14 copy

ஆனந்தமயில் நித்திலவர்ணன்

சிரேஸ்ட விரிவுரையாளர்,
கல்வியியல் துறை,

 அறிமுகம்

நாட்டில் அறியாமையையும், வறுமையையும் ஒழிக்கக்கூடிய கருவி உண்டு என்றால் அதுதான் கல்வி, அந்தக்கல்விச்செல்வத்தை மாணவர்களுக்கு வழங்கும் பெருமை பெற்றவர்கள் ஆசிரியர்கள். பெற்றோருக்கு அடுத்தபடியாக, தம்மிடம் பயிலும் மாணவர்களிடம் அன்புகாட்டி, அரவணைத்து வழிகாட்டுவதன் மூலம் சிறந்த கல்வியை வழங்கி, சமுதாய வளர்ச்சிக்கு உதவுபவர்கள் ஆசிரியர்கள் ஆவர்.

வருடம் முழுவதும் எத்தனையோ விசேட நாட்கள் வருகின்றன. ஓவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக அதன் முக்கியத்துவத்தைப்பொறுத்து அனுசரிக்கப்படுகின்றன. ஆனால் வருங்கால தலைமுறையினராகிய மாணவர்கள், அந்த வருங்காலத்தை, தங்களுக்குள் நிர்மாணிப்பதில் பெரும்பங்கு வகிக்கும் ஆசிரியர்களுக்காக, அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு வைபவமாக கொண்டாடப்படுவது ஆசிரியர் தினமாகும்.

 

உலகளாவியரீதியில் ஆசிரியதினங்கள்

1994 ஆம் ஆண்டு முதல் உலகளாவியரீதியில் ஒவ்வோராண்டும் ஒக்ரோபர் மாதம் 5 ஆம் திகதி உலக ஆசிரியர் தினமாக ஆசிரியர் சங்கங்களால் பிரகடனப்படுத்தப்பட்டு கொண்டாடப்பட்டு வருகின்றது. இதன் நோக்கம் ஆசிரியர்களின் சேவைக்கு மதிப்பளித்தல் மற்றும் எதிர்கால தலைமுறை யினரின் தேவைப்பாடுகளை பூர்த்திசெய்ய ஆசிரியர்களின்பணி தொடர்ச் சியாக வழங்கப்படும் என்ற உறுதிமொழியை உலகிற்கு வழங்குவதுமாகும்.

நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் ஆசிரியர் தினம் வருடத்தின் வேறுபட்ட திகதிகளில் கொண்டாடப்படுகின்றது. இந்தியாவில் செப்ரெம்பர் ஐந்தாம் திகதியும், சீனாவில் செப்ரெம்பர் பத்தாம் திகதியும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகின்றது. அமெரிக்காவில் மேமாதம் முதல்வாரம் முழுவதும் தேசிய ஆசிரியர் வாரமாக கொண்டாடப்படு கின்றது. சில நாடுகளில் விடுமுறை நாளாகவும், ஏனைய நாடுகளில் வேலை நாளாகவும் உள்ளது.

 

இந்தியாவில் ஆசிரியர்தினம்

இந்தியாவின் இரண்டாவது ஜனாதிபதியான டொக்டர் சர்வபள்ளி இராதாகிருஸ்ணன் அவர்களின் பிறந்த தினமான செப்ரெம்பர் 5 ஆந்திகதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகின்றது. இவர் திருத்தணியில் ஓர் ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர். இருபது வயதிலேயே முதுகலைப்பட்டத் தில் ஆய்வுக்கட்டுரைகள் எழுதி அவரது ஆசிரியர்களின் பாராட்டைப் பெற்றவர். பின்னர் பல்வேறு கல்லூரிகளில் பேராசிரியராகவும், கல்லூரி முதல்வராகவும் பணியாற்றினார். தனது நண்பர்களும், மாணவர்களும் தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டும் என விரும்பியபோது, அந்நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடுமாறு வேண்டுகோள் விடுத்தார். அவரின் வேண்டு கோளுக்கிணங்க, 1962ஆம் ஆண்டு தொடக்கம் இந்தியாவில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டுவருகின்றது. சிறந்த கல்வியாளராகவும், மாணவர்களை உருவாக்குவதில் சிறந்த ஆசிரியராகவும் இருந்ததா லேயே இவரது பிறந்த தினம் இவ்வளவு மரியாதைக்குரியதாகின்றது.

 

இலங்கையில் ஆசிரியர்தினம்

இலங்கையில் ஒக்ரோபர் ஆறாந்திகதி, ஆசிரியப்பெருந்தகைகளின் அருமையை உலகத்துக்குப்புலப்படுத்தும் நோக்கில் ஆசிரியர்தினம் மிகுந்த எழுச்சியோடும் மகிழ்ச்சியோடும் கொண்டாடப்படுகிறது. ஆசிரியர் தினத்தில் பாடசாலைகள், முன்பள்ளிகள், மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள் கௌரவிக்கப்படுகின்றனர். மாணவர்கள் தமக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மலர்மாலையிட்டு, இனிப்புக்கள் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்கி ஆசீர்வாதம் பெற்றுக்கொள்கின்றனர். ஆண்டுதோறும் ஆசிரியர் தினத்தன்று இலங்கை முழுவதும் கல்வித்துறையில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்கள், அதிபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு கல்வி அமைச்சினால் "குரு பிரதீபா பிரபா” விருது வழங்கி கௌரவிக்கப்படுகின்றது.

 

ஆசிரியத்தொழிலின் மகிமை

பிறபணிகளில் இல்லாதது, ஆசிரியர் பணியில் இருக்கின்றது. மாதா, பிதா, குரு, தெய்வம் என்றுதான் சொல்கிறோம். மாதா, பிதா, டொக்டர், இஞ்சினியர் என்று சொல்வதில்லை. மனிதனை மனிதனைாக உருவாக்கும் சிற்பிகள் என்று ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகளைச் சொல்வதுண்டு. மனிதனை முதன்மைப்படுத்த உரமாக இருப்பவர்கள் ஆசிரியர்கள் என்றால் அது மிகையாகாது. மொத்தத்தில் இறந்த பின்னரும் மண்ணில் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் வரிசையில் ஆசிரியர்களுக்கு முதலிடமுண்டு என்பது ஓர் யதார்த்த உண்மை.

கருவறையில் இருந்து வெளிவரும் ஒரு குழந்தைக்கு தாய் உலகை அடையாளம் காட்டுகின்றாள். அந்த உலகைப்புரிந்து பண்பட்டவனாய் வாழும் கலையை ஆசிரியர்கள்தான் அந்தக்குழந்தைக்கு செவ்வனே கற்றுக்கொடுத்து மனிதனாக மாற்றும் வேலையைச்செய்கின்றார்கள். ஓவ்வொரு நாட்டின் எதிர்காலத்தலைவிதியும் அந்த நாட்டின் வகுப்பறைகளில்தான் எழுதப்படுகின்றது. உலகம் இன்றுவரை பல்துறைசார் அறிஞர்களைப்பெற்றுக்கொண்டிருக்கின்றதென்றால், அதற்கு காரணம் சிறந்த ஆசிரியர்கள்தான்.

ஒரு மனிதனை அவனுக்கே அடையாளம் காட்டுபவராக இருப்பதுதான் ஆசிரியரின் சிறப்புக்களில் மிகவும் பிரதானமாக உள்ளது. ஆசிரியர்களுடைய பணியின் மதிப்பு அளவிடப்பட முடியாதது. ஏனெனில், ஒரு மனிதனை மனிதனென்று அடையாளப் படுத்துவது, மிருகங்களை மீறிய சிறப்பு பண்புக்கூறுதான். அந்த சிறப்புப்பண்புக்கூறு சிறந்த கல்வியின் மூலமே கிடைக்கின்றது. அந்த சிறந்த கல்வியை அளிக்கும் மாபெரும் பணி ஆசிரியர்களை சார்ந்துள்ளது. ஏனெனில் ஆசிரியர்கள் உருவாக்கும் மாணவச் சமூகமானது, ஒரு நாட்டின் எதிர்காலத்தை மட்டுமல்ல, இந்த உலகின் எதிர்காலத்தையே தீர்மானிக்கின்றது. அனைத்து மக்களின் நல்வாழ்வும் அந்த சமூகத்தின் கைகளில்தான் உள்ளது. எனவே இந்த இடத்தில் ஆசிரியர் என்பவரின் பணியானது அனைத்தையும்விட உயர்ந்து நிற்கின்றது. “எங்கே நடப்படுகிறாயோ அங்கே மலராகு” என்ற பொன்மொழிக்கு எடுத்துக்காட்டாய் இருப்பவர்கள் ஆசிரியர்கள்தான்.

 தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவர்களை வாழ்க்கை என்றால் என்ன? இதில் மாணவசமுதாயத்தின் பங்கு எப்படியிருக்கவேண்டும் என்று ஒரு தெளிவை ஆசிரியர்கள்தான் கற்றுக்கொடுக்கின்றார்கள். ஏனைய தொழில்களைப்போன்று ஆசிரியப்பணி என்பது ஒருவரின் வாழ்வாதாரத்திற்கான பணி அல்ல. தனது வாழ்வையே ஆதாரமாக்கும்பணி. அந்தப்பணியில் வேண்டுமானால், வாழ்வை நகர்த்துவற்கான ஊதியம் கிடைக்கலாம். ஆனால் அந்த ஊதியத்திற்கான அந்தப்பணி அல்ல என்பதுதான் ஒரு சிறந்த ஆசிரியரின் தத்துவம். ஆசிரியர் பணி என்பது உயிரோட்டமான பணி. ஆய்வுரீதியான பணி, உளவியல்ரீதியான பணி, சேவைரீதியான பணி, அர்ப்பணிப்புள்ள பணி. காலநேரமற்ற பணி. ஒரு சிறந்த ஆசிரியர் வகுப்பறைக்குள் மட்டுமே ஆசிரியராக இருப்பதில்லை . இருக்கவும் முடியாது. அவர் தன் வாழ்வின் பெரும்பகுதி நேரங்கள் ஆசிரியராகவே இருக்கிறார். அவரின் சேவைக்கு எல்லை கிடையாது. மனித வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தி, அதற்கு அர்த்தத்தை கொடுக்கும் ஒரு கடமை ஆசிரியருக்கு உள்ளது. உலகில் உள்ள தொழில்களிலேயே, ஆசிரியர் பணியே அதிக திறமைகள் தேவைப் படும் பணி என்று சொல்லுமளவிற்கு அதன் பொறுப்புக்கள் அதிகம்.

 

வரலாற்றில் ஆசிரியர்- மாணவர் உறவு

இந்துப்பண்பாட்டில் ஒரு தினத்தை ஆசிரியர் தினமாக கொண்டாடுவது என்றில்லாமல், ஒவ்வொரு நாளுமே எந்த நல்லகாரியம் துவங்கும் போதும் குருவந்தனம் செய்வது வழக்கம். தெய்வத்திற்கு அடுத்தபடியாக ஆசிரியர்களை நினைத்து வணங்குவதே எமது பண்பாடாகும். பாரதப்பண்பாட்டில் பெரிய ஆளுமைகளாக இருந்த பலரும் ஆசிரியர்களாக இருந்திருக்கின்றார்கள். பகவான் ஸ்ரீ கிருஸ்ணரை உலகாசிரியன்(ஜகத்குரு) என்றே சொல்கின்றோம். ஆதிசங்கரர், ராமானுஜர் என்று பலரும் ஆசிரியர்களே. மன்னனான ஸ்ரீ கிருஸ்ணனும், பரம ஏழையான குசேலனும், ”சாந்தீபிநி” என்ற ஒரே குருவின் குருகுலத்தில் ஒன்றாக படித்திருக்கின்றார்கள்.

விவேகானந்தரை வெளிக்கொணர ஸ்ரீ இராமகிருஸ்ணர் என்ற குருவினாலேயே முடிந்தது. இது போன்ற பல்வேறு சிறந்த ஆசிரியர்களே இவ்வுலகிற்கு அடித்தளமாக அமைந்துள்ளனர். இந்திய முன்னாள் ஜனாதிபதி டொக்டர் அப்துல்கலாம் அவர்கள், தன் ஆசிரியர்கள் எவ்வாறு அவரை உருவாக்கினார்கள் என்று சிலாகித்துப்பேசுவார்.

அருச்சுணனுக்கு ஒரு துரோணாச்சாரியார் போல், கொள்ளை, கொலை தொழிலைச்செய்துவந்த திருடனை இராமாயணம் என்ற வரலாற்றுக்காவியத்தை படைக்கும் அளவிற்கு வால்மீகி உருவாக காரணமான நாரதரைப்போல், ஒவ்வொரு மாணவருக்கும் ஓர் ஆசிரியர் இன்றும் வாழ்வியல் ஆசானாக இருக்கத்தான் செய்கிறார்.

ஆசிரியர்-மாணவர் உறவு என்பது தாய்-மகன் உறவைப்போன்றது. ஒரு தாய் எப்படி தன் பிள்ளைகளின் வளர்ச்சியில் அக்கறை செலுத்துவாளோ, அதே போன்றதொரு அக்கறையையும் ஆசிரியர்கள் செலுத்தும் போதுதான் ஆசிரியர்-மாணவர் உறவுக்கு வலுச்சேர்க்கும்.

கற்றுக்கொடுப்பவரே "ஆசான்” எனப்படுகின்றார். என்னிடம் கல்வி பயின்ற மாணவன் இன்னவாக இருக்கின்றான் என்று ஆசிரியரும், நாம் வாழ்வின் எத்தனை உயரத்தில் இருந்தாலும் எமக்கு கற்றுக்கொடுத்த ஆசிரியரைக் கண்டதும் எல்லாம் துறந்து அவரைக் கண்ணியப்படுத்த முயலும் மாணவனும் கண்ணுக்குத்தெரியாத ஒரு கயிற்றால் கட்டுண்டுள்ளோம். சிறந்த ஆசிரியர்-மாணவர் உறவுக்கு பின்வரும் வரலாற்றுச்சம்பவம் எடுத்துக்காட்டாகும்.

ஒரு சமயம் அரிஸ்ரோட்டில் தம் மாணவர்களுடன் ஆற்றின் கரைக்கு வந்தார். மாணவர்களை கரையில் நிற்க வைத்தவர், நான் சென்று அதில் ஏதாவது சுழிகள் உள்ளனவா எனப்பார்த்து வருகிறேன் என்றார். அவர் ஆயத்தம் கொண்டசமயம் அவரின் ஒரு மாணவர் தண்ணீ ரில் நீந்திச்செல்வதை அவதானித்தார். மறுகரைவரை சென்று திரும்பிய மாணவர், குருவே ஆற்றில் சுழிகள் இல்லை . நாம் தைரியமாக ஆற்றைக்கடக்கலாம் என்றார். அந்நேரத்தில் அரிஸ்ரோட்டில் உன்னை சுழிகள் இழுத்துச்சென்றிருந்தால் என்னவாகி இருக்கும் என்றார். அதற்கு அந்த மாணவன் இவ்வாறு பதில் கூறினான். இந்த அலெக்சாண்டர் போனால் ஆயிரம் அலெக்சாண்டரை உருவாக்கும் வல்லமை கொண்டவர் நீங்கள். ஆனால் ஒரு அரிதான குருவை இழந்தால் நாங்கள் பரிதவித்துப்போவோம்” என்றார்.

 

தற்காலத்தில் ஆசிரியர் - மாணவர் உறவு

வகுப்பறைகள் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும். மாறாக இன்றைய வகுப்பறைகள் மாணவர் மீது அதிகாரத்தை செலுத்தும் இடமாக காட்சியளிக்கின்றது. அக்கறையற்ற தண்டனைகளால், அன்பு கலந்த கண்டிப்புக்கள் குறைந்து ஆசிரியர்களை மாணவர்கள் ஒரு எதிரியாக பாவிக்கக்கூடிய சூழல் வளர்ந்து வருகின்றது. இதனால் அந்த மாணவன் ஆசிரியரை மட்டும் வெறுக்காமல், அவர் சொல்லிக் கொடுக்கும் பாடத்தையும், பாடசாலையையும் வெறுக்கக்கூடிய சூழல்கள் அதிகரிக்கின்றது. மாணவர்களை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் காயப்படுத்தும் இடமாக வகுப்பறைகள் மாறிவிடுவது நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறது.

மறுபுறமாக, மாணவர்கள் ஆசிரியர்களை மிரட்டுவதும் நிகழ்கின்றது. பல நல்ல ஆசிரியர்கள் வெறுத்துப் போய் இந்த தொழிலைவிட்டு வேறு நல்லவேலைக்கு செல்லவிரும்புவதாகவே ஒரு கருத்துக்கணிப்பு கூறுகிறது. தற்கால கல்விப்பின்னடைவுகளுக்கும், விழுமியவீழ்ச்சிக்கும் ஆசிரியர்-மாணவர் உறவில் ஏற்பட்டுவரும் விரிசலும் ஒரு காரணமாகும்.

தமிழர் பண்பாட்டில் சிறந்த ஆசிரியர் - மாணவர் உறவு பேணப்பட்டு வந்துள்ளது. ஆதனால்தான எம்முன்னோர்கள் கல்வியில் சிறந்து விளங்கினர். அதைப்பின்பற்றி தற்கால மாணவர்சமூகமும் ஆசிரியர்களை மதிக்க வேண்டும்.

 

ஆசிரியர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள்

ஆசிரியர்கள் தங்களுடைய ஆசிரியப்பணியை மிகவும் தியாக உணர்வுடனும், பொறுப்புணர்வுடனும், கடமை உணர்வுடனும் செய்ய வேண்டும். மாறாக இன்றைய ஆசிரியர்களில் சிலர், சம்பளத்திற்கு வேலைபார்க்கும் தொழிலாகத்தான் கருதுகின்றனர்.

பாடத்திட்டத்தில் சில ஆசிரியர்களுக்கு ஆர்வமற்ற, ஆழுமையற்ற சூழல், கற்பித்தல் முறையில் தெளிவின்மை , சில ஆசிரியர்கள் குறிப்பிட்ட மாணவர்களுக்கு சொல்லிக்கொடுத்து, மந்தமான மாணவர்களை மட்டம் தட்டுவது, தன்னிடம் ரியூசன் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் நன்றாக சொல்லிக்கொடுப்பது, சீரற்ற பழக்க வழக்கங்களை மாணவர்கள் முன்பு செய்தல் போன்ற பொறுப்பற்ற நடவடிக்கைகளால் மாணவ சமுதாயம் ஒழுக்க நடவடிக்கைகளை மீறுபவர்களாக உள்ளனர்.

சமீப காலமாக ஊடகங்கள்வாயிலாக பார்க்கும்போது, ஒரு சில ஆசிரியர்களின் பாலுணர்வை தூண்டும் நடவடிக்கைகள் மாணவ சமுதாயத்திலும், பெற்றோர்கள் மத்தியிலும் ஒருவித அச்ச உணர்வுகளை ஏற்படுத்துவதாகவும், ஆசிரியர்கள் மீதுள்ள நன்மதிப்பை குறைக்கும் விதமாகவும் உள்ளது. தற்கால சமூகம் தாழ்ந்து போனதற்கு ஆசிரியர் சமூகத்தில் ஏற்பட்ட தாழ்வும் ஒரு காரணம் என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

இவ்வாறான ஒரு சிலரிடம் குறைகள் இருந்தாலும், சிறப்பான பணிபுரியும் ஆசிரிய சமூகத்திற்கு அனைவரும் மரியாதை செலுத்த வேண்டும். இன்றைக்கும் நேர்மையாக கல்விப்பணியைத் தொடர விரும்பும் ஆசிரியர்களுக்கு அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கவேண்டும். இன்னமும் பல இடங்களில் பெயர், முகம் வெளிப்படாமல், தமது பணியை முடிந்தவரை சிறப்பாக செய்து வரும் ஆசிரியர்களை நாம் பாராட்ட வேண்டும்.

 

தற்கால ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்

தற்காலத்தில் ஆசிரியர்கள் பல்வேறு சவால்களுக்கும் முகங்கொடுக்க வேண்டியிருக்கின்றது. ஆசிரியர்களின் பணிக்குரிய அங்கீகாரம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூகத்தால் வழங்கப்படுவதில்லை. மாணவர்களின் ஆசிரியர்களை மதிக்கும்திறன் குறைவடைந்து செல்கின்றது. அரசியலும், சமூகமும் ஆசிரியர் தொழிலில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி, நேர்மையும் அர்ப்பணிப்பும் கொண்ட ஆசிரியர்கள் சுதந்திரமாக செயற்படுவதை முடக்கி வருகின்றன. இலங்கையில் ஆசிரியப்பணிக்குரிய வேதனம் போதியதாக காணப்படவில்லை. மேலும் நிர்வாகரீதியான நெருக்கீடு களினாலும், முறையற்ற இடமாற்றங்களாலும் அதீத வேலைச்சுமையாலும் ஆசிரியர் பல்வேறு உடல், உளப்பாதிப்புக்க ளிற்கு உள்ளாகின்றனர்.

 

முன்னெடுக்கப்படவேண்டிய நல்ல செயற்பாடுகள்

கல்வியைக் கற்பிப்பது மட்டுமன்றி கொள்கைகள், மற்றையவர்களிடம் பழகும்விதம் உள்ளிட்ட விடயங்களையும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் போதிக்க வேண்டும். தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவனை நல்ல மாணவனாக ஆக்குவதோடு, நல்ல மனிதனாக மாற்றும் பொறுப்பும் ஆசிரியர்களுக்கு இருக்கின்றது. அதேபோல ஆசிரியர்கள் என்பவர்கள் மாணவசமூகத்தை உருவாக்குபவர்கள் அல்ல, மாறாக உயிரூட்டுபவர்கள். ஒரு சிறந்த ஆசிரியரின் பண்புகள், குணங்களை பார்க்கும் மாணவமாணவிகளின் மனதில் அப்படியே பதியும். அதனால் ஆசிரியர்கள் தங்களை மாணவர்களின் காலக்கண்ணாடி என்ற எண்ணத்தில்தான் பணியாற்ற வேண்டும். சிறந்த அர்ப்பணிப்பு உணர்வுடன், எந்த இலாபநோக்கமுமின்றி, பாடப்புத்தக அறிவு மட்டுமன்றி, பல்துறை பரந்த அறிவை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வழங்க வேண்டும்.

 

முடிவுரை

சிறப்பான பணிபுரியும் ஆசிரிய சமூகத்திற்கு அனைவரும் மரியாதை செலுத்த வேண்டும். என்றைக்கும் நேர்மையாக கல்விப்பணியைத் தொடரவிரும்பும் ஆசிரியர்களுக்கு அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கவேண்டும். இன்னமும் பல இடங்களில் பெயர், முகம் வெளிப்படாமல், தமது பணியை முடிந்தவரை சிறப்பாக செய்து வரும் ஆசிரியர்கள் பலர் இருக்கின்றார்கள். பல்வேறு சவால்கள், நெருக்கடிகளுக்கு மத்தியிலும் சிறப்பாகப்பணியாற்றும் ஆசிரியர்களைப் போற்றுவோம் வாழ்த்துவோம்.

 

கட்டுரைகள்

கல்வி என்பதற்குப் பொதுவான பல வரையறைகள் உள்ளன. எல்லா வரையறைகளும் பொதுவான ஒரு கருத்து, நடத்தையில் விரும்பத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்துவதுதான் கல்வி. கல்வி என்பது வெறும் அறிவு மட்டுமல்ல, பண்புகள்,...

ஜப்பானிய ஆரம்பக்கல்வி உலகப்புகழ் வாய்ந்தது; அதற்கு ஒரு காரணம் அந்நாட்டின் கல்வி முறையில் காணப்படும் சமத்துவ அம்சம். ஆற்றல்களின் அடிப்படையில் மாணவர்களைப் பிரித்து வைத்துக் கற்பிக்கும் முறைமை...

"வரலாற்றுச் செயற்பாடுகள் என்பன வெறும் சம்பவங்களல்ல. அவற்றுக்கு ஓர் உட்புறம், அதாவது ஒரு சிந்தனைப் புறம் உள்ளது." ஆர். சி. கொலிங்வூட்வரலாற்றியலறிஞர். பெரிதும் விவாதிக்கப்பட்டுள்ள இந்த மேற்கோள்...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் இலங்கையில் பொதுக் கல்வித் துறையில் மாணவர்களது கல்வி விருத்தியில் முக்கியமான செயற்பாட்டு அம்சம் கலைத்திட்ட அமுலாக்கம் ஆகும்.  கலைத்திட்ட அமுலாக்கமானது திட்டமிடப்பட்ட...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் ஆசிரியர் அறிமுகம் 21 ஆம் நூற்றாண்டின் சகாப்தம் பெரும்பாலும் ஒரு தொழில்நுட்ப சகாப்தமாககருதப்படுகிறது. தொழில்நுட்பம், இன்று மிக முக்கியமான பாத்திரத்தை வகிக்கிறது.எங்கள்...

 சண்முகலிங்கம் தேவமுகுந்தன் ஆசிரியர் "பனிப்போர் காலம் முடிவடைந்தது உலகம் ஒரு ஒழுங்கில் அமெரிக்கா தலைமையில் பயணிக்க ஆரம்பிக்கின்றது. இந்த ஏகாதிபத்தியம் தனக்கு விசுவாசம் உள்ள கல்விமுறையினை...

கல்வி தொடர்பான பல்வேறு வரைவிலக்கணங்களின் துணையுடன் கல்வியின் தன்மை* இயக்கத்தன்மை (dynamic)* வாழ்நாள் நீடித்த செயன்முறை * தொடர்ச்சியான செயன்முறை * வெவ்வேறு முறைகளில் பெறப்படுவது* காலத்துக்கு ஏற்ப /...

வாழ்க்கைமுறை

பதட்டம், பல்வேறு நிலைகளில் பல்வேறு விதங்களில் மனிதர்களைப் பாதிக்கிறது. பதட்டம் என்பது ஒரு மனநோயன்று.ஆனால், அதைத் தொடக்கத்திலேயே நாம் கிள்ளியெறிய மறந்தால் அது மனநோய்க்கு வித்தாகிவிடக்கூடும். எனவே...

கோபத்துக்குக் கொள்ளி வைப்போம்ஆனந்தத்தை அள்ளி வைப்போம் !” ‘கோபமாக இருக்கும் ஒவ்வொரு நிமிடமும், அறுபது வினாடி ஆனந்தத்தைத் தொலைத்து விடுகிறோம்’என்கிறார் ரால்ப் வால்டோ. ஆனந்தமும் கோபமும் எதிர் எதிர்...

இப்போதெல்லாம், தொழில்நுட்பம் குழந்தைகளின் வளர்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? ஆம், உண்மையில், தொழில்நுட்பம் இப்போதெல்லாம் எல்லா இடங்களிலும் ஆதிக்கம்...

சிவபாலன் இளங்கோவன், மனநல மருத்துவர் கல்வி மட்டுமல்ல; ஊட்டச்சத்துக் குறைபாட்டினாலும்கூடக் குழந்தைகள் இந்தக் காலத்தில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த இரண்டையும் கணக்கில்கொள்ளும்போது இந்தப்...

தடங்கள்

வி.அனோஜன் "நேரம் என்பது இவரது வாழ்வின் முக்கிய உயிர்நாடி. பாடசாலை என்றாலும் சரி ஆலயம் என்றாலும் சரி ஊரின் சமூகசேவை விடயங்கள் என்றாலும் சரி கடிகாரத்தின் முட்களை விட வேகமாகச்சுழன்று முன்வரிசையில்...

ச. தேவமுகுந்தன் ஆறுமுகம் சரஸ்வதி தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாக உதித்தவர் திருமுருகன். தாயும் தந்தையும் ஆசிரியர்கள் என்பதோடு சைவ பாரம்பரிய குடும்ப பின்னணியையும் கொண்டவர்கள், அன்பும் பண்பும்...

18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் – 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர்....

- மதுசூதனன் தெ. -  பத்தொன்பதாம் நூற்றாண்டிலே மகா வித்துவான்கள், புலவர்கள், கணக்காயர்கள், கவிராயர்கள் போன்றோர்கூடப் பழந்தமிழ் நூல்கள் பற்றிப் பெருமளவு அறியாமையில் மூழ்கிக் கிடந்தனர்....

சினிமா

சினிமா

பொறியியல் படிப்பை கஷ்டப்பட்டு முடித்த கார்த்திக்கிற்கு (ஹரீஷ் கல்யாண்) திருமணம் செய்துவைக்க பெற்றோர் முடிவெடுத்து, பெண் பார்க்கப் போகிறார்கள். ஆனால், தவறான வீட்டிற்குப் போய்விடுகிறார்கள்....

சினிமா

இந்த உலகம் இயங்குவதே பற்றுதலால் தான். ஏதோவொன்றின் மீது நாம் கொண்டிருக்கும் பற்றுதான் நம்மை, அதை நோக்கி இழுத்துச் செல்கிறது. பிடித்தோ பிடிக்காமலோ, எல்லாவற்றையும் மீறி நம்மை அதன்மீது பற்றி அழுந்தச்...

சினிமா

சினிமா என்பது பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி சமூகத்துக்குப் பல விஷயங்களைப் போதிக்கும் தளமாகவும் இருக்கிறது. அதனால் அடுத்த 18 நாட்களும் உலக அரங்கில் வெளிவந்த வைரஸ் தொற்று பற்றிய தரமான உலக சினிமாவைப்...

சினிமா

தங்கள் அடையாளத்தைத் தொலைக்க விரும்பாத ஐந்து இளம் சகோதரிகளின் இயலாமை நிறைந்த போராட்ட வாழ்வே ‘முஸ்டாங்க்’ (Mustang). 2015-ல் ஆஸ்கர் விருதுக்குத் தேர்வுசெய்யப்பட்ட இந்த துருக்கிய திரைப்படம் பெண்ணியத்...

ஆன்மீகம்

ரதிகலா புவனேந்திரன்நுண்கலைத்துறைகிழக்குப் பல்கலைகழகம்.   வந்தாரை வாழ வைக்கும் வன்னி மண்ணின் தலை சிறந்த ஊர்களில் முல்லைத்தீவும் ஆகும். இங்கு பழமையும், தொன்மையும் வாய்ந்த ஆலயங்களுள்...

குருந்தூர் மலையில் கிடைத்திருப்பதுஎண் பட்டைகளைக் கொண்ட அஷ்டதாராலிங்கம் ஆகும். காஞ்சி கைலாசநாதர்கோவிலிலும், திருவதிகை கோவிலிலும் கும்பகோணம் கூந்தூர் முருகன் கோவிலிலும் காணப்படுகிறது. இதன்...

உளவியல்

தன்னம்பிக்கைக்கும் கர்வத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம் நிறைய பேருக்குத் தெரிவதில்லை. இரண்டுக்கும் இடையே நூலிழை வித்தியாசம் தான் இருப்பது போலத் தோன்றினாலும் அவை தரும் விளைவுகளில் மலைக்கும்...

- கி.புண்ணியமூர்த்தி- பிள்ளைப்பருவத்துக்கும் முதிர்ச்சிப் பருவத்துக்கும் இடைப்பட்ட பருவமே கட்டிளமைப்பருவமாகும். இப்பருவத்தில் ஒருவர் பிள்ளையுமல்ல முதிர்ந்தவருமல்ல இப் பருவம். ஆண், பெண் இரு...

புத்தகங்கள்

நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை உருவாக்குவது மட்டும் அல்ல ஒரு பள்ளியின் கடமை. விளையாட்டு வீரனை, நல்ல படைப்பாளியை, நல்ல பேச்சாளனை, நல்ல கவிஞனை, நல்ல நடிகனை, நல்ல சமூகப் போராளியை, நல்ல தலைவனை...

- அலெக்ஸ் பரந்தாமன்- ஈழத்து எழுத்தாளர் மா.சிவசோதி அவர்களின் இரண்டாவது சிறுகதைத்தொகுப்பும் மூன்றாவது வெளியீடுமாக பொதுவெளிக்கு வந்துள்ளது. ஜீவநதி வெளியீடாக 104 பக்கங்களுடன், 350/= விலையைத் தாங்கி...

குழந்தை ம.சண்முகலிங்கம்  அரங்கியல் பற்றிய அறிவுத்தேடல் அவசியப்பட்டுக் கொண்டு செல்லும் இக்காலக்கட்டத்தில் ''அரங்கியல்" என்று தலைப்பிடப்பட்ட இத்தொகுப்பு முக்கியமானதொரு படைப்பாக அமையும் எனக்...

தமிழ்த்தத்துவங்கள்

1. போர் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல், அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத போர். —மா சே துங 2. துப்பாக்கியைக் கொண்டே உலகமுழுவதையும் திருத்தி அமைக்கலாம் என்று நம்மால் சொல்ல முடியும். போரைக் கொண்டே போரை...

 {youTube}/vQNdBDuis98{/youtube}1. இந்த உலகமே உன்னை திரும்பி பார்க்க வேண்டுமென்றால் நீ யாரையும் திரும்பி பார்க்காதே -  02. எதிர்பார்த்த போது கிடைக்காத வெற்றி எத்தனை முறை கிடைத்தாலும் அது...

X

Right Click

No right click