கொரோனா வைரஸின் முள் போன்ற புரோட்டீன் பகுதியைக் கட்டுப்படுத்தி செயலிழக்க செய்யும் மூலக்கூறு ஒன்றை கண்டுபிடித்து இளம் விஞ்ஞானி போட்டியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த டீன் ஏஜ் இளம்பெண் வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்காவில் ஆண்டுதோறும் '3எம் இளம் விஞ்ஞானி' போட்டி நடைபெறுகிறது. இதில் நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்கள் கண்டுபிடிப்புகளை சமர்ப்பிக்கின்றனர்.

அந்த வகையில் இந்த ஆண்டு நடந்த இளம் விஞ்ஞானி போட்டியிலும் ஏராளமானோர் பங்கேற்றனர். அவர்களில் டெக்சாஸ் பகுதியைச் சேர்ந்த இந்திய வம்சாவளியான அனிகா செப்ராலு போட்டியில் வென்று 25 ஆயிரம் டாலர் (ரூ.18.30 லட்சம்) பரிசுத் தொகை பெற்றுள்ளார். கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், சார்ஸ் -கோவிட்-2 வைரஸின் ஸ்பைக் புரதத்தை கட்டுப்படுத்துவதற்கான மூலக்கூறை உருவாக்குவதற்கு 'இன்-சிலிகோ' முறையைப் பயன்படுத்தி மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி முறையை உருவாக்கி, இந்தப் பரிசை வென்றுள்ளார்.

இதுகுறித்து அந்த நிறுவன வலைத்தளத்தில் வெளியிட்ட தகவலில் 'கடந்த ஆண்டு கடுமையான வைரஸ் காய்ச்சலால் அனிகா பாதிக்கப்பட்டார். அந்த தாக்கம் காரணமாக, வைரஸ் காய்ச்சலுக்கான வலுவான மருந்தை கண்டுபிடிக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் எழுந்துள்ளது. ஆனால், கொரோனா பாதிப்பு, அவருடைய எண்ணத்தில் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது' என்று குறிப்பிட்டுள்ளனர்.

'அமெரிக்காவின் சிறந்த இளம் விஞ்ஞானியாக தேர்வு செய்யப்பட்டதில் மகிழ்ச்சியளிக்கிறது. '3எம்' அறிவியல் ஆராய்ச்சியாளா–்களிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள விரும்புகிறேன். அவர்களின் உதவி மூலம், எனது கண்டுபிடிப்பை மேலும் மேம்படுத்த முடியும் என்று நம்புகிறேன். கொரோனா பாதிப்பை குணப்படுத்த வலுவான மருந்தை கண்டுபிடித்து, நோய்த் தொற்று பரவல் மற்றும் உயிரிழப்பை கட்டுப்படுத்த போராடி வரும் விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு உதவுவதுதான் எனது அடுத்த இலக்கு' என்று அனிகா கூறியுள்ளார்.

இந்த ஆண்டுக்கான '3எம்' இளம் விஞ்ஞானிகள் போட்டியில் வெற்றிபெற்ற 10 பேரில் ஒருவராக அனிகா செப்ராலுக்கு பரிசுத் தொகையுடன், '3எம்' ஆராய்ச்சியாளர்களின் கல்வி வழிகாட்டுதலைப் பெறும் சலுகையும்  வழங்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸின் மேல்பகுதியில் முள் போன்ற அமைப்பு காணப்படுகிறது. இது புரதத்தால் ஆனது. சோப்பு போட்டு கை கழுவும் போது, வைரஸின் மேல் பகுதியில் இருக்கும் முள் போன்ற இந்த புரத பகுதி சிதைந்து விடும். வைரஸின் மேல் பகுதியில் இருக்கும் முள் மூலம்தான் நமது உடலுக்குள் நுழைகிறது. பின்னர் பெருகி தொற்று நோயாக மாறுகிறது.

இதைத் தடுக்க உலக நாடுகள் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், இந்த முள் போன்ற புரதத்துடன் பிணைந்து வைரஸ் தொற்று ஏற்படாமல் தடுக்கும் மூலக்கூறு ஒன்றைதான் பள்ளியில் 8-வது கிரேடு மாணவியான அனிகா கண்டுபிடித்துள்ளார். இந்த மூலக்கூறை செலுத்தும் போது, வைரஸின் மேல் பகுதியில் உள்ள முள் போன்ற அந்த அமைப்புடன் பிணைந்து ஒன்றாகி விடும். அத்துடன் வைரஸின் புரத பகுதியை செயல்பட விடாமல் முடக்கி விடும்.

கொரோனா வைரஸைத் தடுக்க சக்தி வாய்ந்த நேரடி தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதற்கு பதில், வைரஸுடன் மூலக்கூறு எவ்வாறு, எங்கு பிணைக்கப்படும் என்பதை அடையாளம் காண பல கணினி நிரல்களைப் பயன்படுத்தி உள்ளார் அனிகா. இதற்கான மருந்துக்கு எந்த மூலக்கூறு சரியாக இருக்கும் என்பதை கண்டறிய, சிலிகா மெதடாலஜி முறையை அனிகா பயன்படுத்தி உள்ளார். இதன்மூலம் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்க இந்த மூலக்கூறு பெரிதும் உதவும் என்று கூறுகின்றனர். இந்த மூலக்கூறுகளை வைத்து பரிசோதனை செய்யப்பட்டதா என்ற விவரம் வெளியாகவில்லை.
 
 
 
 

கட்டுரைகள்

சிகிரியா ஒரு பழங்கால மலை பாழடைந்த கோட்டையாகும், இது ஒரு அரண்மனையின் எச்சங்களுடன் அமைந்துள்ளது மத்திய பகுதிஇலங்கையில் மாத்தளை. இந்த அற்புதமான கல் கோட்டை தோட்டங்கள், குளங்கள் மற்றும் பிற...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் நுண் அறிவு என்பது புரிந்து கொள்ளும் திறன், தொடர்பு கொள்ளும்திறன், கருத்தியல் சிந்தனை திறன் போன்ற திறன்களின் தொகுப்பாகும். நுண் அறிவின் அளவை உளவியல் வல்லுனர்கள் நுண் அறிவு...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் "ஆக்கம், விரிசிந்தனை, தற்துணிவு, தீர்மானம் எடுத்தல், பிரச்சினை விடுவி;த்தல், நுணுக்கம் மற்றும் பகுப்பாய்வு சிந்தனை, அணியினராக வேலை செய்தல், தனியாள் இடைவினைத் தொடர்புகள்,...

கல்வி என்பதற்குப் பொதுவான பல வரையறைகள் உள்ளன. எல்லா வரையறைகளும் பொதுவான ஒரு கருத்து, நடத்தையில் விரும்பத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்துவதுதான் கல்வி. கல்வி என்பது வெறும் அறிவு மட்டுமல்ல, பண்புகள்,...

ஜப்பானிய ஆரம்பக்கல்வி உலகப்புகழ் வாய்ந்தது; அதற்கு ஒரு காரணம் அந்நாட்டின் கல்வி முறையில் காணப்படும் சமத்துவ அம்சம். ஆற்றல்களின் அடிப்படையில் மாணவர்களைப் பிரித்து வைத்துக் கற்பிக்கும் முறைமை...

"வரலாற்றுச் செயற்பாடுகள் என்பன வெறும் சம்பவங்களல்ல. அவற்றுக்கு ஓர் உட்புறம், அதாவது ஒரு சிந்தனைப் புறம் உள்ளது." ஆர். சி. கொலிங்வூட்வரலாற்றியலறிஞர். பெரிதும் விவாதிக்கப்பட்டுள்ள இந்த மேற்கோள்...

- கார்த்திகேசு சிவத்தம்பி -  யாழ்ப்பாணத்தின் பண்பாட்டு அமிசங்களில் கண்டதுண்டு, கேட்டதில்லை" யாகவுள்ளனவற்றுள் ஒன்று, யாழ்பாணச் சமூகத்தின் யதார்த்தபூர்வமான சித்திரிப்பு ஆகும். நம் கண்முன்னே...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் இலங்கையில் பொதுக் கல்வித் துறையில் மாணவர்களது கல்வி விருத்தியில் முக்கியமான செயற்பாட்டு அம்சம் கலைத்திட்ட அமுலாக்கம் ஆகும்.  கலைத்திட்ட அமுலாக்கமானது திட்டமிடப்பட்ட...

வாழ்க்கைமுறை

ஒரு கிலோ பசும் சாணத்தில் இருந்து ஒரு கன அடி சாண எரிவாயு உற்பத்தி செய்யலாம். ** ஒரு மாடு தினசரி 10 கிலோ சாணம் இடும் எனில் , 10 மாடுகள் இடும் சாணம்,...

-தமிழ்- " நீங்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் காரணமாக உங்கள் மீதும் கரி பூசப்படலாம்; நீங்கள் கீழே போட்டு மிதிக்கப்படலாம் அல்லது அடித்து நொறுக்கப்படலாம். இந்த மாதிரியான நிலைமைகளில் நீங்கள் உங்களைப்...

- தமிழ் - "சம்பளம் உங்களுக்கு உதவலாம். ஆனால் இலாபம் உங்களுக்கு உயர்ந்த அதிர்ஷ்டம் நல்கும்" சீனாவின் பெரிய செல்வந்தர் ஜாக் மா வின் கூற்றின்படி குரங்கிற்கு முன்பாக பணத்தையும் வாழைப்பழத்தையும்...

பதட்டம், பல்வேறு நிலைகளில் பல்வேறு விதங்களில் மனிதர்களைப் பாதிக்கிறது. பதட்டம் என்பது ஒரு மனநோயன்று.ஆனால், அதைத் தொடக்கத்திலேயே நாம் கிள்ளியெறிய மறந்தால் அது மனநோய்க்கு வித்தாகிவிடக்கூடும். எனவே...

தடங்கள்

வி.அனோஜன் "நேரம் என்பது இவரது வாழ்வின் முக்கிய உயிர்நாடி. பாடசாலை என்றாலும் சரி ஆலயம் என்றாலும் சரி ஊரின் சமூகசேவை விடயங்கள் என்றாலும் சரி கடிகாரத்தின் முட்களை விட வேகமாகச்சுழன்று முன்வரிசையில்...

ச. தேவமுகுந்தன் ஆறுமுகம் சரஸ்வதி தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாக உதித்தவர் திருமுருகன். தாயும் தந்தையும் ஆசிரியர்கள் என்பதோடு சைவ பாரம்பரிய குடும்ப பின்னணியையும் கொண்டவர்கள், அன்பும் பண்பும்...

18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் – 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர்....

- மதுசூதனன் தெ. -  பத்தொன்பதாம் நூற்றாண்டிலே மகா வித்துவான்கள், புலவர்கள், கணக்காயர்கள், கவிராயர்கள் போன்றோர்கூடப் பழந்தமிழ் நூல்கள் பற்றிப் பெருமளவு அறியாமையில் மூழ்கிக் கிடந்தனர்....

சினிமா

சினிமா

ஐம்பது வயது நந்து (பார்த்திபன்) ஒரு சினிமா ஃபைனான்சியர். அவரிடம் வட்டிக்குப் பணம் வாங்கி படமெடுத்த இயக்குநர், அதைத் திருப்பிக் கொடுக்க முடியாததால் மனைவியுடன் தற்கொலை செய்துகொள்கிறார். அந்த மரணம்,...

சினிமா

பொறியியல் படிப்பை கஷ்டப்பட்டு முடித்த கார்த்திக்கிற்கு (ஹரீஷ் கல்யாண்) திருமணம் செய்துவைக்க பெற்றோர் முடிவெடுத்து, பெண் பார்க்கப் போகிறார்கள். ஆனால், தவறான வீட்டிற்குப் போய்விடுகிறார்கள்....

சினிமா

இந்த உலகம் இயங்குவதே பற்றுதலால் தான். ஏதோவொன்றின் மீது நாம் கொண்டிருக்கும் பற்றுதான் நம்மை, அதை நோக்கி இழுத்துச் செல்கிறது. பிடித்தோ பிடிக்காமலோ, எல்லாவற்றையும் மீறி நம்மை அதன்மீது பற்றி அழுந்தச்...

சினிமா

சினிமா என்பது பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி சமூகத்துக்குப் பல விஷயங்களைப் போதிக்கும் தளமாகவும் இருக்கிறது. அதனால் அடுத்த 18 நாட்களும் உலக அரங்கில் வெளிவந்த வைரஸ் தொற்று பற்றிய தரமான உலக சினிமாவைப்...

ஆன்மீகம்

நயினா தீவு நாகபூசணி அம்மன் கோயில் இலங்கை, யாழ்ப்பாண மாவட்டத்தில், நயினா தீவில் உள்ள ஒரு புகழ் பெற்ற இந்து கோயில் ஆகும். நயினாதீவு பல்வேறு வகையிலும் சிறப்புப்பெற்ற தீவாகக் காணப்படுகின்றது....

உளவியல்

சபா.ஜெயராசா ஓய்வுநிலை பேராசிரியர் சீர்மியம் அல்லது உளவளத்துணை என்பதை மேலைத்தேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட செயல்வவமாக காட்டும் முயற்சியைப் பல்கலைக்கழகங்களில் உள்ளவர்களும், தொண்டு...

சபா.ஜெயராசா ஓய்வுநிலை பேராசிரியர் உளவியல் என்பது வரலாற்று வளர்ச்சியுடனும் பண்பாட்டு இறுக்கங்களுடனும் கட்டுமை (CONSTRUCT) செய்யப்பட்ட வடிவமாக உள்ளது. அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு அனுசரணையான பிரயோக...

புத்தகங்கள்

நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை உருவாக்குவது மட்டும் அல்ல ஒரு பள்ளியின் கடமை. விளையாட்டு வீரனை, நல்ல படைப்பாளியை, நல்ல பேச்சாளனை, நல்ல கவிஞனை, நல்ல நடிகனை, நல்ல சமூகப் போராளியை, நல்ல தலைவனை...

- அலெக்ஸ் பரந்தாமன்- ஈழத்து எழுத்தாளர் மா.சிவசோதி அவர்களின் இரண்டாவது சிறுகதைத்தொகுப்பும் மூன்றாவது வெளியீடுமாக பொதுவெளிக்கு வந்துள்ளது. ஜீவநதி வெளியீடாக 104 பக்கங்களுடன், 350/= விலையைத் தாங்கி...

குழந்தை ம.சண்முகலிங்கம்  அரங்கியல் பற்றிய அறிவுத்தேடல் அவசியப்பட்டுக் கொண்டு செல்லும் இக்காலக்கட்டத்தில் ''அரங்கியல்" என்று தலைப்பிடப்பட்ட இத்தொகுப்பு முக்கியமானதொரு படைப்பாக அமையும் எனக்...

தமிழ்த்தத்துவங்கள்

{youTube}/1qJxh6BaI74{/youtube}நான் பணக்கார அப்பாவின் பிள்ளை அல்ல. படிப்பிலும் அவ்வளவு சுட்டி இல்லை. மூன்றுமுறை பல்கலைக்கழக தேர்வில் தோல்வி அடைந்திருக்கிறேன். 10 முறை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சேர...

1. போர் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல், அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத போர். —மா சே துங 2. துப்பாக்கியைக் கொண்டே உலகமுழுவதையும் திருத்தி அமைக்கலாம் என்று நம்மால் சொல்ல முடியும். போரைக் கொண்டே போரை...

X

Right Click

No right click