Skærmbillede 1334கலாநிதி துரையப்பா பிரதீபன்.

ஊவாவெல்லஸப் பல்கலைக்கழகம்.

கொவிட்-19 பெருந்தொற்றுப் பரவலானது உலகிலுள்ள அனைத்துத் துறைகளையும் பாதிப்படையச் செய்துள்ளது. குறிப்பாக கல்வி மற்றும் உயர்கல்வித் துறைகளில் கொவிட் - 19 ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள், கொள்கை வகுப்பாளர்கள் மத்தியில் அதீத கவனத்தை ஈர்த்துள்ளதோடு மாற்றீட்டுக் கல்வி முறைமை பற்றியும் சிந்திக்க வைத்துள்ளன.

இதன் பின்னணியிலேயே உலகளாவிய ரீதியில் தொலைதூரக் கல்விக்கான முக்கியத்துவம் உணரப்பட்டது. ஓவ்வொரு நாடுகளும் இலத்திரனியல் சாதனம் மற்றும் கணினி வலையமைப்புக்கான கட்டுமாண விஸ்தரிப்பு தொடர்பில் அதீத கவனத்தைச் செலுத்தியன. நிகழ்நிலை ஊடக வலையமைப்புகளும் புதிய செயலிகளும கற்றல், மற்றும் கற்பித்தல் செயற்பாட்டின் அடிப்படைக் கட்டமைப்பாக் ஆதிக்கம் செலுத்தலாயின.

பயில்நிலையிலுள்ள கல்விச் செயற்பாட்டிற்கான மூலாதாரம் இணையவழிக் கல்விதான் எனும் எண்ணக்கருவிற்கான விதை பெருந்தொற்றின் மிகப்பெரும் விளைவென்றே கூறலாம். இதனாலேயே உலகெங்கிலுமுள்ள கல்வியியலாளர்கள் மற்றும் மாணவர்கள் நிகழ்நிலை மற்றும் தொலைதூரக் கல்வி முறைமைக்கு ஊக்குவிக்கப்பட்டனர். குறிப்பாக உலக பல்கலைக்கழகங்கள் நிகழ்நிலைக் கல்விக்கான மூலோபாயங்களையும் புதிய கொள்கைகளையும் வகுத்துக் கல்விச் செயற்பாடுகளை முன்னெடுக்கத் தொடங்கியன.

எண்ணிம கற்றற் செயற்பாடுகளை மையப்படுத்திய துரித மாற்றமானது, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இலண்டன், ஜப்பான், ஐரோப்பா ,சீனா முதலான வளர்ச்சியடைந்த  நாட்டுப் பல்கலைக்கழகங்களை நோய்த் தொற்றின் ஆரம்பத்தில் சற்றுத் தடுமாற வைத்தாலும், பெரியளவிலான பாதிப்புக்களை அப்பல்கலைக்கழகங்களின் கற்றல் மற்றும் கற்பித்தற் செயற்பாடுகளில் ஏற்படுத்தியிருக்கவில்லை. அந்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் பயில் நிலையிலிருந்த இலத்திரனியல் ஊடக கல்வி முறைமை, தகவல்சார் வளங்கள், அதி உயர் இணைய வசதி மற்றும் மேம்படுத்தப்பட்ட கணினி வலையமைப்பு என்பன இச் சவால்களை எதிர்கொள்வதற்கான வல்லமையை அந்நாடுகளுக்கு வழங்கியிருந்தன. ஆசிய அபிவிருத்தி வங்கியின் அறிக்கையின்படி 2020 ஜூன் 1 ஆம் தேதி அளவில் சுமார் 90.3 வீதத்திற்கும் அதிகமான ஜப்பானியப் பல்கலைக்கழகங்கங்கள் தொலைதூரக்கல்வி மற்றும் நிகழ்நிலைக் கல்வியை வெற்றிகரமாக அமுல்படுத்தி சிறந்த பெறுபேற்றினைக் காட்டியிருந்தன. இதே போன்று ஏனைய வளர்முக நாடுகள் 88 வீதத்திற்கு அதிகமான நிகழ்நிலைக் கற்றலை வெற்றிகரமாக நிர்வகிக்கக்கூடிய வல்லமையை நிரூபித்திருந்தன. இலங்கைப் பல்கலைக்கழகங்களிலும் நிகழ்நிலைக் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் பொறிமுறைகள், தேசிய ரீதியிலும் பல்கலைக்கழக மட்டத்திலும் உருவாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயம் என்றே கூறலாம். இந்நிலையில் பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவிக்கும் நாடுகளின் பட்டியலில் இடம்பிடித்துள்ள இலங்கையின் உயர்கல்வித் துறைச் செயற்பாடுகள் மற்றும் சவால்கள் பற்றிய கருத்தாடல்கள் தற்போதுள்ள சூழலில் மிகவும் முக்கிய விடயமாகப் பார்க்கப்படுகின்றன.

கொவிட் பரவலின் பின்னர் இலங்கைப் பல்கலைக்கழகங்கள் பல்வேறுபட்ட யுக்திகளையும் பொறிமுறைகளையும் பயன்படுத்தி அவைகளின் இயலுமைக்கேற்றாற்போல் கற்றல் மற்றும் கற்பித்தற் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்கின்றன. ஆனாலும் அபிவிருத்தியடைந்து வரும் நாடு என்பதனடிப்படையில் இலங்கைக்கு இயல்பாகவேயுள்ள பொருளாதாரச் சுமை மற்றும் முறையற்ற நிதி முகாமைத்துவம் என்பன பல்வேறுபட்ட சவால்களை உருவாக்கியுள்ளன. எனினும் உயர் கல்வியமைச்சு மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு என்பவற்றால் தேசிய ரீதியாக உருவாக்கப்பட்டுள்ள கொள்கைகள், பல்கலைக்கழகங்களின் சுய நிதியீட்டற் செயற்;பாடுகள், சிறந்த தலைமைத்துவம் மற்றும் தந்திரோபாயங்கள் சாதகமான பலாபலன்களை தனிப்பட்ட பல்கலைக்கழகங்களின் கொவிட் கால கல்விச் செயற்பாடுகளில் உண்டுபண்ணியுள்ளமையும் கண்கூடு. இதை விட உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கிச் செயற்றிட்டங்களுடான உதவிகளும் கணிசமான பங்களிப்பினை நல்கியுள்ளன. இவ்வாறு சாதகமான நிலைமைகள் காணப்பட்டாலும் குறிப்பிடத்தக்க காரணிகளால் இலங்கைப் பல்கலைக்கழகங்கள் அதன் பயணத்தில் சற்றுத் தடுமாற்றத்தைக் கொண்டுள்ளன. குறிப்பாக வினைத்திறனற்ற திட்டமிடல்கள், வளப்பயன்பாட்டில் அதியுச்ச பயன் பெறப்படாமை, இடர்கால வள முன்னுரிமைப்படுத்தலில் உள்ள பலவீனம், மனிதவளப் பயன்பாட்டின் மீதான குறைபாடு, நவீன தொழிநுட்பமூடான கல்வி முகாமைத்துவத்தில் போதிய அனுபவமின்மை, மற்றும் நடைமுறைப் பிரச்சினைகளிற்கான தீர்வு முறைகளின்போதான பொருத்தப்பாடற்ற போக்கு முதலானவற்றைக் குறிப்பிடலாம். இவை தவிர இணையத் தள சேவை வழங்குனர்களின் இயலுமை, நிகழ்நிலைக் கற்றற் செயற்பாட்டுக் சாதனங்கள், இணைய வசதியைப் பயன்படுத்துவதில் மாணவர்களின் இயலுமை மற்றும் பொருளாதாரச் சூழல் என்பனவும் சவால்மிக்க காரணிகளாக பார்க்கப்படுகின்றன.

பெருந்தொற்றுச் சூழலில் இலங்கைப் பல்கலைக்கழகங்கள்

கொவிட் பரவலால் ஏற்பட்ட அசாதாரண சூழலைத் தொடர்ந்து, இலங்கை அரசாங்கம் 2020 மார்ச் 12 ஆம் தேதி நாட்டின் அனைத்துப் பல்கலைக்கழகங்களையும் மூடியதோடு கல்வி நடவடிக்கைகளையும் நிறுத்தியிருந்தது. அதனைத் தொடர்ந்து 2020 மார்ச் 20 அன்று நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவையும் அரசாங்கம் பிறப்பித்திருந்தது. இந்தக் காலகட்டத்தில், இலங்கையின் உயர்கல்வித் துறை பல்வேறு சவால்களை எதிர்கொண்டது. பதினைந்து தேசிய பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற உயர்கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டமையானது, மாணவர்களின் கற்பித்தல் மற்றும் கற்றல் நடவடிக்கைகளை பாதித்திருந்தது. பல்கலைக்கழக சேர்க்கை, மதிப்பீடு மற்றும் தேர்வு, பட்டமளிப்பு விழாக்கள், ஆட்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வு நடவடிக்கைகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டன. தொடர்ச்சியான ஊரடங்கு உத்தரவு காரணமாக உயர்கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களும் தங்கள் சம்பளம் மற்றும் பிற கொடுப்பனவுகளை சரியான நேரத்தில் பெறுவதில் கடுமையான சவால்களை எதிர்கொண்டனர்.

இந்தச் சூழ்நிலையில், அரசாங்கம் “வீட்டிலிருந்து வேலைசெய்தல்” என்ற மூலோபாயத்தை அறிவித்தது, இந்த நடவடிக்கை பல்கலைக்கழக ஆசிரியர்களையும் பிற ஊழியர்களையும் அவர்களின் வீடுகளிலிருந்து அவர்களின் கல்வி மற்றும் நிர்வாக பணிகளை மேற்கொள்ளக் கட்டாயப்படுத்தியது. பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் தங்கள் கல்வி மற்றும் பிற நிர்வாக நடவடிக்கைகளை தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் இணைய வசதிகளின் உதவியுடன் வீட்டிலிருந்தவாறே நடைமுறைப்படுத்தத் தொடங்கின. பாரம்பரிய கல்வி முறைமைக்குப் பதிலாக நிகழ்நிலைக் கல்வியை அறிமுகப்படுத்துவது இலங்கையின் உயர் கல்வித் துறையில் ஒரு பாரிய மாற்றமாகவே பார்க்கப்பட்டது. பாரம்பரிய முறைக்கே பழக்கப்பட்ட இலங்கை பல்கலைக்கழகங்களின் பெரும்பாலான கல்வியியலாளர்களுக்கு இந்த நிகழ்நிலைக் கல்வி சற்று சவாலானதாகவே இருந்தது. பாரம்பரிய கல்விமுறையை உடைத்து, புதுமையான நிகழ்நிலைச் சூழலில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வது கடினமான ஒன்றாக கருதப்பட்டது. பல பல்கலைக்கழகங்கள் நிகழ்நிலைக் கல்வி நடவடிக்கைகளைத் தொடங்கத் தயக்கம் காட்டியுள்ளன, மேலும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளும் தங்கள் கடமைகளை மேற்கொள்வதில் சிக்கல்களை எதிர்கொண்டனர். நவீன கருவிகள் மற்றும் தொழில்நுட்பத்தில் திறமை இல்லாத ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பிற ஊழியர்கள் பல சவால்களை எதிர்கொண்டிருந்தனர். இவ்வாறான சூழ்நிலையில்தான் நிகழ்நிலை ஊடகங்கள் மூலமாக கற்றல் கற்பித்தற் செயற்பாடுகளை தொடர்வதற்கான சுற்று நிரூபங்கள் அரசாங்கத்தினாலும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவாலும் வெளியிடப்பட்டன. குறிப்பாக ஜீம் (zoom) தொழிநுட்பமூடான கல்வி நடவடிக்கைகளிற்கான அங்கீகாரம் கிடைக்கப்பெற்றது. பல்கலைக்கழகங்களும் தங்கள் தொழிநுட்ப இயலுமை மற்றும் இணைய வசதிகளிற்கேற்ப நிகழ்நிலை மற்றும் தொலைதூரக் கல்வி முறைமைகள் மூலம் கற்றல் நடவடிக்கைகளை திட்டமிட்டன. ஆனாலும், பல்கலைக்கழகங்களில் கல்விகற்கும் மாணவர்களில் குறித்த எண்ணிக்கையானோர் கணினி மற்றும் இணைய வசதியின்மையால் பல இடர்பாடுகளை எதிர்நோக்கவேண்டியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. மேலும் நாட்டின் சில பிரதேசங்களில் தொடர் பிரச்சினையாய் இருந்துவரும் தடைப்பட்ட இணையச் சேவை மற்றும் குடும்பங்களின் நலிவுற்ற பொருளாதாரம் என்பன மாணவர்களின் நிகழ்நிலைக் கல்வியை உறுதிப்படுத்துவதில் பாரிய சவாலைத் தோற்றுவித்திருந்தது. இது பல்கலைக்கழக மட்டத்திலும் மாணவர்களுக்கான சமநிலைக் கல்வியை உறுதிப்படுத்துவதிலும் பெரும் சிக்கலைத் தோற்றுவித்திருந்தது.

நிகழ்நிலைக் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் விரிவுரையாளர்களுக்கும் மாணவர்களுக்கும் ஏற்படும் செலவைக் குறைக்க அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்தது. அதில் லங்கா கல்வி மற்றும் ஆராய்ச்சி வலையமைப்பின் (LEARN) சேவை மிகவும் முக்கியமானது. அதன் ஒருங்கிணைந்த ஜூம் செயலியைப் பயன்படுத்தி கல்வி நடவடிக்கைகளைத் தொடர அரசாங்கம் உதவியது. இதன்படி பல்கலைக்கழகங்களுடாக வழங்கப்படும் செயலி இணைப்பில் கற்றலை மேற்கொள்வோருக்கு சில வலைத்தள சேவை வழங்குநர்கள் இலவச நிகழ்நிலை அணுகலை வழங்கிக்கொண்டிருப்பது குறிப்பிடப்படவேண்டிய விடயம்.

ஏப்ரல் 2020 இறுதியில் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை அரசாங்கம் நீக்கியது (தி சியாசாத் டெய்லி, 2020). இதனையடுத்து, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடித்து ஜூலை 6 ஆம் தேதி பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க அனுமதித்தது. இருப்பினும், நிகழ்நிலைக் கல்வி தற்போது இலங்கை பல்கலைக்கழகங்களின் கல்விச் செயல்பாட்டின் குறிப்பிடத்தக்க பகுதியாக மாறியுள்ளது.

தேசத்திற்குத் தேவையான தொழிற்படை மற்றும் ஆக்கபூர்வமான ஆளணியினரை உருவாக்குவதில் பிரதான வகிபாகத்தைப் பல்கலைக்கழகங்கள் கொண்டுள்ளன. கொவிட் பாதிப்பினால் பின்நோக்கிச் செல்லும் பல்கலைக்கழகக் கல்வியும் ஆளணியினரை உருவாக்குவதில் ஏற்படப்போகும் தாமதங்களும் மனித வளம் சார்பாக குறிப்பிடத்தக் இடைவெளியினை உண்டாக்கக்கூடிய நிலைமை உணரப்பட்டுள்ளது. குறிப்பாக மருத்துவ சேவையில் ஏற்படப்பபோகும் குறிகியகால இடைவெளி இலங்கையின் சுகாதாரத் துறைக்கு மிகப்பெரும் சவாலானதாகவே இருக்கப்போகிறது. இதுபோன்று உற்பத்தித் துறை, கைத்தொழிற்துறையென அனைத்திலும் தொழிற்படை இடைவெளி பாரிய சவாலானதாகவே இருக்கப்போகின்றது. இணையவழிக் கல்வியினால் ஏற்பட்டுள்ள சமநிலையின்மை மனித வள உற்பத்தியின் மீதான செயற்திறனில் பெரும் பின்னடைவை வெளிக்காட்டுவதற்கான சந்தர்ப்பங்களும் உள்ளன.

இவ்வாறு பல அம்சங்களையும் காரணிகளையும் ஆராயத் தூண்டுவதற்கான ஒரு முயற்சியாக கட்டுரையாளர் இதனை சமர்பித்துள்ளார்.

கட்டுரைகள்

கல்வி என்பதற்குப் பொதுவான பல வரையறைகள் உள்ளன. எல்லா வரையறைகளும் பொதுவான ஒரு கருத்து, நடத்தையில் விரும்பத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்துவதுதான் கல்வி. கல்வி என்பது வெறும் அறிவு மட்டுமல்ல, பண்புகள்,...

ஜப்பானிய ஆரம்பக்கல்வி உலகப்புகழ் வாய்ந்தது; அதற்கு ஒரு காரணம் அந்நாட்டின் கல்வி முறையில் காணப்படும் சமத்துவ அம்சம். ஆற்றல்களின் அடிப்படையில் மாணவர்களைப் பிரித்து வைத்துக் கற்பிக்கும் முறைமை...

"வரலாற்றுச் செயற்பாடுகள் என்பன வெறும் சம்பவங்களல்ல. அவற்றுக்கு ஓர் உட்புறம், அதாவது ஒரு சிந்தனைப் புறம் உள்ளது." ஆர். சி. கொலிங்வூட்வரலாற்றியலறிஞர். பெரிதும் விவாதிக்கப்பட்டுள்ள இந்த மேற்கோள்...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் இலங்கையில் பொதுக் கல்வித் துறையில் மாணவர்களது கல்வி விருத்தியில் முக்கியமான செயற்பாட்டு அம்சம் கலைத்திட்ட அமுலாக்கம் ஆகும்.  கலைத்திட்ட அமுலாக்கமானது திட்டமிடப்பட்ட...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் ஆசிரியர் அறிமுகம் 21 ஆம் நூற்றாண்டின் சகாப்தம் பெரும்பாலும் ஒரு தொழில்நுட்ப சகாப்தமாககருதப்படுகிறது. தொழில்நுட்பம், இன்று மிக முக்கியமான பாத்திரத்தை வகிக்கிறது.எங்கள்...

 சண்முகலிங்கம் தேவமுகுந்தன் ஆசிரியர் "பனிப்போர் காலம் முடிவடைந்தது உலகம் ஒரு ஒழுங்கில் அமெரிக்கா தலைமையில் பயணிக்க ஆரம்பிக்கின்றது. இந்த ஏகாதிபத்தியம் தனக்கு விசுவாசம் உள்ள கல்விமுறையினை...

கல்வி தொடர்பான பல்வேறு வரைவிலக்கணங்களின் துணையுடன் கல்வியின் தன்மை* இயக்கத்தன்மை (dynamic)* வாழ்நாள் நீடித்த செயன்முறை * தொடர்ச்சியான செயன்முறை * வெவ்வேறு முறைகளில் பெறப்படுவது* காலத்துக்கு ஏற்ப /...

வாழ்க்கைமுறை

பதட்டம், பல்வேறு நிலைகளில் பல்வேறு விதங்களில் மனிதர்களைப் பாதிக்கிறது. பதட்டம் என்பது ஒரு மனநோயன்று.ஆனால், அதைத் தொடக்கத்திலேயே நாம் கிள்ளியெறிய மறந்தால் அது மனநோய்க்கு வித்தாகிவிடக்கூடும். எனவே...

கோபத்துக்குக் கொள்ளி வைப்போம்ஆனந்தத்தை அள்ளி வைப்போம் !” ‘கோபமாக இருக்கும் ஒவ்வொரு நிமிடமும், அறுபது வினாடி ஆனந்தத்தைத் தொலைத்து விடுகிறோம்’என்கிறார் ரால்ப் வால்டோ. ஆனந்தமும் கோபமும் எதிர் எதிர்...

இப்போதெல்லாம், தொழில்நுட்பம் குழந்தைகளின் வளர்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? ஆம், உண்மையில், தொழில்நுட்பம் இப்போதெல்லாம் எல்லா இடங்களிலும் ஆதிக்கம்...

சிவபாலன் இளங்கோவன், மனநல மருத்துவர் கல்வி மட்டுமல்ல; ஊட்டச்சத்துக் குறைபாட்டினாலும்கூடக் குழந்தைகள் இந்தக் காலத்தில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த இரண்டையும் கணக்கில்கொள்ளும்போது இந்தப்...

தடங்கள்

வி.அனோஜன் "நேரம் என்பது இவரது வாழ்வின் முக்கிய உயிர்நாடி. பாடசாலை என்றாலும் சரி ஆலயம் என்றாலும் சரி ஊரின் சமூகசேவை விடயங்கள் என்றாலும் சரி கடிகாரத்தின் முட்களை விட வேகமாகச்சுழன்று முன்வரிசையில்...

ச. தேவமுகுந்தன் ஆறுமுகம் சரஸ்வதி தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாக உதித்தவர் திருமுருகன். தாயும் தந்தையும் ஆசிரியர்கள் என்பதோடு சைவ பாரம்பரிய குடும்ப பின்னணியையும் கொண்டவர்கள், அன்பும் பண்பும்...

18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் – 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர்....

- மதுசூதனன் தெ. -  பத்தொன்பதாம் நூற்றாண்டிலே மகா வித்துவான்கள், புலவர்கள், கணக்காயர்கள், கவிராயர்கள் போன்றோர்கூடப் பழந்தமிழ் நூல்கள் பற்றிப் பெருமளவு அறியாமையில் மூழ்கிக் கிடந்தனர்....

சினிமா

சினிமா

பொறியியல் படிப்பை கஷ்டப்பட்டு முடித்த கார்த்திக்கிற்கு (ஹரீஷ் கல்யாண்) திருமணம் செய்துவைக்க பெற்றோர் முடிவெடுத்து, பெண் பார்க்கப் போகிறார்கள். ஆனால், தவறான வீட்டிற்குப் போய்விடுகிறார்கள்....

சினிமா

இந்த உலகம் இயங்குவதே பற்றுதலால் தான். ஏதோவொன்றின் மீது நாம் கொண்டிருக்கும் பற்றுதான் நம்மை, அதை நோக்கி இழுத்துச் செல்கிறது. பிடித்தோ பிடிக்காமலோ, எல்லாவற்றையும் மீறி நம்மை அதன்மீது பற்றி அழுந்தச்...

சினிமா

சினிமா என்பது பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி சமூகத்துக்குப் பல விஷயங்களைப் போதிக்கும் தளமாகவும் இருக்கிறது. அதனால் அடுத்த 18 நாட்களும் உலக அரங்கில் வெளிவந்த வைரஸ் தொற்று பற்றிய தரமான உலக சினிமாவைப்...

சினிமா

தங்கள் அடையாளத்தைத் தொலைக்க விரும்பாத ஐந்து இளம் சகோதரிகளின் இயலாமை நிறைந்த போராட்ட வாழ்வே ‘முஸ்டாங்க்’ (Mustang). 2015-ல் ஆஸ்கர் விருதுக்குத் தேர்வுசெய்யப்பட்ட இந்த துருக்கிய திரைப்படம் பெண்ணியத்...

ஆன்மீகம்

ரதிகலா புவனேந்திரன்நுண்கலைத்துறைகிழக்குப் பல்கலைகழகம்.   வந்தாரை வாழ வைக்கும் வன்னி மண்ணின் தலை சிறந்த ஊர்களில் முல்லைத்தீவும் ஆகும். இங்கு பழமையும், தொன்மையும் வாய்ந்த ஆலயங்களுள்...

குருந்தூர் மலையில் கிடைத்திருப்பதுஎண் பட்டைகளைக் கொண்ட அஷ்டதாராலிங்கம் ஆகும். காஞ்சி கைலாசநாதர்கோவிலிலும், திருவதிகை கோவிலிலும் கும்பகோணம் கூந்தூர் முருகன் கோவிலிலும் காணப்படுகிறது. இதன்...

உளவியல்

தன்னம்பிக்கைக்கும் கர்வத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம் நிறைய பேருக்குத் தெரிவதில்லை. இரண்டுக்கும் இடையே நூலிழை வித்தியாசம் தான் இருப்பது போலத் தோன்றினாலும் அவை தரும் விளைவுகளில் மலைக்கும்...

- கி.புண்ணியமூர்த்தி- பிள்ளைப்பருவத்துக்கும் முதிர்ச்சிப் பருவத்துக்கும் இடைப்பட்ட பருவமே கட்டிளமைப்பருவமாகும். இப்பருவத்தில் ஒருவர் பிள்ளையுமல்ல முதிர்ந்தவருமல்ல இப் பருவம். ஆண், பெண் இரு...

புத்தகங்கள்

நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை உருவாக்குவது மட்டும் அல்ல ஒரு பள்ளியின் கடமை. விளையாட்டு வீரனை, நல்ல படைப்பாளியை, நல்ல பேச்சாளனை, நல்ல கவிஞனை, நல்ல நடிகனை, நல்ல சமூகப் போராளியை, நல்ல தலைவனை...

- அலெக்ஸ் பரந்தாமன்- ஈழத்து எழுத்தாளர் மா.சிவசோதி அவர்களின் இரண்டாவது சிறுகதைத்தொகுப்பும் மூன்றாவது வெளியீடுமாக பொதுவெளிக்கு வந்துள்ளது. ஜீவநதி வெளியீடாக 104 பக்கங்களுடன், 350/= விலையைத் தாங்கி...

குழந்தை ம.சண்முகலிங்கம்  அரங்கியல் பற்றிய அறிவுத்தேடல் அவசியப்பட்டுக் கொண்டு செல்லும் இக்காலக்கட்டத்தில் ''அரங்கியல்" என்று தலைப்பிடப்பட்ட இத்தொகுப்பு முக்கியமானதொரு படைப்பாக அமையும் எனக்...

தமிழ்த்தத்துவங்கள்

1. போர் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல், அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத போர். —மா சே துங 2. துப்பாக்கியைக் கொண்டே உலகமுழுவதையும் திருத்தி அமைக்கலாம் என்று நம்மால் சொல்ல முடியும். போரைக் கொண்டே போரை...

 {youTube}/vQNdBDuis98{/youtube}1. இந்த உலகமே உன்னை திரும்பி பார்க்க வேண்டுமென்றால் நீ யாரையும் திரும்பி பார்க்காதே -  02. எதிர்பார்த்த போது கிடைக்காத வெற்றி எத்தனை முறை கிடைத்தாலும் அது...

X

Right Click

No right click