ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்குமாறு அப்பலோ மருத்துவமனைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதற்கிடையில் ஆறுமுகசாமி ஆணைய விசாணைக்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பலோ மருத்துவமனை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அப்பலோ மருத்துவமனை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் மனுவுக்கு ஒரு வாரத்துக்குள் பதில் தாக்கல் செய்ய அப்பலோ மருத்துமனைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனர். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் 2017இல் விசாரணை அணையம் அமைக்கப்பட்டது. விசாரணையை முடிக்க மூன்று மாதம் அவகாசம் வழங்கப்பட்டது. விசாரணை முடியாததால் இதுவரை எட்டு முறை ஆணையத்தின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது.