனை தினமும் அனுபவித்து வருகின்றோம். அச்சமும் மடமையும் கொண்ட எதிர்காலம் நாட்டின் அபிவிருத்தியில் பெரும் தாக்கத்தையும் வீழ்ச்சியையும் கொண்டு வரும் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை .இந்த நிலை மாற வேண்டும்.இத்தகைய சவாலுக்கு முகம் கொள்வதில் கற்றோரும் மற்றோரும் கவனம் கொள்வது காலத்தின் தேவையாகும் .

பாடசாலைக் கல்வியானது கடந்த இரண்டு வருடங்களும் ஒழுங்கான வடிவமைப்பில் செம்மைப்படுத்தப்படாமல் கடந்து சென்றுள்ளன. கொரோனாவினால் முடக்கப்பட்ட பாடசாலைக் கல்வியினை முன்னெடுத்துச் செல்வதற்காக அரசும் இகல்வி அமைச்சும் பல பிரயத்தனங்களை மேற்கொள்கின்றனர் .அதன் ஒரு வடிவம்தான் ONLINE வழியிலானா கற்பித்தல் முறைமை. இத்தகைய ONLINE மூலமான கற்றல் கற்பித்தல் நடவடிக்கையானது இலங்கை போன்ற வளர்முக நாடுகளிலுள்ள பாடசாலை மாணவர்களின் கல்வியில் எத்தகைய அதிர்வுகளை ஏற்படுத்தயுள்ளன என்பது பற்றிய ஆய்வு காலத்தின் கட்டாயமாகும்.

இணையவழி (ONLINE) மூலமான பாடசாலைக்கல்வியின் சாதக பாதகங்கள்

இணையத்தினால் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்

அவ்வகையில் ONLINE  மூலமான பாடசாலைக்கல்வியின் சாதக பாதகங்களை பின்வருமாறு நோக்கலாம். பொதுவாக பாடசாலைக்கல்வியானது வெறுமனே கற்றல் கற்பித்தல் எனும் செயற்பாட்டுக்குள் மட்டும் வரையறுக்கப்பட்ட ஒன்றல்ல.வாழ்க்கை எனும் பரந்த வெளியில் உலா வரப்போகின்ற இளம் மாணவர்கள் வாழ்க்கைக்கான ஒவ்வொரு கற்றல்களையும் பள்ளிக் கல்வி மூலமாகவும் தான் சார்ந்த சமூகத்தின் மூலமாகவும் நிறையவே கற்றுகொள்கின்றான்இ இங்கு மாதா ,பிதா , குரு என்கின்ற மூன்று வழிகாட்டல்களும் அவனுக்கு பெரும் வெளிச்சங்களாக பிரவாகம் கொள்கின்றன. இதில் குருவின் நெறிப்படுத்தல்கள் மிகவும் முக்கியமானதொன்றாகும். ஒரு மாணவனுக்கு அமையும் ஆசிரியர் அவனது எதிர்காலத்தினை தீர்மானிக்கும் முக்கிய காரணியாகும்.

எனவே ஆசிரியர்களின் நேரடி வழிகாட்டுதல்களுடன் பாடசாலைகளுக்குச் சென்று கல்வி கற்பதானது சிறந்த பயனுடையதாக இருக்கும்.இவ்வாறான நேரடி வகுப்புகள் மாணவர்களின் சுயஒழுக்கம் ,தலைமைத்துவ பண்புகள், நேர முகாமைத்துவம், ஆளுமை விருத்தி போன்றனவற்றின் வளர்ச்சிக்கு பெருதும் அவசியமாகின்றது.மாத்திரமல்லாமல் சக மாணவர்களுடன் ஒன்றித்து கூடிக்குலாவுகின்ற போது நட்புறவும் ஒருவொருக்கொருவர் பரஸ்பரம் உதவுகின்ற மனப்பாங்கும் வளர்ச்சியடைவதற்கு வாய்ப்புகளை அதிகம் வழங்குவது பாடசாலையின் நேரடிக் கல்வி முறையாகும்.

Skærmbillede 1645மாணவன் ஒருவன் நேரடியாக வகுப்பறையில் இருந்து படிக்கும்போது மாணவர் ஆசிரியர் புரிந்துணர்வு மிகவும் அதிகமாக இருக்கும்.வகுப்பிலுள்ள மாணவனின் முக பாவனையில் அவனின் புரிதல் தன்மையை ஆசிரியர் இலகுவில் புரிந்து கொள்ளும் வாய்ப்புகள் அதிகம் உண்டு.எனவே அதற்கேற்றவாறு ஆசிரியர் தனது கற்பித்தல் வழிமுறைகளை அமைத்துக்கொள்ள முடியும். இது ONLINE மூலமான முறைகளில் காணப்படாது.மேலும் இணைய வழிக் கற்கையில் மாணவர்கள் கற்கும்போது வேறு திசைகளில் கவனங்களை செலுத்தும் வாய்ப்புகள் நிறையவே காணப்படுகின்றன .கற்பித்தல் ஒருபுறம் நடைபெற்றுக்கொண்டுருக்கும்போது மாணவர்கள் இணையத்தினூடாக வேறு காட்சிகளையும் செய்திகளையும் பார்வையிடுகின்றனர்.இதனூடாக கவனக் கலைப்பு மாத்திரமல்லாமல் மாணவர்களிடையே ஒழுக்க பிறழ்வுகள் ஏற்பட்டு அவர்கள் திசைமாறும் அபயா நிலையும் காணப்படுகின்றது.

ONLINE  மூலமான கற்றல் முறைமையில் காணப்படுகின்ற மற்றுமொரு விளைவுகளில் ஒன்றுதான் மாணவர்களுக்கு ஏற்படும் உடல் நலப்பிரச்சினை. அதிகமான நேரங்கள் கைபேசித் திரைகளை அல்லது கணனித் திரைகளை பார்ப்பதனால் இளம் வயது பிள்ளைகளுக்கு பார்வைக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன .அது மாத்திரமல்லாமல், மாணவர்களின் வயதுத் தன்மைக்கு ஏற்றவாறு இயக்கப்பாட்டுத் தன்மை குறைவடைவதால் உடல் சோர்வும் சோம்பல் தன்மையும் அதிகம் காணப்படும். மேலும் மூளை வளர்ச்சித் திறன் பாதிப்படைதல், கவனச்சிதறல்,தூக்கமின்மை,படைப்பாற்றல் குறைவு, கற்பனைத்திறன் குறைவடைதல் மற்றும் பதட்டம்இ பயம்இ மனஅழுத்தம் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே மாணவர்களின் கவனிக்கும் திறன் மற்றும் கற்றல் திறன் போன்றவற்றில் இணையத்தள கல்வி பாதிப்புகளையும்,  மாற்றங்களையும் ஏற்படுத்துகின்றது.

இவைகளுக்கப்பால் பொருளாதார ரீதியான பிரச்சினைகளும், பௌதீக ரீதியான இடர்பாடுகளையும் நாம் சாதரணமாக கொள்ள முடியாது.வருமானம் குறைவான பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் கல்வித் தேவைகளை நிறைவேற்றுவதற்காக சொல்லொண்ண துயரங்களை அனுபவிக்கின்றனர் . இதேபோல் பௌதீக ரீதியான வளப்பற்றாக் குறையும் பின்தங்கிய பிரதேசத்தின் மாணவர்களை பெரிதும் சிக்கலாக்கியுள்ளது.

எது எவ்வாறாக இருந்தாலும் இன்றைய சவாலுக்கு முகம் கொடுத்து காலத்தின் தேவையான கல்விச் செல்வத்தை எவ்வாறாயினும் அடைந்து விட வேண்டுமென பெற்றோரும் மாணவர்களும் முனைப்பாக இருப்பது ஆறுதல் அளிக்கின்றது.இன்றைய நவீன உலகில் Digital  மூலமான கல்வி முறையினை சாதரணமாக கருதி ஒதுக்கிவிடவும் முடியாது.இக்கல்வி முறைமையில் நன்மைகளும் இருக்கத்தான் செய்கின்றன.அவைகளும் கருத்தில் கொள்ளல்பட வேண்டும்.

இணையத்தினால் ஏற்படும் நன்மைகள்

இணையவழி (ONLINE) மூலமான கல்வி முறையில் மாணவர்கள் தமது கற்கையினை தூரம்இநேரம் என்பவற்றை கடந்து கற்க முடியும்.அதிகமான பணத்தினை செலவு செய்து மிக நீண்ட தூரத்துக்கப்பால் சென்று படிக்க வேண்டியதை வீட்டில் இருத்த வாறே பயில்வதற்கான வசதிகளும் வாய்ப்புகளும் நிறையவே காணப்படுகின்றன.மாத்திரமல்லாமல் நேரக் கட்டுப்பாடுகள் எதுவுமின்றி வேண்டிய நேரத்தில் கற்கும் வாய்ப்புகள்ONLINE காணப்படுகின்றது.மேலதிக வகுப்பகளுக்கு செல்லும் மாணவர்கள் வகுப்புகளுக்கு செல்வதும் வருவதுமாக பாதைகளில் அதிக நேரத்தை செலவு செய்கின்றனர்.அதிலும் பெண் மாணவிகளே இன்னும் அதிகமான காலத்தினை இதற்காக செலவு செய்கின்றனர் .இவைகள் எல்லாம் தவிர்க்கப்பட்டு online வகுப்புகள் காலத்தை மீதப் படுத்தித் தருகின்றது
.
பாடசாலை சென்றுதான் கல்வி கற்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்து விடுபட்டு கல்வி கற்பதற்கான பல வாய்ப்புகளினை இணையவழி கல்வி அமைத்து தருகிறது. உதாரணமாக. தற்போதுள்ள இயற்கை பேரிடர் போன்ற காலகட்டங்களில் கல்வி என்பது தடைபடாமல் இருப்பதற்கு வழி வகை செய்கிறது.
மாணவர்களுக்கு பாடசாலைப் படிப்பினை தாண்டி அவர்களுக்கு பிடித்தமான பல செயல்களை செய்வதற்கு நேரமும்,  வாய்ப்பும் கிடைக்கிறது. சில மாணவர்களுக்கு பாடசாலை செல்வதில் பயம், தயக்கம் போன்ற உளவியல் பாதிப்புகள் இருப்பதை காணலாம். அவர்களுக்கு இதுபோன்ற கல்வி முறை சௌகரியமாக இருக்கக்கூடும்.

இவை மாத்திரம் இல்லாமல் , உண்மையில் படிப்பதில் ஆர்வம் உள்ள மாணவர்கள் தனது படிப்பு சார்ந்த மேலதிக அறிவுகளையும் தகவல்களையும் தேடிப் படிக்கும் வாய்ப்புகளும் அதிகமாக காணப்படுகின்றது .எனவே தேடல் திறன் கொண்ட மாணவர்களை மேலும் வளர்க்கும் சக்தி online முறைமையிலான கற்றலில் அதிகம் காணப்படுகின்றது.இன்னும் இதன் நன்மைகளை சொல்வதென்றால் மீட்டல் வசதிகள் இதில் அதிகம்..மீண்டும்மீண்டும் பாடங்களை கேட்டு விளங்கி எடுத்துக் கொள்ளலாம்.Skærmbillede 1646

  இவ்வாறாக பல நன்மைகளையும் இணைய வழிக்கல்வி முறை கொண்டுள்ளது. தற்போது பாடசாலைகள் ஆரம்பமாகி செயற்பட்டுக் கொண்டுருந்தாலும் இணைய வழிக் கற்பித்தல் செயற்பாடுகளும் தொடர்ந்த வண்ணமே உள்ளன.அநேகமான உயர் வகுப்பு மாணவர்கள் பிரபலம் வாய்ந்த சிறப்பு ஆசிரியர்களின் கற்பித்தல்களினை இணைய வழி மூலமாகவே கற்று வருகின்றனர் .அது மாத்திரமல்லாமல் அரசும் எதிர் காலத்தில் இணைய வழிக் கல்வியினை தொடர்வதில் ஆர்வம் கொண்டுள்ளதாகவே அறிய முடிகின்றது. எனவே இணையவழி தொழில்நுட்பம் பற்றிய திறன் அனுபவத்தை வளர்த்துக்கொள்ள மாணவர்களும் மற்றும் ஆசிரியர்களும் முனைப்புக் கொள்வதில் காலத்தின் அவசியமாகின்றது .

இறுதியாக நாம் சில முடிவுகளுக்கு வர வேண்டிய தேவையுள்ளது.இன்றைய நவீன சாவல்களுக்கு முகம் கொண்டு வாழ்க்கையில் எதிர் நீச்சல் கொள்ள வேண்டிய அவசியம் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அவசியமாகின்றது .பாலும் நீரும் கலந்த பாத்திரத்தில் பாலை வேறாக பிரித்து இனம் காணும் குணம் அவசியம் .அப்போதுதான் வாழ்க்கைப் படகில் சிறந்த மாலுமியாக நாம் மிளிர முடியும் .இதில் மாணவர்களின் வகிபாகம் முக்கியமானது .திருடனாய்ப் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. எனவே onlineல் கற்கும் மாணவர்கள் பின்வரும் விடயங்களை தங்களுக்குள் வளர்த்துக் கொள்வது சிறந்த வழி காட்டல்களாய் அமையலாம்

1. ஆர்வம் (Interest)

எந்தவொரு விடயத்திலும் வெற்றி பெற வேண்டுமெனின் அதில் மிகையான ஆர்வம் இருக்க வேண்டும்.எத்தகைய இடையூறுகளையும் கடந்து சாதிக்க வேண்டும் எனும் விடாப்பிடியுடன் கலந்த ஆர்வம் இருக்க வேண்டும் .மிகையான ஆர்வம் உள்ள பிள்ளைகளை எந்த சக்தியும் திசை திருப்பி விட முடியாது.

2. இலக்கு (Goal)
 கல்வி கற்கின்ற ஒவ்வொரு மாணவர்களிடமும் தமது எதிர்காலம் பற்றிய இலக்கும் கனவும் இருக்க வேண்டும் .அப்போதுதான் படிக்கின்ற கல்வியில் பிடிப்புத்தன்மையும் விடா முயற்சியும் இருக்கும் .அடுத்த கட்ட நமது வாழ்வு எவ்வாறு இருக்க வேண்டுமென்று நாம் தீர்மானிக்க வேண்டும். அதற்கேற்றவாறு தமது மாணவ பருவத்தின் ஒவ்வொரு நிமிடங்களும் திட்டமிடப்படல் வேண்டும்.அவ்வாறு எமது எதிர்காலம் பற்றிய இலட்சிய வேட்கை நம்மிடம் ஏற்பட்டுவிட்டால் நமது கற்கைகள் எவ்வாறும் அமையலாம். பாடசாலைக்கு சென்றுதான் படிக்க வேண்டுமென்றோ இஆசிரியருக்கு பயந்து பயிற்சிகள் செய்ய வேண்டிய தேவையோ இருக்காது. பெற்றோரின் தூண்டுதல் அவசியமில்லை . நம்மை நாமே இயக்குகின்றவர்களாக இருக்கலாம். இவ்வாறான மாணவர்களுக்கு online படிப்பானது மிகவும் சிறந்த கற்கை ஊடகமாக இருக்குமென்பதில் சந்தேகமில்லை .

3 அடையாளம். (Identity)
 மாணவர்கள் தங்களைத் தாங்களே அடையாளம் கண்டு கொள்வது அவசியம்.நாம் எவ்விடத்தில் நிற்கின்றோம் . நமது நிலை என்ன .நாம் பயணிக்க வேண்டிய தூரம் என்ன. இவை போன்ற கேள்விகள் தமக்குள்ளாகவே கேட்கப்பட்டு எம்மை நாமே அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டும்.இதுவும் எமது பயணத்தை இலகுவாக்கும்.

4. சுதந்திரம் ( Independence )
எந்தொவொரு சந்தப்பத்திலும் நாம் யாரையும் தங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுவிடக்கூடாது என்ற திடம் மாணவர்களிடம் வேண்டும்.யாரின் தயவிலும் வாழாமல் நமது சொந்தக் காலில் நாம் நிற்க வேண்டும். மாணவப் பருவத்திலும் நாம் பெற்றோரின் தயவில் வாழ்கின்றோம். எதிர்காலத்தில் பெற்றோர்கள் நமது தயவில் இருக்க வேண்டும் எனும் உயர்ந்த இலட்சியத்துடன் நாம் பணிக்க வேண்டும் .இதற்கு கால்கோளாக அமைவது கல்விதான்.அதனை கருத்தில் கொண்டு கல்வியில் கனதியான கவனம் செலுத்தப்படல் வேண்டும்.

5. நேர எல்லை (Time control )
 இணையத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் தொடர்ச்சியாக நீண்ட நேரத்திற்கு இருந்து பயில்வதனால் பல இடர்பாடுகளை எதிர் கொள்ள வேண்டி வரலாம் .எனவே குறிப்பிட்ட நேர இடைவேளை எடுத்துக் கொண்டு தமது பாட நெறிகளைத் தொடர்வது சிறப்பாக இருக்கும்.பொதுவாக ஒரு வகுப்பின் மிகக் கூடிய கால அளவு 45 நிமிடம் அல்லது 1 மணி நேரம் வரை அமையலாம்.அதன் பின் சிறு ஓய்வுநிலை அவசியம். இவ்வாறு அமைவதானது மாணவர்களுக்கு உள ரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஆறுதலாக அமையும்.

நிறைவாக,  ‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்பதற்கிணங்க, கல்வி முறையில் பல புதுமைகளைப் புகுத்தி,  நம் தலைமுறையினருக்குப் பயனுள்ள வகையில் பொருத்தமான வகையில் கற்றல் நிகழ்வுகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை அரசாங்கமும் கல்வியலாளர்களும் மேற்கொள்ள வேண்டும். கல்வி வளமே நாட்டின் மிகச்சிறந்த மனிதவளம் ஆகும். இன்றைய சூழலில் இணையவழிக் கல்வி முறைமையினை புறந்தள்ளிவிட்டு நமது கல்விப் பயணத்தினை தொடர முடியாது. இருந்தாலும் இணையவழிக் கல்வியை நேரடி வகுப்பறைக் கல்விக்கு இணையாகக் கொள்ள முடியாது. இது தற்காலிகத் தீர்வாகக் கொள்ளலாம். இவ்வகையான இறுக்கமான சூழ்நிலைகளில் நமது மாணவ சமுகத்திகு சிறந்த கல்வி கிடைத்திட வழிகாட்ட வேண்டியது பொறுப்பு வாய்ந்தவர்களின் கடமையும் தேவையுமாகும்.

இணைய வழிக் கல்வி முறைமை தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் மாணவர்களின் நலன்கருதி பின்வரும் விடயங்களை கவனத்தில் கொள்ளல் சிறப்புடையதாயிருக்கும்.


அ) தரம் 01 தொடக்கம் தரம் 10 வரையான மாணவர்களுக்கு முடியுமானவரை online கல்வி முறையினை தவிர்ந்து கொள்ளல்

ஆ) தரம் 11 தொடக்கம் தரம் 13 வரையான மாணவர்களுக்கு தேவைக் கேற்றவாறு மாத்திரம், கூடிய வரையான கண்காணிப்புகளுடன் online வகுப்புகளுக்கு அனுமதிக்க முடியும்.

இ) மாணவர்களின் திறன் நிலைகளின் கணிப்பீட்டுக்காக தொடர்ச்சியானா பரீட்சைகள் அவசியம் .

ஈ) Online கல்வி முறைமையிலுள்ள தீமைகள் பற்றியதும் Smart Phone களை கையாள்வதிலுள்ள அபாயங்கள் பற்றியதுமான விழிப்புணர்வுகள் மாணவர்களுக்கு அடிக்கடி வழங்கப்படல் வேண்டும்.

உ) ஆசிரியர் / மாணவர்களுக்கு னுபைவையட கல்வி முறைமை தொடர்பான பயிற்சிப் பட்டறைகள் இடம்பெறல் வேண்டும்.

ஊ) சகல பிரதேசங்களிலுமுள்ள சகல தரப்பிலான மாணவர்களுக்கும் இணைய வசதிகள் கிடைப்பதற்கான வழி வகைகள் செய்யப்படல் வேண்டும்.

இறுதியாக இநவீன தொழில் நுட்ப மாற்றத்துடன் பயணிக்க வேண்டிய இக்கால கட்டத்தில் அதன் பக்குவங்களை மிகக் கவனமாக பேணிக் கொண்டு மனித குலத்தின் மாண்பியங்களுடன் நாளைய விடியல்களுக்காய் புறப்படுவோம்.

கட்டுரைகள்

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் "ஆக்கம், விரிசிந்தனை, தற்துணிவு, தீர்மானம் எடுத்தல், பிரச்சினை விடுவி;த்தல், நுணுக்கம் மற்றும் பகுப்பாய்வு சிந்தனை, அணியினராக வேலை செய்தல், தனியாள் இடைவினைத் தொடர்புகள்,...

கல்வி என்பதற்குப் பொதுவான பல வரையறைகள் உள்ளன. எல்லா வரையறைகளும் பொதுவான ஒரு கருத்து, நடத்தையில் விரும்பத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்துவதுதான் கல்வி. கல்வி என்பது வெறும் அறிவு மட்டுமல்ல, பண்புகள்,...

ஜப்பானிய ஆரம்பக்கல்வி உலகப்புகழ் வாய்ந்தது; அதற்கு ஒரு காரணம் அந்நாட்டின் கல்வி முறையில் காணப்படும் சமத்துவ அம்சம். ஆற்றல்களின் அடிப்படையில் மாணவர்களைப் பிரித்து வைத்துக் கற்பிக்கும் முறைமை...

"வரலாற்றுச் செயற்பாடுகள் என்பன வெறும் சம்பவங்களல்ல. அவற்றுக்கு ஓர் உட்புறம், அதாவது ஒரு சிந்தனைப் புறம் உள்ளது." ஆர். சி. கொலிங்வூட்வரலாற்றியலறிஞர். பெரிதும் விவாதிக்கப்பட்டுள்ள இந்த மேற்கோள்...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் இலங்கையில் பொதுக் கல்வித் துறையில் மாணவர்களது கல்வி விருத்தியில் முக்கியமான செயற்பாட்டு அம்சம் கலைத்திட்ட அமுலாக்கம் ஆகும்.  கலைத்திட்ட அமுலாக்கமானது திட்டமிடப்பட்ட...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் ஆசிரியர் அறிமுகம் 21 ஆம் நூற்றாண்டின் சகாப்தம் பெரும்பாலும் ஒரு தொழில்நுட்ப சகாப்தமாககருதப்படுகிறது. தொழில்நுட்பம், இன்று மிக முக்கியமான பாத்திரத்தை வகிக்கிறது.எங்கள்...

 சண்முகலிங்கம் தேவமுகுந்தன் ஆசிரியர் "பனிப்போர் காலம் முடிவடைந்தது உலகம் ஒரு ஒழுங்கில் அமெரிக்கா தலைமையில் பயணிக்க ஆரம்பிக்கின்றது. இந்த ஏகாதிபத்தியம் தனக்கு விசுவாசம் உள்ள கல்விமுறையினை...

வாழ்க்கைமுறை

பதட்டம், பல்வேறு நிலைகளில் பல்வேறு விதங்களில் மனிதர்களைப் பாதிக்கிறது. பதட்டம் என்பது ஒரு மனநோயன்று.ஆனால், அதைத் தொடக்கத்திலேயே நாம் கிள்ளியெறிய மறந்தால் அது மனநோய்க்கு வித்தாகிவிடக்கூடும். எனவே...

கோபத்துக்குக் கொள்ளி வைப்போம்ஆனந்தத்தை அள்ளி வைப்போம் !” ‘கோபமாக இருக்கும் ஒவ்வொரு நிமிடமும், அறுபது வினாடி ஆனந்தத்தைத் தொலைத்து விடுகிறோம்’என்கிறார் ரால்ப் வால்டோ. ஆனந்தமும் கோபமும் எதிர் எதிர்...

இப்போதெல்லாம், தொழில்நுட்பம் குழந்தைகளின் வளர்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? ஆம், உண்மையில், தொழில்நுட்பம் இப்போதெல்லாம் எல்லா இடங்களிலும் ஆதிக்கம்...

சிவபாலன் இளங்கோவன், மனநல மருத்துவர் கல்வி மட்டுமல்ல; ஊட்டச்சத்துக் குறைபாட்டினாலும்கூடக் குழந்தைகள் இந்தக் காலத்தில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த இரண்டையும் கணக்கில்கொள்ளும்போது இந்தப்...

தடங்கள்

வி.அனோஜன் "நேரம் என்பது இவரது வாழ்வின் முக்கிய உயிர்நாடி. பாடசாலை என்றாலும் சரி ஆலயம் என்றாலும் சரி ஊரின் சமூகசேவை விடயங்கள் என்றாலும் சரி கடிகாரத்தின் முட்களை விட வேகமாகச்சுழன்று முன்வரிசையில்...

ச. தேவமுகுந்தன் ஆறுமுகம் சரஸ்வதி தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாக உதித்தவர் திருமுருகன். தாயும் தந்தையும் ஆசிரியர்கள் என்பதோடு சைவ பாரம்பரிய குடும்ப பின்னணியையும் கொண்டவர்கள், அன்பும் பண்பும்...

18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் – 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர்....

- மதுசூதனன் தெ. -  பத்தொன்பதாம் நூற்றாண்டிலே மகா வித்துவான்கள், புலவர்கள், கணக்காயர்கள், கவிராயர்கள் போன்றோர்கூடப் பழந்தமிழ் நூல்கள் பற்றிப் பெருமளவு அறியாமையில் மூழ்கிக் கிடந்தனர்....

சினிமா

சினிமா

பொறியியல் படிப்பை கஷ்டப்பட்டு முடித்த கார்த்திக்கிற்கு (ஹரீஷ் கல்யாண்) திருமணம் செய்துவைக்க பெற்றோர் முடிவெடுத்து, பெண் பார்க்கப் போகிறார்கள். ஆனால், தவறான வீட்டிற்குப் போய்விடுகிறார்கள்....

சினிமா

இந்த உலகம் இயங்குவதே பற்றுதலால் தான். ஏதோவொன்றின் மீது நாம் கொண்டிருக்கும் பற்றுதான் நம்மை, அதை நோக்கி இழுத்துச் செல்கிறது. பிடித்தோ பிடிக்காமலோ, எல்லாவற்றையும் மீறி நம்மை அதன்மீது பற்றி அழுந்தச்...

சினிமா

சினிமா என்பது பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி சமூகத்துக்குப் பல விஷயங்களைப் போதிக்கும் தளமாகவும் இருக்கிறது. அதனால் அடுத்த 18 நாட்களும் உலக அரங்கில் வெளிவந்த வைரஸ் தொற்று பற்றிய தரமான உலக சினிமாவைப்...

சினிமா

தங்கள் அடையாளத்தைத் தொலைக்க விரும்பாத ஐந்து இளம் சகோதரிகளின் இயலாமை நிறைந்த போராட்ட வாழ்வே ‘முஸ்டாங்க்’ (Mustang). 2015-ல் ஆஸ்கர் விருதுக்குத் தேர்வுசெய்யப்பட்ட இந்த துருக்கிய திரைப்படம் பெண்ணியத்...

ஆன்மீகம்

{youTube}/rs4O4EPcHJ8{/youtube} சின்ன கதிர்காமம் திருகோணமலை

{youTube}/rMbjN5nj7zQ{/youtube} திருக்கோணேச்சரம் (திருக்கோணேஸ்வரம்) இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் தலை நகரமான திருகோணமலையில் உள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். இலங்கையில் உள்ள இரண்டு தேவாரப் பாடல் பெற்ற...

உளவியல்

தன்னம்பிக்கைக்கும் கர்வத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம் நிறைய பேருக்குத் தெரிவதில்லை. இரண்டுக்கும் இடையே நூலிழை வித்தியாசம் தான் இருப்பது போலத் தோன்றினாலும் அவை தரும் விளைவுகளில் மலைக்கும்...

- கி.புண்ணியமூர்த்தி- பிள்ளைப்பருவத்துக்கும் முதிர்ச்சிப் பருவத்துக்கும் இடைப்பட்ட பருவமே கட்டிளமைப்பருவமாகும். இப்பருவத்தில் ஒருவர் பிள்ளையுமல்ல முதிர்ந்தவருமல்ல இப் பருவம். ஆண், பெண் இரு...

புத்தகங்கள்

நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை உருவாக்குவது மட்டும் அல்ல ஒரு பள்ளியின் கடமை. விளையாட்டு வீரனை, நல்ல படைப்பாளியை, நல்ல பேச்சாளனை, நல்ல கவிஞனை, நல்ல நடிகனை, நல்ல சமூகப் போராளியை, நல்ல தலைவனை...

- அலெக்ஸ் பரந்தாமன்- ஈழத்து எழுத்தாளர் மா.சிவசோதி அவர்களின் இரண்டாவது சிறுகதைத்தொகுப்பும் மூன்றாவது வெளியீடுமாக பொதுவெளிக்கு வந்துள்ளது. ஜீவநதி வெளியீடாக 104 பக்கங்களுடன், 350/= விலையைத் தாங்கி...

குழந்தை ம.சண்முகலிங்கம்  அரங்கியல் பற்றிய அறிவுத்தேடல் அவசியப்பட்டுக் கொண்டு செல்லும் இக்காலக்கட்டத்தில் ''அரங்கியல்" என்று தலைப்பிடப்பட்ட இத்தொகுப்பு முக்கியமானதொரு படைப்பாக அமையும் எனக்...

தமிழ்த்தத்துவங்கள்

1. போர் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல், அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத போர். —மா சே துங 2. துப்பாக்கியைக் கொண்டே உலகமுழுவதையும் திருத்தி அமைக்கலாம் என்று நம்மால் சொல்ல முடியும். போரைக் கொண்டே போரை...

 {youTube}/vQNdBDuis98{/youtube}1. இந்த உலகமே உன்னை திரும்பி பார்க்க வேண்டுமென்றால் நீ யாரையும் திரும்பி பார்க்காதே -  02. எதிர்பார்த்த போது கிடைக்காத வெற்றி எத்தனை முறை கிடைத்தாலும் அது...

X

Right Click

No right click